விஸ்வாஸ் நியூஸ் விசாரணையில், இந்த கூற்று தவறானது என்பது தெரியவந்துள்ளது. இந்தப் புகைப்படம் 2018 ஃபிஃபா உலகக் கோப்பையில் பிரான்சின் வெற்றியை மக்கள் கொண்டாடுவதைக் காட்டுகிறது, இது கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல.
புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு புகைப்படம் தெருவில் மக்கள் பலர் இருப்பதைக் காட்டுகிறது. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிராக சமீபத்தில் பாரிஸில் நடந்த போராட்டத்தின் புகைப்படம் இது என்ற கூற்றுடன் இந்த இடுகை பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், இந்தக் கூற்று தவறானது என்பது தெரியவந்தது. 2018 ஃபிஃபா உலகக் கோப்பையில் பிரான்ஸ் வெற்றிபெற்றதைக் மக்கள் கொண்டாடும் புகைப்படமே இதுவாகும்.
கூற்று
நூற்றுக்கணக்கான மக்கள் திரளாக இருப்பதைக் காட்டும் புகைப்படத்துடன் கூடிய கூற்று, “யாரோ இந்த போராட்டத்தின் புகைப்படத்தை நேற்றிரவு வெளியிட்டார்கள்! பேஸ்புக் இதனை நீக்கிவிட்டது.. இதோ மீண்டும் பதிவிடப்படுகிறது..! ஃபிரான்ஸ் இப்போது எழுந்து நிற்கிறது..!! பணக்காரர்களின் ஆதிக்கம் இனி இல்லை..! மேலும் போலி கோவிட் கட்டுப்பாடுகள் இல்லை..!! அதிக பணம் / நிதிக் கட்டுப்பாடுகள் இல்லை..!! சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் !!! ” என்று கூறுகிறது.
இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இது குறித்து விசாரிக்க, நாங்கள் கூகுள் பின்னோக்கிய படக் கருவியைப் பயன்படுத்தி, இந்த புகைப்படத்தைத் தேடியதில், அந்தப் புகைப்படத்தை afpforum.com என்ற வலைதளத்தில் கண்டறிந்தோம். இந்த வலைத்தளத்தில், “இந்த புகைப்படம் ஜூலை 15, 2018 அன்று ஆர்க் ஆஃப் ட்ரையம்ப் (ஆர்க் டி ட்ரையம்ப்) க்கு மேலே இருந்து எடுக்கப்பட்டது, அங்கு மக்கள் கையில் டார்ச்ச்களை வைத்திருப்பதை நம்மால் காண முடிகிறது. 2018 கால்பந்து உலகக் கோப்பையை பிரான்ஸ் வென்றபோது படம் எடுக்கப்பட்டது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர்த்து, வேறு சில செய்தி அறிக்கைகளிலும் இந்தப் புகைப்படத்தை நம்மால் காண முடிந்தது. அந்த செய்தி அறிக்கைகளின்படி, 2018 உலகக் கோப்பை வெற்றியை மக்கள் கொண்டாடுவதை இந்தப் புகைப்படம் காட்டுகிறது.
இதனை உறுதிப்படுத்த AFP இன் புகைப்பட நிருபர் லுடோவிக் மரைனை நாங்கள் ட்விட்டரில் தொடர்பு கொண்டு பேசினோம். இது குறித்து அவர் கூறுகையில் “நான் இந்த புகைப்படத்தை 2018 இல் எடுத்தேன். புகைப்படத்தில் இருப்பவர்கள் ஃபிஃபா உலகக் கோப்பையில் பிரான்சின் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்,” என்றார்.
கொரோனா வைரஸ் காரணமாக கலாச்சார தளங்கள் திறக்கப்படுவதை பிரான்ஸ் நிறுத்திவைத்துள்ளதோடு, இரவு ஊரடங்கு உத்தரவையும் விதித்துள்ளதை நாங்கள் கண்டறிந்தோம். பலர் இதற்கு எதிராக உள்ளனர். சமீபத்தில், பாரிஸ் மற்றும் பிற பிரெஞ்சு நகரங்களிலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டங்களின் புகைப்படங்களை பிபிசி செய்திகளில் நாம் காணலாம்.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பேஸ்புக் பயனர் ஸ்கூபினா கசென்ஸ்கா ஓவட்பாவின் கணக்கினை ஆராய்ந்ததில், இவர் பிரான்சை சேர்ந்தவர் என்பதும், பேஸ்புக்கில் இவருக்கு 1,674 பின்தொடர்பவர்கள் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: விஸ்வாஸ் நியூஸ் விசாரணையில், இந்த கூற்று தவறானது என்பது தெரியவந்துள்ளது. இந்தப் புகைப்படம் 2018 ஃபிஃபா உலகக் கோப்பையில் பிரான்சின் வெற்றியை மக்கள் கொண்டாடுவதைக் காட்டுகிறது, இது கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923