உண்மை சரிபார்ப்பு: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடியின் மகள் இறந்ததாகக் கூறும் வைரல் பதிவு தவறானது

இந்த வைரல் பதிவு தவறானது. அஃப்ரிடியின் மகள் பற்றிய இதுபோன்ற வதந்திகள் 2016 ஆம் ஆண்டு முதலே சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன என்று கூறி பாகிஸ்தான் பத்திரிகை மையத்தின் இயக்குனர் இந்த கூற்றுக்களை மறுத்துள்ளார்.

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடியின் மகள் இரத்த புற்றுநோயால் இறந்துவிட்டதாக, இரண்டு புகைப்படங்களின் படத்தொகுப்பு இடம்பெற்றுள்ள ஒரு வைரல் பதிவு கூறுகிறது.

இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த கூற்று தவறானது என்று தெரியவந்தது. 2016 ஆம் ஆண்டு முதலே இந்த பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக இருப்பதாகக் கூறி பாகிஸ்தான் பத்திரிகை மையத்தின் இயக்குநர் இந்த கூற்றினை மறுத்துள்ளார்.

கூற்று

ரோஜா இதழ்கள் தூவப்பட்டு, வெள்ளை நிற துணியால் மூடப்பட்டிருக்கும் ஒரு சடலத்தின் புகைப்படத்தையும், உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் அருகில் ஷாஹித் அப்ரிடி நிற்கும் ஒரு புகைப்படத்தையும் கொண்டுள்ள ஒரு படத்தொகுப்பை பதிவேற்றி, பேஸ்புக் பயனர் கவிதன் வரதன், “புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் அஃப்ரிடியின் மகள் இரத்தப் புற்றுநோயால் மரணம்..ஆழ்ந்த இரங்கல்..,” என்று எழுதியுள்ளார்.
இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பெயர் பெற்ற முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, 398 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8064 ரன்களையும், 99 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 1416 ரன்களையும் குவித்துள்ளார். பாகிஸ்தானின் புகழ்பெற்ற வீரரும், லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) காலி கிளாடியேட்டர்ஸ் அணியின் கேப்டனுமான அஃப்ரிடி, கடந்த டிசம்பர் 2 அன்று ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார். அதில், “துரதிர்ஷ்டவசமாக நான் வீடு திரும்ப வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலை சரிசெய்யப்பட்ட உடனேயே எல்பிஎல்லில் எனது அணிக்கு நான் திரும்புவேன்,” என்று கூறப்பட்டுள்ளது.

LPL இருந்து அஃப்ரிடி வெளியேறியதே அவரைப் பற்றிய மிகச் சமீபத்திய செய்தி என்றாலும், அவருடைய மகள் பற்றிய செய்திகளை நாங்கள் தேடியதில், இந்த வைரல் கூற்றை உறுதிப்படுத்தும் எந்த உண்மையான அறிக்கையையும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.

கூகுள் தலைகீழ் பட தேடல் கருவியைப் பயன்படுத்தி இந்த வைரல் புகைப்படங்களைத் தேடியதில், அவற்றை பேஸ்புக் பக்கமான பிரஸ் 9 நியூஸின் ஒரு போலி செய்தி எச்சரிக்கை இடுகையில் கண்டறிந்தோம்.

26 ஏப்ரல் 2016 அன்று பதிவேற்றப்பட்ட இந்த செய்தியில் “ஷாஹித் அஃப்ரிடியின் மகள் அஸ்மாரா கடந்த மாதம் பல் அறுவை சிகிச்சை செய்துகொண்டார், அவரோடு தான் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை ஷாஹித் வெளியிட்டுள்ளார்… அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது,” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த கூற்றினை சரிபார்க்க நாங்கள் பாகிஸ்தான் பத்திரிகை மையத்தின் இயக்குநர் கமல் சித்திக்கை தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடத்தில் பேசிய அவர், “இந்த வைரல் கூற்று தவறானது. இது 2016 ஆம் ஆண்டிலும் இது ஒரு பெரிய வதந்தியாக இருந்தது, ஆனால் அதுவும் தவறானது தான்,” என்று கூறினார்.

இது தவிர, ஜியோ நியூஸில் வெளிவந்த ஒரு கட்டுரையிலும், ஷாஹித் அஃப்ரிடி தனது மகளின் உடல்நிலை குறித்த தவறான கூற்றுக்களை மறுத்துள்ளதை நம்மால் காண முடிந்தது.

இந்த வைரல் பதிவைப் பகிர்ந்த பேஸ்புக் பயனரான கவிதன் வரதனின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் குவைத்தை சேர்ந்தவர் என்பதும், ஜூன் 2014 முதல் அவர் பேஸ்புக்கில் செயல்பட்டு வருவதும் எங்களுக்குத் தெரியவந்துள்ளது.

निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. அஃப்ரிடியின் மகள் பற்றிய இதுபோன்ற வதந்திகள் 2016 ஆம் ஆண்டு முதலே சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன என்று கூறி பாகிஸ்தான் பத்திரிகை மையத்தின் இயக்குனர் இந்த கூற்றுக்களை மறுத்துள்ளார்.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்