X
X

உண்மை சரிபார்ப்பு: கூகுள் தனது அலுவலகத்தை பாகிஸ்தானில் இன்னும் திறக்கவில்லை, வைரல் கூற்று தவறானது

இந்த வைரல் பதிவு தவறானது. கூகுள் தனது முதல் அலுவலகத்தை பாகிஸ்தானில் திறக்கவில்லை. இந்த இடுகையுடன் பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள் லாகூரில் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரான SSZ டெக் பிரைவேட் லிமிடெட்டின் கூகுள் ஸ்டோரிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதே உண்மையாகும்.

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). கூகுள் தனது முதல் அலுவலகத்தை பாகிஸ்தானில் லாகூரில் திறந்துவிட்டதாகக் கூறி கூகுள் அலுவலகம் எனக் கூறப்படும் இரண்டு புகைப்படங்களுடன் ஒரு வைரல் இடுகை பகிரப்பட்டு வருகிறது.

இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கூகுளின் பிரஸ் குழுவும் இந்தக் கூற்றுக்களை மறுத்துள்ளது. பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு தனியார் விற்பனையாளரின் கூகுள் கடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களே, இந்த வைரல் இடுகையில் பகிரப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பத்திரிகையாளர்கள் எங்களுக்கு உறுதிப்படுத்தினர்.

கூற்று

பேஸ்புக் பக்கமான ‘Islamabad The beautiful city’ ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, “கூகுளின் முதல் அலுவலகம் திறக்கப்பட்டது, இடம்: ஜி-9 பிரிவு, இஸ்லாமாபாத், பாகிஸ்தான். ” என்று எழுதியுள்ளது. இந்த பேஸ்புக் இடுகையை இங்கே காணலாம்.

“பிரதமர் இம்ரான் கானின் தனிப்பட்ட முயற்சிகளுக்கும், சிறந்த திட்டங்களுக்கும் நன்றி. கூகுள் தனது முதல் அலுவலகத்தை பாகிஸ்தானில் திறந்துள்ளது, இது பொருளாதாரத்திற்கு கோடி ரூபாய் பயனளிக்கும்,” என்ற தலைப்பில் ட்விட்டரிலும் இந்த புகைப்படம் பகிரப்பட்டு இருப்பதை நாங்கள் கண்டோம்.

https://twitter.com/zama5683/status/1326178996351070209

விசாரணை

கூகுள் தனது அலுவலகத்தை பாகிஸ்தானில் திறப்பது குறித்த செய்திகளை நாங்கள் இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், சமூக ஊடக நிறுவனங்கள் பாகிஸ்தானில் தங்களது அலுவலகங்களைத் திறப்பது கட்டாயமாக்கப்படுவது குறித்த பாகிஸ்தான் அரசாங்கத்தின் அறிவிப்பைப் பற்றிய பல செய்தி கட்டுரைகளை நாங்கள் கண்டோம்.

மார்ச் 2 அன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியிட்ட ஒரு கட்டுரையில், “பாகிஸ்தான் அரசாங்கத்தால் சமீபத்தில் வகுக்கப்பட்ட விதிகளின்படி, சமூக ஊடக நிறுவனங்கள் இஸ்லாமாபாத்தில் அலுவலகங்களைத் திறப்பது மற்றும் தகவல்களைச் சேமிக்க தரவு சேவையகங்களை உருவாக்குவது கட்டாயமாகின்றன. அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்ட பதிவுகளை அந்நிறுவனங்கள் நீக்குவது குறித்து கடுமையான விதிகளை அமைத்துள்ளனர்… ” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிகள் திருத்தப்படாவிட்டால் பாகிஸ்தானில் தங்களின் சேவைகளை நிறுத்திக்கொள்ளப்போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எச்சரிக்கை விடுத்து, பேஸ்புக், கூகுள் ஆகிய நிறுவனங்களை உள்ளடக்கிய ஆசியா இன்டர்நெட் கூட்டணி (AIC) என்ற கூட்டணி மூலம் சமூக ஊடக நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளதாக அந்தக் கட்டுரை மேலும் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், கூகுள் தனது அலுவலகத்தை இஸ்லாமாபாத்தில் திறப்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ, உண்மையான செய்தி அறிக்கைகயையும் எங்களால் காண முடியவில்லை.

