உண்மைச் சரிபார்ப்பு: பயணச்சீட்டு பரிசோதகர் (டிடிஇ) பயணியிடம் தவறாக நடந்து கொண்ட வைரலான காணொளி டெல்லி-பாட்னா ரயிலில் நடந்த நிகழ்வாகும், மாறாக தமிழ்நாட்டில் அல்ல

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்): ரயிலில் பயணித்த பயணியிடம் பயணச்சீட்டு பரிசோதகர் (டிடிஇ – டிராவலிங் டிக்கெட் எக்ஸாமினர்) தவறாக நடந்து கொண்ட காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தை விட்டு வெளியேறும் பீகாரில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களாகிய பயணிகள் என்ற கூற்றுடன் அந்த காணொளி பகிரப்பட்டு வருகிறது. விஸ்வாஸ் நியூஸ் குழு வைரலான கூற்றறின் உண்மைத்தன்மையை சரிபார்த்து, அந்தக் கூற்று தவறான கோணத்துக்கு வழிநடத்துவதாகக் கண்டறிந்தது. நாங்கள் நடத்திய விசாரணையில், இந்த காணொளியானது புதுடெல்லியில் இருந்து பீகார் மாநிலம் பாட்னாவுக்கு செல்லும் சம்பூர்ண கிராந்தி எக்ஸ்பிரஸில் இருந்து எடுக்கப்பட்டதாக தெரியவந்தது. இந்த நிகழ்வை தமிழ்நாட்டுடன் இணைக்கும் தவறான கூற்றுடன் இப்போது பகிரப்பட்டு வருகிறது. காணொளியில் காட்டப்பட்டுள்ள சம்பவம் பீகார் மாநிலம் தானாபூரில் நடந்துள்ளது. இந்த காணொளியை எடுத்த யூடியூபரும் இதை தனது கேமராவில் உறுதி செய்தார்.

உரிமைகோரல்:

முகநூல் பக்கம் கோரக்புரியா (காப்பக இணைப்பு) மார்ச் 9 அன்று 26 வினாடிகள் கொண்ட வீடியோ கிளிப் ஒன்றை பதிவேற்றி எழுதியதாவது, “தமிழ்நாட்டை விட்டு ஓடி வரும் பீஹாரிகளுக்கு சிலர் இப்படித்தான் டிடி டிக்கெட்டுகளை வழங்குகிறார்கள். டிடியின் இத்தகைய நடத்தை சரியா, அவர் சீருடை கூட அணியவில்லை”.

https://twitter.com/Tiwari_Sintu999/status/1633377504617697280

“தமிழ்நாட்டை விட்டு ஓடி வரும் பீஹாரிகளுக்கு சிலர் இப்படித்தான் டிடி டிக்கெட்டுகளை வழங்குகிறார்கள். டிடியின் இத்தகைய நடத்தை சரியா, அவர் சீருடை கூட அணியவில்லை” என்ற கூற்றுடன் சிந்து திவாரி என்ற பெயரைக் கொண்ட ட்விட்டர் பயனர் மார்ச் 8 அன்று இந்த வீடியோ கிளிப்பைப் பதிவேற்றினார்.

விசாரணை:

விஸ்வாஸ் நியூஸ் முதலில் வைரலான காணொளியை கவனமாக பார்த்தது. இந்த காணொளியில், சம்பூர்ண கிராந்தி சூப்பர்ஃபாஸ்ட் ரயிலைப் பற்றி ஒருவர் குறிப்பிடுவதைக் கேட்கலாம். பின்பு, நாங்கள் இந்த இடுகையின் கருத்துகள் பகுதியை ஆய்வு செய்தோம். அந்தக் கருத்துக்களில் ஒன்றில், ரயில்வே துறை மார்ச் 9 அன்று தானாபூர் கோட்டத்தின் கோட்ட ரயில்வே மேலாளரின் (டிஆர்எம்) அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த விஷயம் குறித்து தெரிவிக்கப்பட்டு வருவதாகக் கூறியது. மேலும், இந்த கருத்துகளில், இந்த ரயில் புது தில்லி மற்றும் பாட்னா இடையே ஓடுவதாகவும், வைரலான கூற்று போலியானது என்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

தேடுதலின் போது, ‘ரன் ஆன் ட்ராக்’ என்ற பெயர் கொண்ட ட்விட்டர் பக்கத்தில் மார்ச் 13 அன்று வைரலான இந்த காணொளி தொடர்பான ட்விட்டர் பதிவை மறு ட்வீட் செய்து, “நான் இந்த காணொளியை படம் பிடித்துள்ளேன்” என்று எழுதினார். இது, டெல்லியில் இருந்து பாட்னா வரும் சம்பூர்ண கிராந்தி எக்ஸ்பிரஸின் காணொளி ஆகும். இதற்கும் தமிழ்நாடு மாநிலத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அனைத்து மக்களும் ஹோலி கொண்டாட டெல்லியில் இருந்து பீகார் சென்று கொண்டிருந்தனர்.

இந்த விசாரணையை முன்னெடுத்துச் சென்றதோடு, யூடியூப்பில் ‘ரன் ஆன் ட்ராக்’ என்ற சேனலையும் நாங்கள் தேடிப் பார்த்தோம். இந்த சேனலில் மார்ச் 3, 2023 அன்று முழு காணொளியும் பதிவேற்றப்பட்டிருந்தது. காணொளியில், புது தில்லியிலிருந்து பாட்னா செல்லும் சம்பூர்ண கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியின் நிலை குறித்து ஆந்த யூடியூபர் விவரித்தார்.

https://twitter.com/RunOnTrack4/status/1635318824282238982

‘ரன் ஆன் ட்ராக்’ என்ற யூடியூப் சேனலின் மாடரேட்டரான கணேஷை விஸ்வாஸ் நியூஸ் தொடர்பு கொண்டது. அவர் கூறியதாவது, “வைரலான கிளிப் அசல் காணொளியின் ஒரு முழுமையற்ற பகுதியாகும். தமிழ்நாட்டுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது சம்பூர்ண கிராந்தி சூப்பர்ஃபாஸ்ட் ரயிலின் காணொளியாகும். ஹோலி பண்டிகைக்கு முன், டெல்லியில் இருந்து பாட்னா செல்லும் இந்த ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த டிடிஇ சம்பவம் பீகார் மாநிலம் தானாபூரில் நடந்துள்ளது”.

கடைசி கட்ட விசாரணையில், ‘கோரக்புரியா’ என்ற முகநூல் பக்கத்தின் சமூக ஸ்கேனிங் செய்யப்பட்டது. இந்த பக்கத்தை 3.87 லட்சம் பேர் பின்தொடர்வது தெரிய வந்தது. கோரக்பூரிலிருந்து இயக்கப்படும் இந்தப் பக்கத்தில் பல வகையான வைரலான தரவுகள் உள்ளன.

முடிவுரை: விஸ்வாஸ் நியூஸ் விசாரணையில், டிடிஇ பயணிகளிடம் தவறாக நடந்து கொள்ளும் வீடியோவுக்கும், தமிழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கண்டறியப்பட்டது. ஹோலி பண்டிகைக்கு முன் புதுதில்லியில் இருந்து பாட்னா நோக்கிச் செல்லும் சம்பூர்ண கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Misleading
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்