உண்மைச் சரிபார்ப்பு: FIFA உலகக் கோப்பை 2022 தொடக்க விழாவின் வைரலான காணொளி டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டது

புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்): சர்வதேச பிரபலங்கள் நிகழ்ச்சிகளை கண்ட ஃபிஃபா உலகக் கோப்பை 2022 நவம்பர் 20 அன்று கத்தாரில் பிரமாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கியது. இதற்கிடையில், சமூக வலைதளங்களில், FIFA உலகக் கோப்பை தொடக்க விழாவுடன் இணைக்கும் காணொளியை பலர் பகிர்ந்து வருகின்றனர். இந்த வைரலான காணொளியில், FIFA Qatar 2022 விளையாட்டு அரங்கத்தின் மேலே வாணவெடிகளைக் (வானவேடிக்கை) காணலாம். இந்த காணொளி FIFA உலகக் கோப்பையின் தொடக்க விழாவைச் பற்றியது என்று பயனர்கள் கூறுகின்றனர்.

விஸ்வாஸ் நியூஸ் இந்த கூற்றை விசாரித்து, அந்த கூற்று ஆதாரமற்றது என்று கண்டறிந்தது. சீனாவைச் சேர்ந்த கிராஃபிக் டிசைனர் ஒருவர் எடிட்டிங் மென்பொருளைப் பயன்படுத்தி வைரலான இந்த காணொளியை உருவாக்கியுள்ளார்.

உரிமைகோரல்:

முகநூல் பயனர் அக்கி அஞ்சுமன் இந்த காணொளியைப் பகிர்ந்துள்ளார் (காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பு), தலைப்பானது, “FIFA 2022,,, தொடக்க விழா வாணவெடிகள். மிகவும் அழகாக இருக்கிறது” என்று உள்ளது.

விசாரணை:

விஸ்வாஸ் நியூஸ் அதன் பின்னணியில் உள்ள உண்மையை அறிய அந்த காணொளியை கவனமாகப் பார்த்து. அவதானித்ததில், இவை உண்மையான வாணவெடிகளாக இருந்தால், நிச்சயமாக அவற்றைச் சுற்றி புகை மூட்டமாக இருந்திருக்கும் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். ஆனால் இந்த காணொளியில் அப்படி எதுவும் இல்லை, மட்டுமல்லாது வாணவெடிகள் வெடிக்கும் சத்தமும் இதில் இல்லை. இந்த காணொளியில் வாணவெடிகள் என செய்யப்பட்ட வடிவங்கள் கூட இயற்கையானதாக தோன்றவில்லை. அதன் காரணமாக இந்த காணொளி உண்மையானது அல்ல என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.

நாங்கள் InVid கருவியின் உதவியுடன் இந்த காணொளியின் முக்கியமான பகுதியை பிரித்தெடுத்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது மைக்கேல் லீ என்ற ஒரு யூடியூப் சேனலில் நவம்பர் 15, 2022 அன்று பதிவேற்றப்பட்ட அசல் காணொளியை நாங்கள் கண்டுபிடித்தோம். தலைப்பானது, “FIFA 2022,,, வாணவெடிகள் (வானவேடிக்கை) தொடக்கம்.” என்று இருந்தது அந்த சேனலின் விளக்கப் பகுதியில், ‘நாங்கள் சீனாவிலிருந்து வந்த அணி’ என்று எழுதப்பட்டுள்ளது.

விசாரணையை மேற்கொண்டு நடத்தும்படி, மைக்கேல் லீயின் சமூக ஊடகப் பயன்பாட்டை நாங்கள் ஆராய்ந்தோம். அதில் வைரலான காணொளி நவம்பர் 15, 2022 அன்று ட்வீட் செய்யப்பட்டதாக நாங்கள் கண்டறிந்தோம். வைரலான காணொளியைப் போன்ற ஒரு மேக்கிங் காணொளியின்  ஸ்கிரீன்ஷாட்டையும் லீ ட்வீட் செய்துள்ளார்.

மேலும் தகவலுக்காக, ட்விட்டர் வழியாக மைக்கேல் லீயை அணுகினோம். லீ எங்களிடம், “இந்த வீடியோ அவரது படைப்புகளில் ஒன்றாகும், இது CGI விளைவுகளுடன் செய்யப்பட்டது” என்று கூறினார்.

பல செய்தி அறிக்கைகளின்படி, FIFA உலகக் கோப்பை 2022 தொடக்க விழா 20 நவம்பர் 2022 அன்று நடைபெற்றது, அதன்போது வாணவெடிகள் வெடிக்கும் காணொளியை நீங்கள் இங்கே காணலாம், இது வைரலான காணொளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது ஆகும்.

விசாரணையின் முடிவில், தவறான கூற்றுகளுடன் இந்த காணொளியைப் பகிர்ந்த பயனரின் சுயவிவரத்தை தேடினோம். பயனரை 152K பேர் பின்தொடர்கிறார்கள் மற்றும் சுயவிவரத்தின்படி பயனர் ஐக்கிய இராச்சியத்தில் (United Kingdom) வசிக்கிறவர் ஆவார்.

முடிவு: ஃபிஃபா உலகக் கோப்பை தொடக்க விழா என்ற பெயரில் பகிரப்பட்ட வைரலான காணொளியானது விஸ்வாஸ் நியூஸ் விசாரணையில் பொய்யானது என கண்டறியப்பட்டுள்ளது. உண்மையில் இந்த காணொளி டிஜிட்டல் கருவிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்டது ஆகும்.

Misleading
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்