இது குறித்து விசாரிக்க, கூகுளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவர்களின் அலுவலக இருப்பிடங்களைத் தேடினோம். அவ்வாறு தேடியதில், பாகிஸ்தான் அலுவலகம் என்று கூறப்படும் முகவரி அல்லது விவரங்களை எங்களால் அதில் காண முடியவில்லை.

இதன் உண்மை சரிபார்ப்பிற்காக நாங்கள் மின்னஞ்சல் வழியாக கூகுள் பிரஸ் குழுவை தொடர்பு கொண்டோம். Techjuiceன் ஒரு கட்டுரையை நம்மோடு பகிர்ந்துகொண்ட கூகுளின் தொடர்பு மேலாளர், இந்த கூற்றினை மறுத்துவிட்டார்.

இதன்மூலம் இது லாகூரின் டிஹெச்ஏ கட்டம் 1 இல் கூகுள் தயாரிப்புகளை விற்பனை செய்திடும் SSZ டெக் பிரைவேட் லிமிடெட்டின் கூகுள் ஸ்டோரிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களே இந்த இடுகையுடன் பகிரப்பட்டருக்கிறது என்பதையும், இது கூகுளின் புதிய அலுவலகம் அல்ல என்பதையும் எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது.

விசாரணையின் அடுத்த கட்டமாக, ஜாக்ரான் நியூ மீடியாவின் மூத்த ஆசிரியர் பிரத்யுஷ் ரஞ்சன், பாகிஸ்தானில் உள்ள AAJ நியூஸின் மூத்த நிருபர் நவீத் அக்பரைத் தொடர்பு கொண்டு வைரல் புகைப்டங்களில் உள்ள கூற்றுகளின் நம்பகத்தன்மையை சரிபார்த்தார். அப்போது கூகுள் அலுவலகம் குறித்த தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்கிற பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையத்தின் (PTA) செய்தித் தொடர்பாளர் குர்ராம் மெஹ்ரானின் பதிவினை அக்பர் அவருடன் பகிர்ந்து கொண்டார்.

மற்றொரு பத்திரிகையாளரான தாஹிர் அமீன் (பாகிஸ்தானில் டெய்லி பிசினஸ் ரெக்கார்டரில் பணியக நிருபர்) இந்த வைரல் புகைப்படங்கள் லாகூரில் திறக்கப்பட்ட கூகுள் ஸ்டோரில் எடுக்கப்பட்டவை என்று பிரத்யுஷ் ரஞ்சனிடம் கூறினார்.

பேஸ்புக்கிலும் பாகிஸ்தானில் உள்ள இந்த கூகுள் கடையின் காணொளியை நம்மால் காண முடிந்தது.

இந்த வைரல் கூற்றைப் பகிர்ந்து கொண்ட பேஸ்புக் பக்கத்தினை ஆராய்ந்ததில் , இப்பக்கத்திற்கு 31,872 பின்தொடர்பவர்கள் இருப்பதும், ஜூன் 2016 முதல் இப்பக்கம் செயலில் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. கூகுள் தனது முதல் அலுவலகத்தை பாகிஸ்தானில் திறக்கவில்லை. இந்த இடுகையுடன் பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள் லாகூரில் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரான SSZ டெக் பிரைவேட் லிமிடெட்டின் கூகுள் ஸ்டோரிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதே உண்மையாகும்.

  • Claim Review : கூகுளின் முதல் அலுவலகம் திறக்கப்பட்டது, இடம்: ஜி-9 பிரிவு, இஸ்லாமாபாத், பாகிஸ்தான்
  • Claimed By : பேஸ்புக் பக்கம்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later