உண்மை சரிபார்ப்பு: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கோவிட் -19 சிகிச்சைக்கு ‘Ivermectin’ பயன்படுத்த வழிகாட்டுதல்களை வெளியிடவில்லை

இந்த இடுகை தெளிவற்றது. கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான எந்த புதிய வழிகாட்டுதல்களையும் ஐ.சி.எம்.ஆர் வெளியிடவில்லை. மாறாக அந்த இடுகையில் உள்ள வழிகாட்டுதல்கள் கோவிட் -19 நோய் தொற்றினைத் தடுப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் ‘ஐவர்மெக்டின்’ என்ற மருந்தைப் பயன்படுத்துமாறு உத்தரபிரதேச மாநிலத்தின் அனைத்து தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கும், தலைமை மருத்துவ கண்காணிப்பாளர்களுக்கும் அம்மாநில அரசால் வெளியிடப்பட்ட உத்தரவு என்பதே உண்மை.

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்) கோவிட் -19 நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்குவதற்கான புதிய வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ( ஐ.சி.எம்.ஆர்) ஆகஸ்ட் 6 ஆம் தேதி அன்று வெளியிட்டதாக கூறி சமூக வலைதளங்களில் ஒரு பதிவு வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்பதும், ஐ.சி.எம்.ஆர் இது போன்ற எந்த வழிகாட்டுதலையும் வெளியிடவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

கூற்று

சமூக ஊடக பயனர் ‘@rajinikanthgupta’ (பதிவின் இணைப்பு) இது குறித்து ஒரு இடுகையைப் பதிவிட்டுள்ளார். அதில் “கோவிட் -19 நோய்த்தடுப்பிற்காக ஐ.சி.எம்.ஆரின் புதிய வழிகாட்டுதல்கள் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி ஒன்றாம் நாள், ஏழாம் நாள் மற்றும் முப்பதாம் நாள் அன்று
இரவு உணவுக்கு பிறகு இரண்டு மணிநேரம் கழித்து,
ஐவர்மெக்டின் 12 மி.கிராம் மாத்திரையும், அதைதொடர்ந்து
நோய்தொற்று முடியும் வரை ஒவ்வொரு 30 நாட்களுக்கும் 12 மி.கிராம் உள்ள ஒரு மாத்திரையும் உட்கொண்டு வர வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/rajinikanthgupt/status/1303048131072815104

ஐ.சி.எம்.ஆரிடமிருந்து வந்ததாக நம்பப்டும் இந்தக் கூற்றினை பல்வேறு பயனர்களும் பல சமூக வலைதளங்களிலும் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

விசாரணை

கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான பல வழிகாட்டுதல்களை ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ளது. ஆகவே இந்தக் கூற்றில் சொல்லபட்டுள்ள வழிகாட்டுதல்களின் உண்மை தன்மையினை சரிபார்க்க, நாங்கள் அந்த நிறுவனத்தின் வலைத்தளத்தை ஆராய்ந்தோம். அவ்வாறு ஆராய்ந்ததில் இடுகையில் கூறப்பட்டுள்ளபடி ஆகஸ்ட் 6 அன்று ஐ.சி.எம்.ஆர் எந்த வழிகாட்டுதலையும் வெளியிடவில்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

தகவல்: ஐ.சி.எம்.ஆர்

இது குறித்து புதுடெல்லியின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விஞ்ஞானி ‘G’ யும், ஆராய்ச்சி மேலாண்மை, கொள்கை, திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பின் (ஆர்.எம்.பி.பி.சி) இயக்குனருமாகிய டாக்டர்.ரஜினிகாந்தினை விஸ்வாஸ் நியூஸ் தொடர்பு கொண்ட பொழுது, “அத்தகைய வழிகாட்டுதல்கள் எதுவும் எங்கள் நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

கோவிட் -19 நோயாளிகளுக்கு ‘Ivermectin’ (ஐவர்மெக்டின்) ஒரு மருந்து என்று அந்த பதிவு கூறுகிறது. இது குறித்து நாங்கள் தேடியபோது, ​​இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையை எங்களால் காண முடிந்தது. அதில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, புதிய வகையில் சிகிச்சையளிக்க ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ பதிலாக ‘ஐவர்மெக்டின்’ பயன்படுத்த உத்தரபிரதேச அரசு ஒப்புதல் அளித்தது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தி

மேலும் செய்தி நிறுவனமான ANI UP ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியிட்ட ஒரு ட்வீட்டில், உத்தரபிரதேச அரசு (2020 ஆகஸ்ட் 6 அன்று) பிறப்பித்த உத்தரவின் நகலை எங்களால் காண முடிந்தது. அதில் அம்மாநிலத்தின் அனைத்து தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கும், தலைமை மருத்துவ கண்காணிப்பாளர்களுக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்றினைத் தடுப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் ‘ஐவர்மெக்டின்’ மருந்தைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டிருந்தன.

சில அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளே இல்லாத நோயாளிகளுக்கு ‘ஐவர்மெக்டின்’ மருந்தை வழங்க உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டுதல்கள், ஐ.சி.எம்.ஆர் வெளியிட்ட அறிக்கை என்று கூறப்பட்டு, அதிகமாக பகிரப்பட்டும் வருகிறது.

இந்தப் பதிவைப் பகிர்ந்த பல பயனர்களில் ட்விட்டர் பயனர் ரஜினிகாந்த் குப்தாவும் ஒருவர். அவர் சுயவிவரத்தினை ஆராய்ந்தபோது நவம்பர் 2018 முதல் அவரது கணக்கு இயங்கி வருகிறது என்பதும், அவருக்கு 35 பின்தொடர்பவர்கள் உள்ளனர் என்பதும் தெரியவந்தது.

சுகாதார அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நோய்த்தொற்றின் குணமடைந்தோர் விகிதம் 78.27 சதவீதமாக அதிகரித்துள்ளது. மொத்த நோயாளிகளில் அறுபது சதவீதம் பேர் ஐந்து மாநிலங்களில் மட்டுமே உள்ளனர் என்ற போதிலும் அந்த மாநிலங்களிலும் குணமடைந்தோர் விகிதம் 60 சதவீதமாக உள்ளது.

கோவிட் -19 இந்தியா டிராக்கரின் கூற்றுப்படி, (செப்டம்பர் 15, காலை 8 மணி வரை) இந்தியாவில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 49 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் இதுவரை 80,776 பேர் இறந்துள்ளனர்.

https://twitter.com/COVIDNewsByMIB/status/1305742370877530113

निष्कर्ष: இந்த இடுகை தெளிவற்றது. கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான எந்த புதிய வழிகாட்டுதல்களையும் ஐ.சி.எம்.ஆர் வெளியிடவில்லை. மாறாக அந்த இடுகையில் உள்ள வழிகாட்டுதல்கள் கோவிட் -19 நோய் தொற்றினைத் தடுப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் ‘ஐவர்மெக்டின்’ என்ற மருந்தைப் பயன்படுத்துமாறு உத்தரபிரதேச மாநிலத்தின் அனைத்து தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கும், தலைமை மருத்துவ கண்காணிப்பாளர்களுக்கும் அம்மாநில அரசால் வெளியிடப்பட்ட உத்தரவு என்பதே உண்மை.

Misleading
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்