Fact Check: கிராம மக்களுடன் காணப்படும் சிறுத்தைப்புலி குடிபோதையில் இல்லை, நரம்பியல் கோளாறால் அவதிப்பட்டு வருகிறது

புதுடெல்லி விஷ்வாஸ் நியூஸ் – சிறுத்தையின் அருகில் சிலர் நடந்து செல்லும் காட்சிகள் கொண்ட சிறுத்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் சிறுத்தை மெதுவாக நகர்வதை அதில் காண முடிகிறது. சமூக ஊடகங்களில் சில பயனர்கள் இந்த வீடியோவை, தாராகர் கிராமத்தைச் சேர்ந்தது என்று கூறி, சிறுத்தை மதுபானத்தை உட்கொண்டதால் அது சோம்பலாக உள்ளது என பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ யூடியூப் ஷார்ட்ஸிலும் மிகவும் வைரலானது.

வைரலான பதிவை விஷ்வாஸ் நியூஸ் ஆய்வு செய்தது. அந்தக் கூற்று போலியானது என நிரூபிக்கப்பட்டது. உண்மையில், இந்த வீடியோ மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தது. நரம்பியல் கோளாறு காரணமாக இந்த சிறுத்தை இவ்வாறு இருந்துள்ளது.

எது வைலராகிறது

ஃபேஸ்புக் பயனர் சோனு சிங் செப்டம்பர் 4 அன்று தனது கணக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டு அதில் இவ்வாறு பகிர்ந்துள்ளார், “தாராகர் கிராமத்தில் உள்ள சிறுத்தை மதுபான ஆலையில் இருந்து பதனிடாத சாராயத்தை குடித்துவிட்டு தான் ஒரு சிங்கம் என்பதை மறந்துவிட்டது, மனிதனோ மது அருந்தியதும் சிறுத்தையாக மாறுகிறான்”

போஸ்ட்டின் உள்ளடக்கத்தை அப்படியே இங்கே படிக்கலாம். பலர் அதை உண்மை என்று நம்பியதால் இந்த போஸ்ட் பரவலாக பகிரப்பட்டது. போஸ்ட்டின் ஆர்ச்சிவ் பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

வைரல் வீடியோவின் தோற்று மூலத்தைக் கண்டறிய விஷ்வாஸ் நியூஸ் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் தேடலைப் பயன்படுத்தியது. முதலில் வீடியோவிலிருந்து பல கீஃப்ரேம்கள் இன்விட் கருவியின் உதவியுடன் பிரித்தெடுக்கப்பட்டன, பின்னர் தேடல் செய்யப்பட்டது.

தேடுதலில், இதேபோன்ற வீடியோ பல்வேறு செய்தி இணையதளங்களிலும் சமூக ஊடக கணக்குகளிலும் பதிவேற்றப்பட்டு இருப்பதைக் கண்டோம். ரிபப்ளிக் பாரத் என்ற செய்தி சேனலின் யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ, ஆகஸ்ட் 30 அன்று பகிரப்பட்டது.

கொடுக்கப்பட்ட தகவலின்படி, “மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் இருந்து ஒரு விசித்திரமான வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இங்கு கிராம மக்கள் சிறுத்தையை சுற்றி வளைத்து விளையாட ஆரம்பித்தனர். இவ்வளவு அமைதியான சிறுத்தையை நீங்கள் அரிதாகவே கண்டிருப்பீர்கள். இந்த வழக்கு, தேவாஸ் மாவட்டத்தின் டோன்குர்ட் தாலுகாவின் பிபால்ராவன் காவல் நிலையத்திற்கு உட்பட்டது, அங்கு நோய்வாய்ப்பட்ட சிறுத்தையுடன் செல்ஃபி எடுக்கும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.”

தேடுதலின் போது Naiduniya.com என்ற தளத்திலும் இந்தச் செய்தி கிடைத்தது. செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, “தேவாஸின் இக்லேரா கிராமத்தில் நோய்வாய்ப்பட்ட சிறுத்தைக்கு கேனைன் டிஸ்டெம்பர் தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, இந்தூரில் உள்ள கமலா நேரு விலங்கியல் மியூசியத்தில் கவலை அதிகரித்துள்ளது. மீதமுள்ள விலங்குகளை தொற்றுநோயிலிருந்து காப்பாற்ற, உயிரியல் பூங்காவில் இருந்து வேறு இடத்திற்கு சிறுத்தை மாற்றப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தேவாஸ் வனத்துறையினர் சிறுத்தையை மீட்டனர். இப்போது சிறுத்தை மற்ற வன விலங்குகள் தொடர்பு கொள்ளாத இடத்தில் வைக்கப்படும். சோங்காச் வனப் பகுதி தனிமைப்படுத்தப்படுவதற்கு சிறந்தது என்றும், கால்நடை மருத்துவர்கள் மற்றும் வன ஊழியர்கள் அதைக் கண்காணிக்க முடியும் என்றும் வன அதிகாரிகள் தெரிவித்தனர். இரத்தம் – உமிழ்நீர் மற்றும் மலம் – சிறுநீர் ஆகியவற்றின் மருத்துவ அறிக்கையில், சிறுத்தை கேனைன் டிஸ்டெம்பர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. வைரஸ் மூளையை மிகவும் பாதித்தது. நரம்பியல் கோளாறு காரணமாக, சிறுத்தை தனது ஆக்ரோஷத் தன்மையையும், நினைவாற்றலையும் இழந்துள்ளது” என்றார். முழு செய்தியையும் இங்கே படிக்கவும்.

சமூக ஊடகத் தேடலில், NDTVயின் அதிகாரப்பூர்வ X ஹேண்டிலில் பகிரப்பட்ட இந்த வீடியோவைக் கண்டோம், அதில் சம்பவம் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இடுகை ஆகஸ்ட் 30, 2023 அன்று பதிவேற்றப்பட்டது.

இந்தூர் உயிரியல் பூங்காவின் பொறுப்பாளர் உத்தம் யாதவை விஷ்வாஸ் நியூஸ் தொடர்பு கொண்டது. அவர் கூறுகையில், “வைரலாக வந்த பதிவு தவறானது. இந்த வீடியோ தேவாஸின் இக்லேரா கிராமத்தில் எடுக்கப்பட்டது.

இந்த சிறுத்தை கேனைன் டிஸ்டெம்பர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வைரஸ் நோய் மற்றும் இந்த நோயின் வைரஸ் சிறுத்தையின் மூளையை பாதித்துள்ளது. நரம்பியல் கோளாறு காரணமாக ஆக்ரோஷத்தை மறந்துவிட்டது. அதனால் கிராம மக்களை சிறுத்தை தாக்கவில்லை” என்றார்.

முடிவு: விஷ்வாஸ் நியூஸ் நடத்திய விசாரணையில், சிறுத்தை ஆலையிலிருந்து மதுபானத்தை குடித்ததாகக் கூறப்பட்ட வைரலான பதிவு தவறானது என்று கண்டறியப்பட்டது. மூளை நோயால் பாதிக்கப்பட்ட சிறுத்தையின் வைரல் வீடியோ, தவறான கூற்றுகளுடன் வைரலாகி வருகிறது.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்