உண்மை சரிபார்ப்பு: இன்போசிஸ் தலைவர் சுதா மூர்த்தியின் படம் தெளிவற்ற கூற்றுடன் வைரலாகிறது
இன்போசிஸ் தலைவர் திருமதி.சுதா மூர்த்தி பெங்களூரில் ராகவேந்திர சுவாமி மடத்தில் காய்கறிகளை விற்பனை செய்யவில்லை. அந்தச் செய்தி தெளிவற்றது.
- By: Abbinaya Kuzhanthaivel
- Published: Sep 14, 2020 at 06:12 PM
- Updated: Sep 14, 2020 at 11:05 PM
புது டெல்லி (விஸ்வாஸ் நியூஸ்) திரு.என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மனைவியும், இன்போசிஸின் இணை நிறுவனருமான திருமதி.சுதா மூர்த்தி, பெங்களூரு ஜெயநகரில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் காய்கறிகளை விற்பனை செய்து வருவதாக சமூக ஊடகங்களில் ஒரு படம் வைரலாக பரவி வருகிறது. முதலில் ட்விட்டரில் பகிரப்பட்ட இப்புகைப்படம், பின்னர் பேஸ்புக்கிலும் அதிகமாக பகிரப்பட்டுள்ளது.
விஸ்வாஸ் நியூஸ் மேற்கொண்ட விசாரணையில் இந்த செய்தி தவறானது என்று தெரியவந்துள்ளது. மேலும் அவர் காய்கறிகள் விற்கவில்லை என்றும், அந்தப் புகைப்படம் சேமிப்பு வசதிகளை பராமரிக்க தன்னார்வத்துடன் அவர் ஆராதன மஹோத்ஸவ சேவையில் பங்கேற்றபொழுது எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.
கூற்று
ட்விட்டர் பயனர் ‘சுர்பி’ இந்த வைரல் புகைப்படத்துடன் “ஒவ்வொரு ஆண்டும் இன்போசிஸ் நிறுவனரின் மனைவி சுதா மூர்த்தி, தலைக்கனத்திலிருந்து விடுபட காய்கறிகளை விற்க ஒரு நாள் செலவிடுகிறார். ஒருவர் எவ்வாறு பணம் தங்களின் மதிப்புகளை மாற்ற அனுமதியாமல் இருக்கிறார் என்று கற்றுக்கொள்ளுங்கள்” என்ற கூற்றினைப் பதிவிட்டுள்ளார்.
இதே போன்ற வாசகங்களுடன் இந்த புகைப்படம் பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
விசாரணை
இது குறித்து நாங்கள் இணையத்தில் தேடியபோது, ராகவேந்திர மடத்தில் அவர் ஆற்றுகின்ற சேவைகள் பற்றிய செய்திகள் கிடைத்தன. டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஒரு கட்டுரையில் “ஒரு ஆண்டில் மூன்று நாட்கள் அவர் அதிகாலை 4 மணிக்கு எழுந்து ராகவேந்திர சுவாமி மடத்திற்கு செல்கிறார். அங்கு சமையலறை மற்றும் அதை ஒட்டிய அறைகளை சுத்தம் செய்து, அழுக்கு பாத்திரங்களை கழுவி, அலமாரிகளைத் தூசு துடைத்து, காய்கறிகள் நறுக்கி, புல்வெளிகளை சுத்தம் செய்து மடத்திற்கு சேவை புரிகிறார்” என்று குறிப்படப்பட்டுள்ளது.
மேலும் கன்னட செய்தி இணையதளம் ஒன்றில் “நான் திருப்பதியில் உள்ள வெங்கடரமண கோவிலில் பூஞ்செடிகளை நடுவதற்காக ஆண்டிற்கு ஒருமுறை செல்வது வழக்கம்” என்று அவர் கூறுவதாக குறிப்படப்பட்டுள்ளது.
இருப்பினும், சுதா மூர்த்தி காய்கறிகள் விற்பனை செய்வது குறித்து எந்த செய்தியையும் வேறு எங்கும் கண்டுபிடிக்க இயலவில்லை.
இது குறித்து கூகுளின் பின்னோக்கிய பட தேடல் கருவியைப் (Google reverse image search tool) பயன்படுத்தி படத்தைத் தேடிய பொழுதில், கன்னட ஒன் இந்தியா இணையதளத்தில் 2016 இல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையைக் காண முடிந்தது.
அக்கட்டுரையைக் கொண்டு அந்தப் புகைப்படத்தில் காய்கறிகளைக் கொண்ட பெண் சுதா மூர்த்தி என்பதை நாம் உறுதிப்படுத்த முடிந்தது. இருப்பினும், அவர் காய்கறிகளை விற்கவில்லையென்றும், அவர் மூன்று நாட்கள் கடை மேலாளராக பணியாற்றினார் என்றும் அக்கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
இதனை உறுதிப்படுத்த பெங்களூரு ஜெயநகரில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தின் மேலாளர் வதீந்திரச்சார் R K அவர்களைத் தொடர்பு கொண்ட பொழுது, “திருமதி சுதா மூர்த்தி காய்கறிகளை விற்கவில்லை. அந்தப் புகைப்படத்தின் செய்தி (கூற்று) போலியானது. அந்த புகைப்படம் ஆராதன மஹோத்ஸவத்தின் போது காய்கறிகளை வரிசைப்படுத்த அவர் உதவிய பொழுது எடுக்கப்பட்டது,” என்று கூறினார்.
இப்படி தவறான செய்தியுடன் அந்த புகைப்படத்தை பகிர்ந்த ட்விட்டர் பயனர்களுள் சுர்பியும் ஒருவர். சுர்பியின் ட்விட்டர் கணக்கினை ஆராய்ந்த பொழுது, அக்கணக்கு 2018 ஆகஸ்டில் துவங்கப்பட்டது என்றும், மேலும் அது 4,191 பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது என்றும் தெரியவந்தது.
निष्कर्ष: இன்போசிஸ் தலைவர் திருமதி.சுதா மூர்த்தி பெங்களூரில் ராகவேந்திர சுவாமி மடத்தில் காய்கறிகளை விற்பனை செய்யவில்லை. அந்தச் செய்தி தெளிவற்றது.
- Claim Review : ஒவ்வொரு ஆண்டும் இன்போசிஸ் நிறுவனரின் மனைவி சுதா மூர்த்தி, தலைக்கனத்திலிருந்து விடுபட காய்கறிகளை விற்க ஒரு நாள் செலவிடுகிறார்.
- Claimed By : FB User Akhilesh Singh
- Fact Check : Misleading
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.