முடிவு: ஒரு குரங்கு ஒரு வயதான பெண்ணை அணைத்துக் கொண்டிருப்பதாக பரவலாகிக் கொண்டிருந்த, மகாராஷ்ட்ராவிலிருந்து வந்ததாக சொல்லப்பட்ட காணொளி ஒன்றின் மேல் விஷ்வாஸ் நியூஸ் ஒரு உண்மை சரிபார்ப்பு நடத்தியது. ஆனால், அந்தக் காணொளி ராஜஸ்தானின் பலோடியிலிருந்து வந்ததாக கண்டுபிடிக்கப் பட்டது. அந்தப் பெண்ணின் பெயரும் பட்சலே அல்ல, பவாரி தேவி.
புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்): ஒரு வயதான பெண் அவருடைய படுக்கையில் படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கும்போது அவரை அணைத்திருக்கும் நிலையில் ஒரு குரங்கு இருக்கும் ஒரு காணொளி பரவலாகிக்கொண்டிருந்தது விஷ்வாஸ் நியூஸுக்குத் தெரிய வந்தது. அந்தக் காணொளி, மகாராஷ்டிரா தேவ்கர் தாலுக்கா, சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ஜம்சந்தே என்ற இடத்திலிருந்து வந்தது என்ற உரிமைக்கோரல் இருந்தது. இருந்தும், அது ராஜஸ்தானில் உள்ள பலோடி என்ற இடத்துக்குரியது என்று விஷ்வாஸ் நியூஸ் தன புலன் விசாரணையில் கண்டு பிடித்தது.
உரிமைக் கோரிக்கை:
பல சமூக ஊடகத் தளங்களில் ஒரு நட்பு காட்டும் குரங்கைப் பற்றி பரவலாகிக் கொண்டு வரும் ஒரு காணொளி விஷ்வாஸ் நியூஸ் கவனத்துக்கு வந்தது. ஒரு வயதான பெண்மணி அவர் படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும்போது ஒரு குரங்கு அவரை அணைத்துக் கொண்டிருந்ததாகவும் அவருடைய உறவினர்கள் அந்தக் குரங்கு செய்த சேட்டைகளைப் பார்த்ததாகவும் அதை ஒருவர் ஒரு காணொளியாக பதிவு செய்ததாகவும் இருந்தது.
முகநூல் பயனர் அர்விந்த் தரல் இந்த காணொளியை தன சுயகுறிப்பில் பதிவேற்றி, இவ்வாறு எழுதியிருந்தார். தேவ்கர் தாலுகா, சிந்துதுர்க் மாவட்டம், ஜம்சந்தேயில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு பெண், பட்சலே தினமும் ஒரு குரங்குக்கு உணவு கொடுப்பது வழக்கம். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய், இரண்டொரு நாட்கள் அவரால் வெளியே செல்ல இயலவில்லை. எனவே, அந்தக் குரங்கு அவரது வீட்டுக்கு அவரை சந்திக்க வந்தது. விலங்குகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
இந்தப் பதிவை பார்க்கவும் அதன் ஆவணப் பதிப்பை இங்கே காணவும்.
