உண்மை சரிபார்ப்பு: இந்த படத்தில் உள்ள பெண் கன்ஹையா குமாரின் சகோதரி அல்ல, வைரல் கூற்று தவறானது

இந்த வைரல் பதிவு தவறானது. இந்த புகைப்படத்தில் உள்ள பெண் கன்ஹையா குமாரின் சகோதரி அல்ல, இவர் பீகார் பெகுசாரை சேர்ந்த பிரியங்கா குமாரி.

உண்மை சரிபார்ப்பு: இந்த படத்தில் உள்ள பெண் கன்ஹையா குமாரின் சகோதரி அல்ல, வைரல் கூற்று தவறானது

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). CPI தலைவரும், முன்னாள் JNU தலைவருமான கன்ஹையா குமாரின் சகோதரி என்று கூறி ஒரு இளம் பெண்ணின் படம் பேஸ்புக்கில் வைரலாகியுள்ளது. இவர் இஸ்ரோவில் ஒரு விஞ்ஞானி என்ற கூற்றுடன் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த வைரல் கூற்று தவறானது என்று தெரியவந்தது. இந்த புகைப்படத்தில் உள்ள பிரியங்கா குமாரி, கன்ஹையா குமாரின் குமாரின் சகோதரி அல்ல.

கூற்று

பேஸ்புக் பயனர் அபய் பிரதாப் நவம்பர் 20 அன்று ஒரு பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு, “JNU தொழிற்சங்கத் தலைவர் கன்ஹையா குமாரின் சகோதரி இஸ்ரோ விஞ்ஞானி ஆனார். வாழ்த்துகள்,” என்று எழுதியுள்ளார். இந்த
இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

கூகுள் பின்னோக்கிய பட தேடல் கருவியைப் பயன்படுத்தி, இந்த வைரல் படத்தைத் தேடினோம். அவ்வாறு தேடியதில், இந்த படத்தை பூமந்த்ரா இணையதளத்தில் கண்டுபிடித்தோம். அந்த வலைத்தளம் அவரை பீகாரில் உள்ள பெகுசராயின் பிஹ்தா நகரத்தைச் சேர்ந்த பிரியங்கா என்று அடையாளம் காட்டியது. இவர் இஸ்ரோவில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிஹ்தாவை சேர்ந்த குமாரி, இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணிபுரிகிறார் என்று கூறும் கட்டுரை ஒன்று 7 மார்ச் 2018 அன்று ஜாக்ரான்.காமில் வெளியிடப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம். பிரியங்காவின் தந்தை ராஜீவ் குமார் ரயில் துறையில் காவலராகவும், அவரது தாயார் பிரதிபா தேவி அரசுப் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார்.

இது குறித்த உண்மை சரிபார்ப்புக்காக நாங்கள் டைனிக் ஜாக்ரானின் பெகுசராய் பணியகத் தலைவர் ரூபேஷ் குமாரைத் தொடர்பு கொண்டு பேசினோம். இந்த வைரல் படத்தில் உள்ள பெண், கன்ஹையா குமாரின் சகோதரி அல்ல என்று அவர் நம்மிடம் கூறினார்.

இந்த வைரல் கூற்றினை பகிர்ந்து கொண்ட பேஸ்புக் பயனர் அபய் பிரதாப்பின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் பீகாரைச் சேர்ந்தவர் என்பதும், 2017 முதல் பேஸ்புக்கில் அவர் செயல்பட்டு வருவதும் எங்களுக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. இந்த புகைப்படத்தில் உள்ள பெண் கன்ஹையா குமாரின் சகோதரி அல்ல, இவர் பீகார் பெகுசாரை சேர்ந்த பிரியங்கா குமாரி.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்