இந்தக் கூற்று தவறானது. இந்த காணொளி தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு லாட்ஜில் எடுக்கப்பட்ட ஒன்றே தவிர, ராஜஸ்தானின் ரன்தம்பூரில் எடுக்கப்பட்டது அல்ல.
புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்). சிறுத்தை ஒன்று குடியிருப்பு முற்றத்தில் சுதந்திரமாக சுற்றித் திரிந்து, அங்குள்ள ஒரு குளத்தில் நீர் குடிக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளி ராஜஸ்தானின் ரன்தம்பூரில் உள்ள தாஜ் ஹோட்டலில் எடுக்கப்பட்டது என்ற கூற்றுடன் இப்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாய் பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்த விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்பதும், அந்த காணொளி தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு லாட்ஜில் எடுக்கப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது.
கூற்று
சிறுத்தை ஒன்று சுதந்திரமாக சுற்றித் திரிந்து, அங்குள்ள ஒரு குளத்திலிருந்து நீர் குடிக்கும் ஒரு காணொளி, ரன்தம்பூரில் உள்ள தாஜ் ஹோட்டல்களில் எடுக்கப்பட்டது என்ற கூற்றுடன் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த இடுகையை இங்கே காணலாம்.
விசாரணை
அந்த காணொளி ரன்தம்பூரில் உள்ள தாஜ் ஹோட்டலில் இருந்து வந்ததாகக் கூறப்பட்டதால், அங்குள்ள தாஜ் நிறுவனத்தின் ஹோட்டல்கள் குறித்து தேடினோம். அவ்வாறு தேடியதில், ரன்தம்பூரில் தாஜ் நிறுவனத்திற்கு சொந்தமான விவந்தா சவாய் மாதோபூர் லாட்ஜ் அமைந்திருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
இந்தக் கூற்றினை சரிபார்க்க தாஜின் மக்கள் தொடர்பு அதிகாரியிடம் பேசியதில் “அந்த காணொளி ரன்தம்பூரில் உள்ள தாஜின் விவந்தா லாட்ஜில் எடுக்கப்பட்டது அல்ல,” என்று அவர் நமக்குத் தெளிவுபடுத்தினார்.
மேலும் இந்த வைரல் காணொளியின் பதிவேற்றம் குறித்து அறிய, அதனை இன்விட் (InVID) கருவியில் பதிவேற்றி, அதன் கீஃப்ரேம்களை கூகுளின் தலைகீழ் படக் கருவியைப் (Google Reverse Image Tool) பயன்படுத்தி தேடினோம்.
அவ்வாறு தேடியதில், இந்த குறிப்பிட்ட காணொளியை எங்களால் எங்கும் இயலவில்லை, ஆனால் தென்னாப்பிரிக்காவில் ஒரு லாட்ஜில் சிறுத்தை ஓய்வெடுப்பதைக் கண்டு மக்கள் திகைத்துப் போயிருப்பதாகக் கூறும் பல ஊடக அறிக்கைகள் எங்களுக்குக் கிடைத்தன. அந்தச் செய்திகளில் கொடுக்கப்பட்டிருந்த விளக்கம் இந்தக் காணொளியுடன் மிகவும் ஒத்திருந்தது. அந்த செய்திகளின் மூலம், இந்தக் காணொளி தென்னாப்பிரிக்காவின் சபி சாண்ட் பிரைவேட் ரிசர்வ் பகுதியில் அமைந்துள்ள சிங்கிடா போல்டர்ஸ் லாட்ஜில் எடுக்கப்பட்டது என்பதை எங்களால் அறிந்து கொள்ள முடிந்தது.
மேலும் தென்னாப்பிரிக்காவின் சிங்கிடா போல்டர்ஸ் லாட்ஜில் சிறுத்தை ஒன்று சுதந்திரமாக நடக்கும் மற்றொரு காணொளியும் எங்களுக்குக் கிடைத்தது.
சிங்கிடா போல்டர்ஸ் லாட்ஜின் கூடுதல் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை நாங்கள் தேடியதில், செலஸ்டீல் என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றிய காணொளியில், அந்த லாட்ஜினை முழுமையாக எங்களால் காண முடிந்தது. அதில் சரியாக 4 நிமிடங்கள் 38 வினாடிகளில், அந்த வைரல் காணொளியில் காட்டப்பட்டுள்ள குளத்தினையும் எங்களால் காண முடிந்தது.
மேலும் தென்னாப்பிரிக்காவின் சிங்கிடா போல்டர்ஸ் லாட்ஜில் சிறுத்தை ஒன்று சுதந்திரமாக நடக்கும் மற்றொரு காணொளியும் எங்களுக்குக் கிடைத்தது.
சிங்கிடா போல்டர்ஸ் லாட்ஜின் கூடுதல் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை நாங்கள் தேடியதில், செலஸ்டீல் என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றிய காணொளியில், அந்த லாட்ஜினை முழுமையாக எங்களால் காண முடிந்தது. அதில் சரியாக 4 நிமிடங்கள் 38 வினாடிகளில், அந்த வைரல் காணொளியில் காட்டப்பட்டுள்ள குளத்தினையும் எங்களால் காண முடிந்தது.
அவை இரண்டிற்கும் இடையிலான ஒற்றுமையை கீழே காணலாம்.
மேலும் சிங்கிடா போல்டர்ஸ் லாட்ஜ் பதிவேற்றிய பல புகைப்படங்களிலும், சிறுத்தை நீர் குடித்த அதே குளத்தினை எங்களால் காண முடிந்தது. இதனைத்
தெளிவுபடுத்த சிங்கிடா போல்டர்ஸ் லாட்ஜை தொடர்பு கொண்டு, அதன் ஊழியரான டேனியலுடன் பேசியதில் காணொளியில் காட்டப்பட்டுள்ள காட்சி அவர்களின் லாட்ஜிலிருந்து வந்ததுதான் என்றும், அத்தகைய காட்சிகள் அங்கு மிகவும் சாதரணமானவை என்றும் அவர் கூறினார்.
தவறான கூற்றுக்களுடன் காணொளியைப் பகிர்ந்த பல பயனர்களில் பேஸ்புக் பயனர் சமீர் படேலும் ஒருவர். அவரது கணக்கினை ஆராய்ந்ததில், அவர் 2,660 பின்தொடர்பவர்களைக் கொண்டவர் என்பதும், அவர் மெஹ்சானாவில் வசிப்பவர் என்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்தக் கூற்று தவறானது. இந்த காணொளி தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு லாட்ஜில் எடுக்கப்பட்ட ஒன்றே தவிர, ராஜஸ்தானின் ரன்தம்பூரில் எடுக்கப்பட்டது அல்ல.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923