உண்மை சரிபார்ப்பு: மலேசியாவில் உள்ள சிவலிங்கம் தமிழ் நாட்டுடையது என்பதாகக் கூறி ஒரு காணொளி வைரல் ஆகிறது.
தமிழ் நாட்டில் உள்ளதாக கூறப்பட்டு வைரல் காணொளியில் வந்த ஒரு பெரிய சிவலிங்கம் உண்மையில் மலேசியாவில் உள்ளது. வைரல் க்ளைம் தவறாக வழிநடத்துவது.
- By: Ankita Deshkar
- Published: Jun 8, 2022 at 04:02 PM
புது டெல்லி (விஸ்வாஸ் நியூஸ்): 365 நாளும் அதன்மேல் நீர் கொட்டுவதாக உள்ள ஒரு சிவலிங்கம் தமிழ் நாட்டுடையது என்று க்ளைம் செய்யும் ஒரு காணொளியை ட்விட்டரில் விஷ்வாஸ் நியூஸ் பார்த்தது. தன் புலன்விசாரணையில் அந்தக் காணொளி மலேசியாவிலிருந்து வந்தது என்று விஷ்வாஸ் நியூஸ் கண்டு பிடித்தது.
க்ளைம்:
லால்சந்த்லோஹனா என்ற ட்விட்டர் ஹேண்டில் மார்ச் மாதத்தில் ஒரு காணொளியை பதிவேற்றி இவ்வாறு எழுதியது.
நீக்கப்பட்டது
மொழிபெயர்ப்பு: ஓஷிவலிங்கம் தமிழ்நாட்டில் உள்ள தாரா நெடும்பாதையில் அமைந்துள்ளது. பிண்டியின் மேல் மழை மட்டும் 365 நாட்களும் பெய்கிறது. அது எங்கிருந்து விழுகிறது என்று எனக்குத் தெரியாது. ஆச்சரியம்.
பதிவையும் அதன் ஆவணப்படுத்தப்பட்ட பதிப்பையும் இங்கே பார்க்கவும்.
புலன்விசாரணை:
விஷ்வாஸ் நியூஸ் முதலில் அந்தக் காணொளியை இன்விட் சாதனத்தில் அப்லோட் செய்துவிட்டு பிறகு அதன் பல்வேறு ஸ்க்ரீன்கிரேப்களை எடுத்தது.
பிறகு நாங்கள் அந்த பல்வேறு ஸ்க்ரீன்கிரேப்களின் மீது ஒரு ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம் மேலும் இணையதளம் மூலம் தேடினோம்.
நாங்கள் அதே அச்சு அசலான காணொளியை சனாதன் சான்ஸ்கிரிட் என்ற யூடியூப் சேனலில் கண்டுபிடித்தோம். அந்தக் காணொளி மார்ச் 19, 2021 அன்று அப்லோட் செய்யப்பட்டிருந்தது.
அதன் விளக்கம் கூறியது.. இயற்கையான சிவலிங்கம் தொடர்ந்து நீர் விழுகிறது சிவன் கோவில் தமிழ் செலாங்கூர் மலேசியா.
அந்த இடத்தைப் பற்றி மேல் அதிக விவரங்களைக் கொடுத்த எஸ்எஸ் செல்வா ஐகேஎம் என்ற சேனலில் இன்னொரு காணொளியையும் நாங்கள் யூடியுபில் கண்டுபிடித்தோம்.
அந்தக் காணொளி ஏப்ரல் 2l, 2022 அன்று பதிவேற்றப் பட்டிருந்தது. அது சிவன் தியான மையம், சிவன் கோவில் (பெண்டாங் கரக் பழைய சாலை) என்று விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
ரிவர்ஸ் இமேஜ் தேடல் எங்களை யாருக்கு மலேசியன் ஹிந்து கோவிலுக்குப் போக வேண்டும்? என்ற ஒரு ஃபேஸ்புக் பக்கத்துக்குக் கொண்டு சென்றது.
அந்தப் பக்கம் அந்த இடத்தின் பல்வேறு படங்களைப் பகிர்ந்திருந்தது மேலும் அது இருக்கும் இடத்தையும் அளித்திருந்தது
மேல் அதிக விவரங்களுக்காக நாங்கள் அந்தப் பக்கத்தோடு தொடர்பு கொண்டோம். அந்தக் கோவில் மலேசியாவில் உள்ளது என்று அந்த ஃபேஸ்புக் பயனர் கூறினார் மேலும் அதன் இருப்பிடத்தைப் பகிர்ந்தார்.
எங்கள் தேடலில் நாங்கள் கரக் சிவன் கோவில் பெர்த்துபுஹான் மெடிடாசி சிவா என்ற ஃபேஸ்புக் பக்கத்தைக் கண்டடைந்தோம்.
இந்த ஃபேஸ்புக் பக்கமும் அதே இருப்பிடத்தின் பல காணொளிகளைக் கொண்டிருந்தது. அந்தக் கோவில் மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் உள்ளது என்று கூறியது.
இந்தப் பக்கத்தை வாட்ஸ்அப் மூலமாக நடத்தும் பயனரோடு நாங்கள் தொடர்பு கொண்டோம். வைரல் காணொளியில் உள்ள இந்த இடம் மலேசியாவில் உள்ளது, தமிழ் நாட்டில் இல்லை என்று பவானி சுப்பிரமணியம் கூறினார்.
புலன் விசாரணையின் கடைசிக் கட்டமாக இந்த வைரல் காணொளியை பகிர்ந்த ட்விட்டர் பயனரைப் பற்றி பின்புல சரிபார்ப்பை விஷ்வாஸ் நியூஸ் செய்தது. லால்சந்த்லோஹனா 498 பேர்களால் தொடரப்படுகிறது மேலும் அது 3377 பேர்களைத் தொடர்கிறது.
निष्कर्ष: தமிழ் நாட்டில் உள்ளதாக கூறப்பட்டு வைரல் காணொளியில் வந்த ஒரு பெரிய சிவலிங்கம் உண்மையில் மலேசியாவில் உள்ளது. வைரல் க்ளைம் தவறாக வழிநடத்துவது.
- Claim Review : ஓஷிவலிங்கம் தமிழ்நாட்டில் உள்ள தாரா நெடும்பாதையில் அமைந்துள்ளது. பிண்டியின் மேல் மழை மட்டும் 365 நாட்களும் பெய்கிறது. அது எங்கிருந்து விழுகிறது என்று எனக்குத் தெரியாது. ஆச்சரியம்
- Claimed By : லால்சந்த்லோஹனா
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.