இந்த வைரல் புகைப்படம் துபாயின் பாம் ஜுமேராவின் புகைப்படம். இது வாரணாசியில் எடுக்கப்பட்டது அல்ல.
புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் எடுக்கப்பட்டதாகக் கூறி, ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தில், அழகிய சாலைகளும், வானளாவிய கட்டிடங்களும் நீரால் சூழப்பட்டு இருப்பதை நம்மால் காண முடிகிறது.
இது குறித்த எங்கள் விசாரணையில், இந்தப் புகைப்படம் துபாயின் பாம் ஜுமேராவில் எடுக்கப்பட்டது என கண்டறிந்தோம்.
கூற்று
‘சிவ்ராஜ் சிங் சவுகான் பிஜேபி’ என்ற பேஸ்புக் பக்கம் டிசம்பர் 24 அன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, “கங்கைக் கரையிலிருந்து நமக்குத் தெரியக்கூடிய பெனாரஸின் இந்த காட்சி அனைத்தும் மோடியின் கடின உழைப்பின் விளைவாகும்,” என்று எழுதியுள்ளது.
இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
நாங்கள் கூகுள் பின்னோக்கிய பட தேடல் கருவியைப் பயன்படுத்தி கூகுளில் இந்த புகைப்படத்தை தேடியதில், இந்த புகைப்படத்திற்கும் பனராஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும், இது துபாயில் உள்ள பாம் ஜுமேராவின் புகைப்படம் என்பதையும் கண்டறிந்தோம்.
துபாயின் பாம் ஜுமேரா, தலைசிறந்த ஹோட்டல்களுக்கும், ஆடம்பரமான கட்டிடங்களுக்கும் பெயர் பெற்றது. பாம் ஜுமேரா பற்றிய கூடுதல் விவரங்களை இங்கே படிக்கலாம்.
பாம் ஜுமேராவின் காட்சியை கீழே உள்ள காணொலியில் காணலாம்:
நாங்கள் வாரணாசியில் உள்ள டைனிக் ஜாக்ரானின் மூத்த நிருபர் சஷ்வத் மிஸ்ராவை தொடர்பு கொண்டு, இந்த இடுகை தவறானது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டோம்.
இந்த தவறான இடுகையைப் பகிர்ந்த பக்கத்தை நாங்கள் ஆராய்ந்ததில், அந்தப் பக்கத்திற்கு 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருப்பதையும், அப்பக்கம் 2 மார்ச் 2016 அன்று உருவாக்கப்பட்டது என்பதையும் கண்டறிந்தோம்.
निष्कर्ष: இந்த வைரல் புகைப்படம் துபாயின் பாம் ஜுமேராவின் புகைப்படம். இது வாரணாசியில் எடுக்கப்பட்டது அல்ல.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923