”புலனாய்வில் இந்த வைரல் போஸ்ட் தவறானது என்பது கண்டறியப்பட்டது. இந்த வீடியோ பாகிஸ்தானைச் சேர்ந்தது, இந்தியாவைச் சேர்ந்தது அல்ல.
புதுதில்லி (விஷ்வாஸ் நியூஸ்). சமூக ஊடகத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் 15 குழந்தைகள் பெற்ற ஒரு மனிதனிடம் ஒரு நிருபர் பேட்டி எடுப்பதாக உள்ளது.
முகேஷ் ஷர்மா என்கிற ஃபேஸ்புக் பயனர் இந்த வீடியோவை தவறான க்ளைமுடன் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த ஃபேஸ்புக் பதிவின் ஆர்ச்சிவ் செய்யப்பட்ட பதிப்பை இங்கு காணலாம்.
இந்த வைரல் வீடியோவை முதலில் inVID கருவியில் விஷ்வாஸ் நியூஸ் அப்லோடு செய்தது. இதன் ஸ்க்ரீன்கிராப்களைக் கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் தேடியது. அப்போது லீடர் டிவி ஹெச்டி (Leader TV HD) என்கிற யூடியூப் சேனலில் 11 ஏப்ரல் 2022 அன்று ஒரு வீடியோவில் இந்த வைரல் கிளிப்பை கண்டுபிடித்தோம். இந்த வீடியோவுடன் இணைந்த விவரணையில் பாகிஸ்தான் ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டிருந்தது. யூடியூப் சேனலின் அபவுட் அஸ் பகுதியில், சேனலின் அமைவிடம் குறித்து பாகிஸ்தான் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை நாங்கள் லீடர் டிவி ஹெச்டியின் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களிலும் கண்டோம்.
புலனாய்வின் அடுத்த கட்டத்தில், மின்னஞ்சல் மூலமாக நாங்கள் லீடர் டிவி ஹெச்டி உடன் தொடர்பு கொண்டோம். இந்த வீடியோ பாகிஸ்தானைச் சேர்ந்தது என்றும் இந்த வீடியோவில் வரும் நபரை பேட்டி எடுத்த நிருபர் அனி ஃபைஸல் என்றும் அவர்கள் உறுதி செய்தனர்
புலனாய்வின் இறுதிக் கட்டத்தில, இந்த பாகிஸ்தான் வீடியோவை இந்திய வீடியோ என்பதாகக் கூறி வைரல் செய்த பயனர் யார் என்பதை புலனாய்வு செய்தோம். அவர் புனேவைச் சேர்ந்த முகேஷ் ஷர்மா என்பது தெரியவந்தது.
निष्कर्ष: ”புலனாய்வில் இந்த வைரல் போஸ்ட் தவறானது என்பது கண்டறியப்பட்டது. இந்த வீடியோ பாகிஸ்தானைச் சேர்ந்தது, இந்தியாவைச் சேர்ந்தது அல்ல.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923