புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்): பெண் ஒருவர் நாகப்பாம்பை கையில் பிடித்திருக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சில பயனர்கள் இது மும்பையில் உள்ள லைஃப் இன்சூரன்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்திலிருந்து எடுக்கப்பட்ட காணொளி என்று கூறுகின்றனர்.
விஸ்வாஸ் நியூஸ் வைரலான பதிவை விரிவாக சரிபார்த்ததில், அந்த காணொளிக்கும் மும்பைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கண்டறியப்பட்டது. இதை எல்ஐசியும் மறுத்துள்ளது. அசல் காணொளி சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூரிலிருந்து எடுக்கப்பட்டது, அங்கு செப்டம்பர் 28, 2022 அன்று ஒரு மருத்துவரின் கிளினிக்கில் நாகப்பாம்பு பிடிபட்டது.
‘எக்ஸ்பிரஷன்ஸ் ஆஃப் லைஃப்’ என்ற முகநூல் பக்கம் நவம்பர் 13 அன்று கூறியது: ‘இன்று காலை, சாண்டாகுரூஸ் மேற்கில் உள்ள எல்ஐசியின் மும்பை கார்ப்பரேட் அலுவலகத்தின் பதிவு அறையில் பெரிய நாகப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. தீயணைப்பு துறை பெண் ஒருவர் அந்த பாம்பை பிடித்தார்; அந்தப் பாம்பின் கண்களை மூடுவதுடன் அதை எப்படி கையாள்வது என்று அவளுக்குத் தெரியும், உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது.’
இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே அணுகலாம்.
விஸ்வாஸ் நியூஸ் மும்பையை சேர்ந்த காணொளி எனக்கூறப்படும் வைரலான இந்த காணொளியின் உண்மைத்தன்மையை சரிபார்க்க பல்வேறு ஆன்லைன் கருவிகளைப் பயன்படுத்தியது. முதலில் நாங்கள் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் டூலைப் பயன்படுத்தினோம் ஆனால் அசல் காணொளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை; இருப்பினும், இந்த காணொளியில் உள்ள அதே பெண்ணின் மற்றொரு காணொளியைக் கண்டுபிடித்தோம்.
இது, கமல் சவுத்ரி பாம்பு மீட்புக் குழு பிலாஸ்பூர் என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றப் பட்டிருந்தது. இந்த சேனலில் பாம்புகள் தொடர்பான பல காணொளிகளை நாங்கள் கண்டோம்.
விசாரணையை முன்னோக்கி எடுத்துச் சென்ற விஸ்வாஸ் நியூஸ், பிலாஸ்பூரைச் சேர்ந்த கமல் சவுத்ரியை தொடர்பு கொண்டது. அவர், “வைரலாகும் காணொளிக்கும் மும்பைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். இந்த வீடியோ செப்டம்பர் 28 அன்று இரவு 8 மணிக்கு படமாக்கப்பட்டது. இது சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள புத்தியா மருத்துவமனையிலிருந்து எடுக்கப்பட்ட காணொளி. அந்த வீடியோவில் இருக்கும் பெண் ஆர்த்தி என்பவர், அவருடன் பல வருடங்களாக பணியாற்றி வருகிறார்.
புத்தியா மருத்துவமனையில் பிடிபட்ட ஒரு நாகப்பாம்பின் மற்றொரு காணொளியின் விவரங்களையும் அவர் வழங்கினார். இந்த காணொளியில், டாக்டர் ரஷ்மி புத்தியா என்ற பெயர் பலகையை பின்னணியில் காணலாம்.
மேலும், விஸ்வாஸ் நியூஸ் புத்தியா மருத்துவமனையை கூகுள் மேப்பில் தேடிப்பார்த்து, மருத்துவமனை பற்றிய தகவல்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டது. டாக்டர் ரஷ்மி புத்தியா இந்த மருத்துவமனையுடன் தொடர்புடையவர் என்பதையும் ஒரு கூகுள் தேடுதல் தெரியப்படுத்தியது.
சமூக ஸ்கேனிங்கில், எக்ஸ்பிரஷன்ஸ் ஆஃப் லைஃப் என்ற முகநூல் பக்கம் 169 பின்தொடர்பவர்களைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தோம், மேலும் அதற்கு அதன் சொந்த யூடியூப் பக்கமும் உள்ளது.
முடிவுரை: செப்டம்பர் 28, 2022 அன்று ஒரு மருத்துவரின் கிளினிக்கில் நாகப்பாம்பு பிடிபட்டது. சம்மந்தமாக வைரலான காணொளி, சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் அமைந்துள்ள புத்தியா மருத்துவமனையில் இருந்து எடுக்கப்பட்டதே தவிர மும்பையில் உள்ளது அல்ல,
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923