உண்மைச் சரிபார்ப்பு: வீடியோவில் இருப்பவர் யூடியூபர் நிதிஷ் ராஜ்புத், முன்னாள் ஐபிஎஸ் ஷைல்ஜகாந்த் மிஸ்ரா அல்ல.
விஸ்வாஸ் செய்தி விசாரணையில், ஐபிஎஸ் ஷைல்ஜகாந்த் மிஸ்ரா பெயரில் வைரலான வீடியோ குறித்து கூறப்பட்ட கூற்று பொய்யானது. வீடியோவில் காணப்பட்ட நபர் தொழிலதிபரும் யூடியூபருமான நிதிஷ் ராஜ்புத் ஆவர்.
- By: Pragya Shukla
- Published: Sep 7, 2022 at 11:36 AM
விஸ்வாஸ் செய்தி (புது டெல்லி). அரசியல் பிரச்சினைகள் மற்றும் குற்றங்கள் குறித்து ஒருவர் பேசும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காணொளியைப் பகிர்ந்துகொண்டு, இவர் 1977 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி என்றும் லக்னோவின் காவல்துறைத் தலைமை இயக்குனர் ஷைல்ஜகாந்த் மிஸ்ரா என்றும் பயனர்கள் கூறுகின்றனர். விஸ்வாஸ் நியூஸ் விசாரணையில், வைரலான இந்தக் கூற்று தவறானது என்று தெரிந்தது. காணொளியில் காணப்பட்ட நபர் தொழிலதிபரும் யூடியூபருமான நிதிஷ் ராஜ்புத் ஆவர்.
வைரலான இடுகையில் என்ன இருக்கிறது ?
ட்விட்டர் ஹேண்டில் @waterskytradex (Archive) 45 வினாடிகள் கொண்ட வீடியோவைப் பதிவேற்றி, “ஐபிஎஸ் அதிகாரி ஷைலஜகாந்த் மிஸ்ரா. #உண்மையான இந்தியன்” என்று ஆங்கிலத்தில் எழுதினார்.
விசாரணை
வைரலான வீடியோவின் உண்மைத் தன்மையை அறிய, நாங்கள் அந்த வீடியோவின் பல கீஃப்ரேம்களை பிரித்தெடுத்து, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் உதவியுடன் தேடினோம். ஜூலை 26 அன்று நாங்கள் நிதிஷ் ராஜ்புத் என்ற யூடியூப் சேனலில் பதிவேற்ப்பட்ட முழுமையான காணொளியை கண்டுபிடித்தோம். இந்த சேனலைச் சரிபார்த்தபோது, அந்த வீடியோவில் காணப்பட்டவரின் பெயர் நிதீஷ் ராஜ்புத் என்பது எங்களுக்கு தெரிந்தது.
மேலும் விசாரணை மேற்கொள்வதற்காக, நாங்கள் நிதிஷ் ராஜ்புத்தின் சமூக ஊடக கணக்குகளை ஸ்கேன் செய்ய ஆரம்பித்தோம். நிதிஷ் ராஜ்புத்தின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் சுயவிவரங்களின்படி, அவர் பொறியியல் பட்டம் பெற்றவரும் தொழில் ரீதியாக ஒரு தொழிலதிபரும் ஆவார். மேலும், அவருடைய சொந்த யூடியூப் சேனலையும் அவர் நடத்தி வருகிறார்.
இதுவரையுள்ள எங்களுடைய விசாரணையில், வைரலான வீடியோவில் காணப்பட்டவர் ஐபிஎஸ் ஷைல்ஜகாந்த் மிஸ்ரா அல்ல, மாறாக அவர் யூடியூபர் நிதிஷ் ராஜ்புத் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு ஐபிஎஸ் ஷைல்ஜகாந்த் மிஸ்ராவைப் பற்றி தேட ஆரம்பித்தோம். அவர் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி மற்றும் UPBTVP இன் துணைத் தலைவர் என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
இதை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் நிதிஷ் ராஜ்புத்தை அணுகினோம். அவர் எங்களிடம் கூறுகையில், “இந்த காணொளி இயக்குனர் ஷைல்ஜகாந்த் மிஸ்ரா என்று வைரலானது தவறானது. இந்த காணொளி என்னுடையது, நான் ஐபிஎஸ் அதிகாரி அல்ல. நான் தொழில் ரீதியாக ஒரு தொழிலதிபர் மற்றும் யூடியூபர் ஆவேன்.”
விசாரணையின் முடிவில், விஸ்வாஸ் செய்தி ‘அமித் ஷா’ என்ற பயனரை சமூக ஊடகங்களினூடாக ஸ்கேன் செய்தது. 221 பேர் ட்விட்டரில் இந்த பயனரைப் பின்தொடர்கின்றனர். சுயவிவரத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, பயனர் ஜூலை 2010 முதல் செயலில் உள்ளார்.
निष्कर्ष: விஸ்வாஸ் செய்தி விசாரணையில், ஐபிஎஸ் ஷைல்ஜகாந்த் மிஸ்ரா பெயரில் வைரலான வீடியோ குறித்து கூறப்பட்ட கூற்று பொய்யானது. வீடியோவில் காணப்பட்ட நபர் தொழிலதிபரும் யூடியூபருமான நிதிஷ் ராஜ்புத் ஆவர்.
- Claim Review : ஐபிஎஸ் ஷைல்ஜகாந்த் மிஸ்ராவின் வீடியோ.
- Claimed By : முகநூல் பயனர் அமித் ஷா
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.