Fact Check:, ராகுல் காந்தியின் பாங்காக் பயணம் என்ற கூற்றை உடைய திருத்தப்பட்ட போர்டிங் பாஸ் வைரலாக பரவி வருகிறது

லோக்சபா தேர்தலுக்கு இடையே, ஜூன் 5, 2024 அன்றைய தேதியிட்ட பாங்காக் விமானத்திற்கு ராகுல் காந்தியின் பெயரில் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் போர்டிங் பாஸின் புகைப்படம் ஓன்று வைரலாகி வருகிறது.

புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்): லோக்சபா தேர்தலுக்கு இடையே, ஜூன் 5, 2024 அன்றைய தேதியிட்ட பாங்காக் விமானத்திற்கு ராகுல் காந்தியின் பெயரில் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் போர்டிங் பாஸின் புகைப்படம் ஓன்று வைரலாகி வருகிறது. வைரலான பதிவை விஸ்வாஸ் நியூஸ் ஆய்வு செய்தது, அந்த விசாரணையில் வைரலான போர்டிங் பாஸ் தவறானவை என்பது தெரியவந்தது. 

வைரலாகி வருவது என்ன 

ஜூன் 3, 2024 அன்று, முக்நூல் பயனர் ராஜேஷ் கிரேவால் (காப்பகம்) ராகுல் காந்தியின் பெயருடன் கூடியதும் செல்ல வேண்டிய இடமாகிய பாங்காக்கையும் உடைய போர்டிங் பாஸின் புகைப்படம் ஓன்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர், “உங்கள் முட்டாள் ஜூன் 5 ஆம் தேதிக்கான டிக்கெட் ஒன்றையும் முன்பதிவு செய்துள்ளார். ராகுல் காந்தி ஜூன் 5ஆம் தேதி தனது பாட்டி வீட்டிற்குச் செல்ல டிக்கெட் ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். பள்ளி விடுமுறை ஆரம்பமாகிவிட்டதால், பாட்டி வீட்டிற்குச் செல்ல வேண்டியது அவசியமானதுதான்”. 

விஸ்வாஸ் செய்தி விசாரணை:

இந்த இடுகையின் உண்மை தன்மையை சரிபார்க்க, முதலில் இந்தப் படத்தை நாங்கள் கூர்ந்து கவனித்தோம். இது இந்தியாவில் இருந்து பாங்காக் செல்லும் விஸ்தாரா விமான போர்டிங் பாஸ், ராகுல் காந்தியின் பெயரில் உள்ளது என காட்டுகிறது. இந்த போர்டிங் பாஸில் புறப்படும் தேதி லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து, அதாவது ஜூன் 5, 2024 என உள்ளது. இந்த போர்டிங் பாஸ் வணிக வகுப்பிற்கானது என்பது குறிப்பிடத்தக்கது. 

விசாரணையில், ஆன்லைன் போர்டிங் பாஸ்கள் பொதுவாக திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்திற்கு 24-48 மணிநேரங்களுக்கு முன் வழங்கப்படுவதை நாங்கள் கண்டறிந்தோம். விமான நிலைய கவுன்டரில் செக்-இன் செய்த பின்னரே வைரல் படத்தில் இருப்பது போன்ற ஹார்ட் காப்பிகள் பெறப்படுகின்றன. 

இந்த சூழ்நிலையில், இந்த போர்டிங் பாஸ் திருத்தப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகித்தோம். கூகிள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச்சை மேற்கொண்டபோது, ​​ஆகஸ்ட் 9, 2019 அன்று ‘ லைவ் ஃப்ரம் எ லவுஞ்ச்‘ என்ற இடுகையில் இடம்பெற்ற வலைப்பதிவுக் கட்டுரையில் இந்த போர்டிங் பாஸின் அதே படத்தைக் நாங்கள் கண்டுபிடித்தோம், ஆனால் பயணியின் பெயர், சேருமிடம் மற்றும் பயணத் தேதி ஆகியவை போர்டிங் பாஸில் வித்தியாசமாக காணப்பட்டது. இந்த போர்டிங் பாஸில் இந்த இணையதளத்தின் நிறுவனர் மற்றும் ஆசிரியரான அஜய் அவதானியின் பெயர் இருந்தது, மேலும் ஆகஸ்ட் 6, 2019 அன்று டெல்லியில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானத்தின் நேர அட்டவணை அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த வலைப்பதிவில் உள்ள வைரல் படத்திற்கும் போர்டிங் பாஸுக்கும் உள்ள ஒற்றுமைகள் கீழே உள்ள படத்தொகுப்பில் தெளிவாகத் தெரிகிறது. 

இந்த வலைப்பதிவின் ஆசிரியரும் இந்த வலைத்தளத்தின் நிறுவனருமான அஜய் அவ்தானியை இந்த பிரச்சினையில் தெளிவுபடுத்துவதற்காக நாங்கள் அணுகியபோது, எங்கள் மின்னஞ்சலுக்குப் பதிலளித்த அவர், ​​​​இந்த படம் எடிட் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். அசல் போர்டிங் பாஸ் அவருக்கு சொந்தமானது. 

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரணவ் ஜாவிடம் நாங்கள் தொடர்பு கொண்டோம், அவர் இது போலி என்று கூறியதுடன், “போர்டிங் பாஸ்கள் 24 மணி நேரத்திற்கு முன் வழங்கப்படுவதில்லை. எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க அரசு எதையும் செய்வதில்லை. SM விதிகளை அமல்படுத்த வேண்டும் மற்றும் பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.” 

இந்த வைரலான பதிவை ராஜேஷ் கிரேவால் என்ற பேஸ்புக் பயனாளர் பகிர்ந்துள்ளார், அவரது சுயவிவரத்தின்படி, இந்த பயனர் ஹரியானாவின் பிவானியில் வசிப்பவர் ஆவர். 

निष्कर्ष: லோக்சபா தேர்தலுக்கு இடையே, ஜூன் 5, 2024 அன்றைய தேதியிட்ட பாங்காக் விமானத்திற்கு ராகுல் காந்தியின் பெயரில் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் போர்டிங் பாஸின் புகைப்படம் ஓன்று வைரலாகி வருகிறது.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்