X
X

உண்மை சரிபார்ப்பு: வாண வேடிக்கை வீடியோ டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நிகழ்ந்தது அல்ல.

எங்கள் புலனாய்வில் இந்த க்ளைம் பொய்யானது என்பதை கண்டறிந்தோம். இந்த வீடியோ டோக்கியோ ஒலிம்பிக்ஸை சேர்ந்ததல்ல, தாய்வானைச் சேர்ந்தது.

புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்)  | சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது. அதில் ஒரு கட்டடத்திலிருந்து வண்ணமயமான வாணவேடிக்கைகள் கிளம்புவது வருவது போன்ற காட்சிகள் இருந்தன. இது டோக்கியோ ஒலிம்பிக்ஸ் துவக்க விழா நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது என்கிற க்ளைமுடன் பல்வேறு சமூக ஊடக பயனர்களால் பகிரப்பட்டு வருகிறது. எங்களது புலனாய்வில் இந்த  வீடியோ பொய்யானது என்பதை கண்டறிந்தோம். இந்த வீடியோ டோக்கியோ ஒலிம்பிக்ஸில் எடுக்கப்பட்டது அல்ல, தாய்வானில் எடுக்கப்பட்டது.

இந்த வைரஸ் பதிவில் என்ன உள்ளது?

வீடியோவை தீபக் ஜோகி எனும் ஃபேஸ்புக் பயனர் பகிர்ந்து இவ்வாறு எழுதியுள்ளார், ”டோக்கியோ ஒலிம்பிக்ஸ் துவக்க நிகழ்ச்சியில் வாணவேடிக்கை.”

இந்த பதிவின் ஆர்ச்சிவ் செய்யப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

புலனாய்வு

வைரல் பதிவை சரிபார்க்க நாங்கள் முதலில் டோக்கியோ ஒலிம்பிக்ஸின் துவக்க விழாவை ஒலிம்பிக்ஸின் சரிபார்க்கப்பட்ட யூடியூப் சேனலில் பார்த்தோம். இந்த காட்சியை நாங்கள் எங்கும் காணவில்லை. ஆம், அந்த துவக்க விழாவில் நிச்சயமாக வாணவேடிக்கைகள் இருந்தன. ஆனால் அவை வைரல் வீடியோவிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை.

 ரிவர்ஸ் இமேஜ் தேடலில் வைரல் வீடியோவின் ஸ்க்ரீன்கிராபை தேடியதில், வைரல் வீடியோவில் கண்ட வாணவேடிக்கையை இன்னொரு கோணத்தில் தாய்வான் நியூஸ் யூடியூப் சேனலின் ஒரு வீடியோவில் கண்டோம். அதிலுள்ள விளக்கத்தின்படி, அந்த வீடியோ தாய்வானின் 2021 புத்தாண்டு கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்டது.

இந்த வீடியோவின் சில காட்சிகளை Lotnictwo.TV என்கிற பெயரில் உள்ள ஒரு யூடியூப் சேனலில் 1 ஜனவரி 2021 இல் பதிவேற்றப்பட்ட வீடியோ ஒன்றிலும் கண்டோம்.அதில் உள்ள விளக்கத்தின்படி, இந்த வீடியோவும் தாய்வான் 2021 புத்தாண்டு கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்டது.

இந்த வீடியோ taiwannews.com.tw இன் ஒரு செய்தி அறிக்கையில் உட்பொதிவாக வந்ததையும் நாங்கள் கண்டறிந்தோம். இந்த வீடியோவின் ஸ்க்ரீன்ஷாட்டின் தம்ப் இமேஜும் இந்தச் செய்தியில் பயன்படுத்தப்பட்டது. இந்தச் செய்தியின்படியும், இந்த வீடியோ தாய்வானின் 2021 புத்தாண்டு கொண்டாட்டத்தைச் சேர்ந்தது.

இது தொடர்பாக, நாங்கள் தாய்வான் நியூஸுக்கு செய்தி எழுதும் முதன்மைச் செய்தியாளரான க்ரிஸ் சேங்கையும் தொடர்பு கொண்டோம். எங்கள் அஞ்சலுக்கு பதிலாக அவர், இந்த வீடியோ தாய்வானின் 2021 புத்தாண்டு கொண்டாட்டத்தைச் சேர்ந்தது என கூறினார்.

நாங்கள் இந்த வைரல் வீடியோவை பகிர்ந்த பவேஷ் தவேயின் அக்கவுண்ட்டை ஆராய்ந்து பார்த்தோம். அவருக்கு ஃபேஸ்புக்கில் 4,512 ஃபாலோயர்கள் இருக்கிறார்கள்.

निष्कर्ष: எங்கள் புலனாய்வில் இந்த க்ளைம் பொய்யானது என்பதை கண்டறிந்தோம். இந்த வீடியோ டோக்கியோ ஒலிம்பிக்ஸை சேர்ந்ததல்ல, தாய்வானைச் சேர்ந்தது.

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later