இந்தக் காணொலி 2011 ல் ஜப்பானை சுனாமி தாக்கியபோது, கார்கள் வெள்ளநீரால் அடித்துச் செல்லப்படுவதையே காட்டுகிறது. இது 2020 ல் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் அல்ல. இந்த வைரல் கூற்று தவறானது.
புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்). சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் காணொலி கார்கள் வெள்ளநீரால் அடித்துச் செல்லப்படுவதைக் காட்டுகிறது. செப்டம்பர் 18, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்தக் காணொலி, பாகிஸ்தானின் கராச்சியில் நிலவும் மோசமான வானிலை என்று கூறுகிறது.
இது குறித்து விஸ்வாஸ் செய்தி விசாரித்தபோது, இந்தக் கூற்று தவறானது என்பதைக் கண்டறிந்தோம். இதன் அசல் காணொலி 2011 இல் ஜப்பானில் சுனாமி தாக்கியபோது எடுக்கப்பட்டது என்பதே உண்மை.
கூற்று
செப்டம்பர் 18, 2020 அன்று ட்விட்டரில் பகிரப்பட்ட காணொலி, வெள்ளநீரால் கார்கள் அடித்துச் செல்லப்படுவதைக் காட்டுகிறது. இந்தக் காணொலியில் உள்ள கூற்று,”பாகிஸ்தானின் கராச்சியில் இன்று,” என்று கூறுகிறது.
இந்த ட்விட்டர் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இந்த ட்விட்டர் காணொலியில் பதிவிடப்பட்டிருந்த ஒரு பயனரின் கருத்தில்,”இந்தக் காட்சிகள் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியைக் காட்டுகின்றன,” என்று கூறப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.
இந்த வைரல் காணொலியில் இன்விட் கருவியைப் பயன்படுத்தி, கீஃப்ரேம்களைப் பிரித்தெடுத்து, அவற்றை கூகுள் பின்னோக்கிய படத் தேடலைச் செய்ததில், யூடியூப்பில் ‘2011 ஜப்பான் சுனாமி: இஷினோமகி’ என்ற காணொலியைக் கண்டோம்.
அதிலிருந்த விளக்கத்தின்படி, இந்த காணொலி இஷினோமகி கேஸ் நிறுவன அலுவலகத்தின் மாடியிலிருந்து பதிவு செய்யப்பட்டதாகும் (in Ishinomaki City, Miyagi Prefecture). இதன் அசல் காணொலியை இங்கே காணலாம்.
இந்த அசல் காணொலி மற்றும் வைரல் காணொலியின் ஸ்கிரீன் ஷாட்களின் ஒப்பீட்டை இங்கே காணலாம்: கூகுள் மேப்ஸைப் பயன்படுத்தி, இந்த காணொலி படமாக்கப்பட்ட இடத்தை நாங்கள் கண்டறிந்தோம்.
இது பற்றி பாகிஸ்தானின் டான்நியூஸின் மூத்த ஆசிரியர் அடீல் ஜாஃப்ரியுடன் நாங்கள் பேசினோம். இது பற்றி கூறிய அவர், “இந்த காணொலி பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதல்ல,” என்றார்.
இதன்மூலம் இந்தக் காணொலி பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது என்ற கூற்று தவறானது என்பதை எங்களால் உறுதிபடுத்திக்கொள்ள முடிந்தது.
இந்த இடுகையை ட்விட்டரில் சாரா நலுங்கா என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவருக்கு 1899 பின்தொடர்பவர்கள் இருப்பதையும், அவரது கண்ககு பிப்ரவரி 2013 இல் உருவாக்கப்பட்டது என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்.
निष्कर्ष: இந்தக் காணொலி 2011 ல் ஜப்பானை சுனாமி தாக்கியபோது, கார்கள் வெள்ளநீரால் அடித்துச் செல்லப்படுவதையே காட்டுகிறது. இது 2020 ல் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் அல்ல. இந்த வைரல் கூற்று தவறானது.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923