குஜராத்தில் நடந்த சம்பவம் போல பகிரப்பட்ட அரசியல் தொண்டர்களுக்கிடையேயான மோதலின் வைரல் வீடியோ தெலுங்கானாவில் உள்ள ஜங்காவ் நகரத்தை சேர்ந்த பழைய காணொளி ஆகும்.
புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்): சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்படும் வீடியோவை விஸ்வாஸ் நியூஸ் கண்டது. இரு அரசியல் குழுக்களிடையே மோதல் ஏற்படுவதை வீடியோவில் காணலாம். இந்த வீடியோ குஜராத்தைச் சேர்ந்தது என்றும், இது சமீபத்தியது என்றும் சமூக ஊடக பயனர்கள் கூறி வருகின்றனர்.
இருப்பினும், விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் அந்த வீடியோ தெலுங்கானாவில் இருந்து பாஜக மற்றும் டிஆர்எஸ் தொண்டர்களுக்கு இடையேயான மோதலின் பழைய வீடியோ என்று கண்டறியப்பட்டது.
ட்விட்டர் பயனர் தர்மேந்திர வவ்லியா தனது சுயவிவரத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துகொண்டு குஜராத்தியில் எழுதினார்:
மொழிபெயர்ப்பு: முன்பு மற்ற மாநிலங்களில் பாஜக உறுப்பினர்களை வெந்தயத்தைச் சுவைக்க வைப்பது என்பது ஒரு வழக்கமாக இருந்தது, இப்போது குஜராத்திலும் அதுபோல தொடர்கிறது.
இடுகை மற்றும் காப்பக பதிப்பை இங்கே பார்க்கவும்
வைரலான பதிவின் கருத்துகளை சரிபார்த்து விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையைத் தொடங்கியது.
இந்த வீடியோ குஜராத்தைச் சேர்ந்தது இல்லை என்று பல பயனர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
விஸ்வாஸ் நியூஸ் பின்னர் InVid கருவியில் வீடியோவைப் பதிவேற்றி, ஸ்கிரீன் கிராப்களை பிரித்தெடுத்தது.
சில ஸ்கிரீன் கிராப்களை பெரிதாக்கி சில விஷயங்களை கவனித்தோம். கடைகளில் பலகைகள் தென்னிந்திய மொழியில் இருந்தன, மேலும் போலீஸ் நிறுத்தத்தில் உள்ள காணொளியில் ‘ஜனகான் போக்குவரத்து போலீஸ்’ என்று தெளிவாக படிக்கலாம்.
அந்த காணொளியில் உள்ள இளஞ்சிவப்பு நிற கொடிகள் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் (டிஆர்எஸ்) தொண்டர்கள் என்பதை உணர்த்துகின்றன. இதனால் அந்த காணொளி தெலுங்கானாவை சேர்ந்தது என்பது தெரியவந்தது.
பொருத்தமான முக்கிய வார்த்தைகளைத் தேடிய பிறகு, பிப்ரவரி 10, 2022 அன்று ஒன்இந்தியா செய்தியில் பதிவேற்றப்பட்ட யூடியூப் காணொளியை நாங்கள் கண்டோம். அந்த விளக்கத்தில், “பிரதமருக்கு எதிராக மோடி-எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில் டிஆர்எஸ் மற்றும் பாஜக இடையே மோதல் ஏற்பட்டது.”
இந்த யூடியூப் வீடியோ வைரலான வீடியோவுக்கு மிகவும் ஒப்பாகவே இருந்தது.
விசாரணையின் அடுத்த கட்டமாக, விஸ்வாஸ் நியூஸ் தெலுங்கானா செய்தியாளர் ராகுல் தேவுலாபள்ளியை அணுகியது. வைரலான காணொளி பழையது என்றும் அது தெலுங்கானாவின் ஜங்கான் நகரத்தில் இருந்து வெளியான காணொளி என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
விசாரணையின் கடைசி கட்டத்தில் வைரல் வீடியோவைப் பகிர்ந்த சமூக ஊடக பயனரிடம் விஸ்வாஸ் நியூஸ் அதன் சமூக பின்னணி பற்றி சோதனை நடத்தியது. தர்மேந்திர வவ்லியா குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் என்றும் அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்றும் நாங்கள் கண்டுபிடித்தோம். அவர் ஜனவரி 2021 இல் ட்விட்டரில் சேர்ந்தார்
निष्कर्ष: குஜராத்தில் நடந்த சம்பவம் போல பகிரப்பட்ட அரசியல் தொண்டர்களுக்கிடையேயான மோதலின் வைரல் வீடியோ தெலுங்கானாவில் உள்ள ஜங்காவ் நகரத்தை சேர்ந்த பழைய காணொளி ஆகும்.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923