X
X

உண்மை சரிபார்ப்பு: மயான்மாரில் பரிசோதனை முறையில் பிரம்மோஸ் ஏவுகணை ஏவப்பட்டதாகப் பகிரப்படும் காணொளி, இந்தியாவிலிருந்து சென்றது

உண்மை சரிபார்ப்பு: மயான்மாரில் பரிசோதனை முறையில் பிரம்மோஸ் ஏவுகணை ஏவப்பட்டதாகப் பகிரப்படும் காணொளி, இந்தியாவிலிருந்து சென்றது .

  • By: Ankita Deshkar
  • Published: Jun 29, 2022 at 02:31 PM
  • Updated: Jul 1, 2022 at 04:30 PM

புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்): மயான்மார் வெற்றிகரமாக ஒரு பிரம்மோஸ் சூப்பர்சானிக் க்ரூயிஸ் ஏவுகணையை பரிசோதனைக்காக ஏவியது என்ற க்ளைமுடன் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு காணொளியின் ஸ்க்ரீன்க்ராப் போல் காணப்பட்ட ஒரு காணொளி மற்றும் படங்களைக் விஷ்வாஸ் நியூஸ் பார்த்தது. அந்தக் காணொளி மயான்மாரிளிருந்து அல்ல என்றும் பிரம்மோஸ் சூப்பர்சானிக் க்ரூயிஸ் ஏவுகணையின் அந்த பரிசோதனை ஏவுதல் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இந்தியா மற்றும் ரஷ்யாவாஸ் இணைந்து செய்யப்பட்டது. என்றும் தன்னுடைய புலன் விசாரணையின் மூலம் விஷ்வாஸ் நியூஸ் கண்டுபிடித்தது.

க்ளைம்:

ஃபேஸ்புக் பயனர் Newwave Bgf Ko Ko ஃபேஸ்புக் கணக்கில் ஒரு காணொளியைப் பதிவிட்டு பர்மிய மொழியில் எழுதினார். நீக்கப்பட்டது.

மொழிபெயர்ப்பு: பிரம்மோஸ் சூப்பர்சானிக் க்ரூசிபிள் ஏவுகணை மயான்மார் ராணுவத்தால் (கோகோ தீவு) crd #Newwave ஏவப்பட்டது என்பதை நான் பெருமையுடன் கூறுகிறேன்.

பதிவு மற்றும் அதன் ஆவணப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணவும்.

அதே காணொளியின் ஸ்க்ரீன்க்ராப் போலத் தோற்றமளிக்கும் படங்களை சில பயனர்கள் பதிவிட்டிருப்பதையும் நாங்கள் கண்டு பிடித்தோம்.

புலன்விசாரணை:

முதலில் இந்தக் காணொளியை இன்விட் சாதனத்தில் விஸ்வாஸ் நியூஸ் அப்லோட் செய்துவிட்டு பிறகு பல ஸ்க்ரீன்க்ராப்களை எடுத்தது.

பிறகு நாங்கள் அனைத்து படங்கள் மேலும் ஒரு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலை ஒட்டி வந்த முடிவுகளைத் தேடினோம்.

ட்விட்டர் ஹேண்டில் ‘Mint’ @livemint-இல் #கவனம் | தரையிலிருந்து தரையைத் தாக்கும் கொடிய சூப்பர்சானிக் க்ரூயிஸ் ஏவுகணை #பிரம்மோஸ் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது என்ற தலைப்புடம் பகிரப்பட்ட இந்தக் காணொளியை விஷ்வாஸ் நியூஸ் கண்டுபிடித்தது .

ட்விட்டர் ஹேண்டில் @livefist ‘LiveFist’-இல் அந்தமான் தீவுகளில் இன்றைய பிரம்மோஸ் ER ஏவுதல் குறித்து ஒரு குடிமகனின் காணொளி என்ற தலைப்புடன் இந்தக் காணொளியை நாங்கள் கண்டுபிடித்தோம்.

இந்தக் காணொளி Defence Squad-இன் ட்விட்டர் ஹேண்டிலிலும் காணப்பட்டது.

Frontline-இன் வலைத்தளத்திலும் இந்தத் தலைப்போடு ஒரு கட்டுரையை விஷ்வாஸ் நியூஸ் கண்டுபிடித்தது: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலிருந்து அதிகரிக்கப்பட்ட தூர பதிப்பு பிரம்மோஸ் க்ரூயிஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது.

மார்ச் 24, 2022 அன்று பிரசுரிக்கப்பட்ட கட்டுரை சொல்கிறது, “மார்ச் 23 அன்று இந்தியா அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள ஏவுதளத்திலிருந்து அதிகரிக்கப்பட்ட தூர பதிப்பான ஒரு நிலத்திலிருந்து நிலத்தில் தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சானிக் க்ரூயிஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தது. “அதிகரிக்கப்பட்ட தூர பிரமோஸ் ஏவுகணை அதன் இலக்கை மிகத் துல்லியத்துடன் தாக்கியது” என்று இந்த ஏவுதல் முயற்சியோடு தொடர்புள்ள அதிகாரிகள் கூறினர்.

NDTV -யும் அதிகரிக்கப்பட்ட தூர பிரம்மோஸ் ஏவுகணை பரிசோதனை முயற்சியாக ஏவப்பட்டது, அமைச்சர் கூறுகிறார் “பெருமையான தருணம்” என்று கூறும் ஒரு அறிக்கையை மார்ச் 24, 2022 அன்று பதிப்பித்திருந்தது.

சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜூ-உம் இந்தக் காணொளியை ட்வீட் செய்திருந்தார்.

https://twitter.com/KirenRijiju/status/1506853687829811202

மயான்மாரின் ஏவுகணை பரிசோதனை முயற்சி பற்றி ஏதாவது அறிக்கைகள் இருக்கின்றனவா என்று நாங்கள் தேடித் பார்த்தோம்.

அது பற்றி நம்பத்தகுந்த வகையில் எந்த அறிக்கையையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

புலன் விசாரணையின் கடைசிக் கட்டமாக, விஷ்வாஸ் நியூஸ் நித்தின் கோகலே என்ற ஒரு தேசிய பாதுகாப்பு ஆய்வாளரோடு தொடர்பு கொண்டது. இந்தக் காணொளி மயான்மாரிலிருந்து அல்ல, அந்தமான் மற்றும் நிக்கோபாரிலிருந்து வந்தது, அங்கு இந்திய ராணுவம் நிலத்திலிருந்து நிலத்தைத் தாக்கும் அதிகரிக்கப்பட்ட தூர பிரம்மோஸ் சூப்பர்சானிக் க்ரூயிஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது என்று அவர் கூறினார்

புலன் விசாரணையின் கடைசி கட்டத்தில் விஷ்வாஸ் நியூஸ் ஃபேஸ்புக் பயனர் Newwave அதன் தற்குறிப்புப் பக்கத்தில் அதிக விவரங்களைப் பகிர்ந்திருக்கவில்லை ஆனால் அதன் உள்ளடக்கம் பெரும்பாலும் பர்மிய மொழியிலேயே இருந்தது என்று கண்டு பிடித்தது.

निष्कर्ष: உண்மை சரிபார்ப்பு: மயான்மாரில் பரிசோதனை முறையில் பிரம்மோஸ் ஏவுகணை ஏவப்பட்டதாகப் பகிரப்படும் காணொளி, இந்தியாவிலிருந்து சென்றது .

  • Claim Review : மியான்மாரின் ஏவுகணை பரிசோதனை ஏவுதல்
  • Claimed By : Newwave Bgf Ko Ko
  • Fact Check : Misleading
Misleading
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later