புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்). பல்வேறு சமூக வலைதளங்களில் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அவர்கள் நின்று கொண்டிருந்த கான்கிரீட் ஸ்லாப் இடிந்து விழுந்ததால் ஐந்து பேர் சாக்கடையில் விழுவதை அந்த காணொளி காட்டுகிறது. இந்த சம்பவம் சென்னையில் நடந்ததாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. விஸ்வாஸ் நியூஸ் வைரலான பதிவை சரிபார்த்து, வைரலான காணொளிக்கும் சென்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற முடிவுக்கு வந்தது. இந்த சம்பவம் ராஜஸ்தானில் ஏப்ரல் 2022 இல் நடந்தது.
ஹெச்.ராஜா ஆர்மி என்ற முகநூல் பக்கத்தில், இது சென்னையில் நடந்த சம்பவம் என்று கூறி வைரலாகும் இந்த காணொளியை பதிவிட்டு இருந்தது.
முகநூல் பதிவின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே சொடுக்குவதன் மூலம் பார்க்கலாம்.
வைரலான வீடியோவின் உண்மைத்தன்மையை அறிய விஸ்வாஸ் நியூஸ் முதலில் இந்த காணொளியின் கீஃப்ரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் உதவியுடன் தேடிப் பார்த்தது.
பல செய்தி அறிக்கைகளில் இந்த காணொளியின் ஸ்கிரீன் ஷாட்களைக் நாங்கள் கண்டோம். இந்த காணொளியின் ஸ்கிரீன்ஷாட்டை indianexpress.com. என்ற செய்தி இணையதளத்தில் வெளியான செய்தியில் நாங்கள் காண்கிறோம். செய்தி அறிக்கையின் நடுவில் இந்த காணொளியும் பதிக்கப்பட்டது. நிகழ்வின்படி, “இந்த மாத தொடக்கத்தில் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் தரை இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் சாக்கடையில் விழுந்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி, மோசமான கட்டுமான நடைமுறைகள் பற்றிய உரையாடலைத் தூண்டியது, காட்சிகளில் உள்ள நேரத்தின்படி, இச்சம்பவம் ஏப்ரல் 7 ஆம் தேதி இரவு சுமார் 9.30 மணியளவில் நடந்தது”.
அதைப்போல மற்ற செய்தி இணையதளங்களிலும் இந்த சம்பவம் பற்றிய செய்தி அறிக்கைகளை நாங்கள் கண்டோம். அனைத்து அறிக்கைகளின்படியும், இது ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மரில், ஏப்ரல் 2022 இல் நடந்தத சம்பவம் ஆகும்.
இது சம்பவம் தொடர்பாக ராஜஸ்தானில் உள்ள டைனிக் ஜாக்ரன் நிறுவனத்தின் செய்தி அலுவலக முதன்மையாளர் நரேந்திர சர்மாவை நாங்கள் தொடர்பு கொண்டோம். “காணொளி ஜெய்சல்மரிலுள்ளதுதான்” என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
விசாரணையின் முடிவில் விஸ்வாஸ் நியூஸ், சென்னையின் பெயரில் ஜெய்சல்மர் வீடியோவை வைரலாக்கிய பயனரின் சுயவிவரத்தை தேடிப் பார்த்தோம். முகநூல் பயனரின் சமூக வலைதள தேடுதலில், அந்த பக்கத்தில் 20000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
முடிவுரை: 5 பேர் வாய்க்காலில் விழுந்த வீடியோவுக்கும் சென்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த சம்பவம் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் நடந்துள்ளது.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923