உண்மை சரிபார்ப்பு: இவை இயந்திரத்தால் தயாரிக்கப்படும் போலி முந்திரிகள் இல்லை, இவை முந்திரி வடிவ தின்பண்டங்கள்.

காணொளியில் சொல்லப்படுவது போல் இவை சந்தையில் விற்கப்படும் போலி முந்திரிகள் அல்ல. இவை இயந்திரத்தால் மாவிலிருந்து செய்யப்படும் முந்திரி வடிவ திண்பண்டங்கள் மட்டுமே.

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்) சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் காணொளியில் ஒரு இயந்திரம் போலி முந்திரி பருப்புகளை உற்பத்தி செய்வதாக காட்டப்படுகிறது. அந்தக் காணொளியில், ஒரு இயந்திரம் ஒரு வெள்ளை தாளில் இருந்து முந்திரி வடிவ பொருட்களை வெட்டுகிறது.

இது குறித்து விஸ்வாஸ் நியூஸ் விசாரித்தபோது, அந்த ​​இயந்திரம் போலி முந்திரி தயாரிக்கவில்லை என்பதையும், அந்த இயந்திரம் உண்மையில் முந்திரி வடிவ தின்பண்டங்களை உற்பத்தி செய்கிறது என்பதையும் கண்டறிந்தோம்.

கூற்று

வைரல் வாட்ச் (Viral Watch) என்ற காணொளி தளத்தில் பேஸ்புக்கில் பகிரப்பட்ட காணொளியில் , ஒரு இயந்திரம் ஒரு வெள்ளைத் தாளில் இருந்து முந்திரி வடிவ பொருள்களை வெட்டுவதைக் காட்டுகிறது. இதை வைத்து போலி முந்திரி தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. காணொளியைக் கீழே காணலாம்.

விசாரணை

நாங்கள் இன்விட் (InVID) கருவியைப் பயன்படுத்தி காணொளியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட கீஃபேரம்களை கூகிள் தலைகீழ் படத் தேடலைச் (Google Reverse Image Search) செய்வதன் மூலம் எங்கள் விசாரணையைத் தொடங்கினோம்.

விசாரணையில் இதே காணொளியை யூடியூப் சேனலான ‘துஷர் பாண்டியா’ (Tushar Pandya)விலும் கண்டறிந்தோம். அந்த காணொளியின் தலைப்பு ‘காஜு நிம்கி மேக்கிங் மெஷின்’ (Kaju Nimki Making Machine).

அந்தச் சேனலை நாங்கள் ஆராய்ந்தபோது, ​​துஷர் பாண்டியா தின்பண்டங்களுக்கான இயந்திரங்களை தயாரிப்பதைக் கண்டறிந்தோம்.

மேலும் துஷர் பாண்டியாவின் ட்விட்டர் கணக்கிலும் அதே காணொளி இடம்பெற்றிருப்பதையும் நாங்கள் அறிந்தோம். அதில் இந்த இயந்திரம் முந்திரி வடிவ தின்பண்டங்களை தயாரிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் காணொளி வெவ்வேறு கோணங்களில் இயந்திரத்தை காட்டி, இறுதியாக முந்திரி தின்பண்டம் தயாரிக்கப்படுவதையும் காட்டுகின்றது.

இது குறித்து சோட்டிவாலா உணவுகள் மற்றும் இயந்திரங்களின் உரிமையாளரும், தின்பண்டங்கள் தயாரிக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்பவருமான துஷர் பாண்டியாவை நாங்கள் தொடர்பு கொண்டோம்.

அந்தக் காணொளி குறித்து அவர் கூறுகையில் “இந்த இயந்திரம் போலி முந்திரி தயாரிப்பதாக கூறுவது முற்றிலும் உண்மையற்றது. இது மாவிலிருந்து செய்யப்படும் ஒரு வகை தின்பண்டம். முந்திரி வடிவத்தில் ஒரு மாவு தாளை வெட்டுவதைத்தான் இயந்திரம் செய்கிறது. அதன் பிறகு நன்றாக வறுக்கப்பட்ட பின்பே, இது உண்பதற்கு ஏற்றதாகிறது,” என்றார்.

இந்த காணொளியைப் பகிர்ந்த பேஸ்புக் பயனரின் சுயவிவரத்தை ஆராய்ந்ததில், வைரல் வாட்ச் என்ற அந்த காணொளி தளம், 331 பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது என்பது தெரிய வந்தது.

निष्कर्ष: காணொளியில் சொல்லப்படுவது போல் இவை சந்தையில் விற்கப்படும் போலி முந்திரிகள் அல்ல. இவை இயந்திரத்தால் மாவிலிருந்து செய்யப்படும் முந்திரி வடிவ திண்பண்டங்கள் மட்டுமே.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்