புலன் விசாரணை:
நாங்கள் இந்தக் காணொளி Claim your India.com –இல் ஒரு செய்திக் கட்டுரையில் உபயோகப்படுத்தப் பட்டிருப்பதைக் கண்டுபிடித்தோம். ஜூன் 23, 2021 அன்று பிரசுரிக்கப்பட்ட இந்தச் செய்தி, ஒரு முதியவளை அணைத்துக்கொண்டிருக்கும் ஒரு லங்குரின் அழகான இந்தக் காணொளி பரவலாகிக் கொண்டிருக்கிறது. இணையம் இதை நேசிக்கிறது என்று தலைப்பிடப்பட்டிருந்தது. இந்தச் செய்தி ஜெய்ப்பூர் என்ற தேதிவரியோடு எழுதப்பட்டிருக்கிறது. இந்தக் காணொளி ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள பலோடி என்ற இடத்தில் படம் பிடிக்கப் பட்டது என்று இந்தச் செய்தியில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
இந்தச் செய்தி மேலும் கூறியது: இந்த 35-வினாடிகள் நீளமுள்ள காணொளித் துணுக்கு பான்வ்ரி தேவி என்ற பெயருள்ள 90-வயது பெண்ணின் அருகில் படுக்கை மேல் ஒரு லங்குர் உட்கார்ந்து கொண்டிருப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. இந்தக் காணொளி முழுவது, இன்னொரு பெண், இந்தப் படுக்கையின் அருகில், கூப்பிய கரங்களுடன் நின்று கொண்டிருப்பதைக் காணலாம். அந்தக குடும்ப உறுப்பினர்கள் இது எங்கிருந்தோ வந்தது என்று சொன்னதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
மேற்கொண்டு இணையத்தில் ஆராய்ந்தபோது, சேனல் 24 ப்ளஸ் நியூஸ்-இல் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த ஒரு காணொளி கிடைத்தது. இந்தச் செய்தியில் இந்தச் சம்பவம் நடந்த அந்த வயதான பெண் மற்றும் இன்னொரு உறவினரின் எதிர்வினைகளைக் கொண்டிருந்தது. அந்தப் பெண் வெளியே சென்று கொண்டிருந்ததாகவும் அந்தக் குரங்குக்கு தினமும் உணவு கொடுத்ததாகவும் அவர்கள் எங்கும் குறிப்பிடவில்லை.This video was uploaded on the YouTube channel on June 27, 2021. Watch this news here.
இந்தக் காணொளி யூடியூப் சேனலில் June 27, 2021 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்தச் செய்தியை இங்கே காண்க.
அதன் புலன்விசாரணையின் கடைசிக் கட்டமாக, விஷ்வாஸ் நியூஸ் சேனல் 24 நியூஸ், ஜோத்பூர்-இன் மூத்த நிருபர், துங்கர் சிங்குடன் தொடர்பு கொண்டது. ராஜஸ்தானில் ஜோத்பூருக்கு அருகே பலோடி பிரதேசத்தில் ஒரு குரங்கு இருந்ததாகவும், ஒரு குரங்கு மனிதர்களுடன் மிக நட்போடு இருந்ததாகவும் துங்கர் சிங் எங்களிடம் கூறினார். அது சில சமயம் மனிதர்களோடு இருப்பது காணப்பட்டது. ஒரு குழந்தையுடன் அதே குரங்கு விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு காணொளி சமூக ஊடகத் தளங்களில் பரவலானது. அந்தக் காணொளியை அவர் விஷ்வாஸ் நியூசுடன் பகிர்ந்து கொண்டார். அந்த காணொளி பரவலானவுடன், பலோடியில் உள்ள குழு அதை செய்திப் படுத்தியது என்றார்.
விஷ்வாஸ் நியூஸ் அந்தக் காணொளியைதன தற்குறிப்பில் பகிர்ந்த முகநூல் பயனரைப் பற்றி ஒரு சமூக பின்புல சரிபார்ப்பு நடத்தியது. அந்தப் பயனர் ஒரு மும்பை வாசி என்று நாங்கள் கண்டுபிடித்தோம்.
निष्कर्ष: முடிவு: ஒரு குரங்கு ஒரு வயதான பெண்ணை அணைத்துக் கொண்டிருப்பதாக பரவலாகிக் கொண்டிருந்த, மகாராஷ்ட்ராவிலிருந்து வந்ததாக சொல்லப்பட்ட காணொளி ஒன்றின் மேல் விஷ்வாஸ் நியூஸ் ஒரு உண்மை சரிபார்ப்பு நடத்தியது. ஆனால், அந்தக் காணொளி ராஜஸ்தானின் பலோடியிலிருந்து வந்ததாக கண்டுபிடிக்கப் பட்டது. அந்தப் பெண்ணின் பெயரும் பட்சலே அல்ல, பவாரி தேவி.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923