இல்லை, மன்னர் ஹென்றி VIII தனது பூனைக்கு இந்த கவசத்தை உருவாக்கவில்லை. இந்த வைரல் பதிவு தவறானது. இது உண்மையில் 1992 ஆம் ஆண்டில் கனடாவைச் சேர்ந்த ஒரு சிற்பியால் உருவாக்கப்பட்ட ஒரு கலைப்படைப்பு.
புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்). பேஸ்புக்கில் வலம்வரும் ஒரு புகைப்படம், மன்னர் ஹென்றி VIII தனது பூனை டகோபெர்ட்டுக்கு தயாரித்த கவசத்தைக் காட்டுவதாகக் கூறுகிறது.
இது குறித்து நாங்கள் விசாரித்தபோது, இந்தக் கூற்று தவறானது என்பதைக் கண்டறிந்தோம். 1992 ஆம் ஆண்டில் கனடாவைச் சேர்ந்த சிற்பி ஜெஃப் டி போயர் உருவாக்கிய கலைப்படைப்பையே இந்த புகைப்படம் காட்டுகிறது.
கூற்று
பேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு இடுகை ஒரு கவசத்தைக் காட்டுகிறது. இந்த புகைப்படத்தின் உள்ள கூற்று பின்வருமாறு: “இது மன்னர் ஹென்றி VIII தனது பூனை டகோபெர்டுக்காக தயாரித்த கவசம்.” இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இது குறித்து விசாரிக்க, நாங்கள் இந்தப் புகைப்படத்தை கூகுள் தலைகீழ் படத் தேடலை நிகழ்த்தி தேடியதில், இணையத்தில் ஒரே கவசத்தை வெவ்வேறு கோணங்களில் காட்டும் பல புகைப்படங்களைக் கண்டறிந்தோம். இந்தப் புகைப்படங்களை கொண்டுள்ள RIPLEYS இணையதளத்தில் உள்ள ஒரு அறிக்கையில், ‘விலங்கு கவசத்தின் மாறுபட்ட வடிவங்கள் மற்றும் வகைகள்’ என்று கூறப்பட்டுள்ளது.
புகைப்படங்களுடன் உள்ள விளக்கம் பின்வருமாறு: கனடாவைச் சேர்ந்த கலைஞர் ஜெஃப் டி போயர் பழைய வகை விலங்கு கவசங்களை எடுத்து, அவற்றை பூனைகள் மற்றும் எலிகள் அணியும் வகையில் மீட்டுருவாக்கம் செய்கிறார். உங்கள் பூனை இதனை அணிய தயாராக இருந்தால், இந்தக் கவசம் உங்கள் பூனையை எந்தத் தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பாக காக்கும்.
இந்தக் கவசம் மன்னர் ஹென்றி VIII ஆல் உருவாக்கப்பட்டது என்று அதில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
மன்னர் ஹென்றி VIII யார்?
ஹென்றி VIII 1509 முதல் 1547 வரை இங்கிலாந்து மன்னராக இருந்தவர். இவர் ஆங்கில மறுமலர்ச்சி மற்றும் ஆங்கில சீர்திருத்தத்தின் துவக்கத்திற்கு தலைமையாக இருந்தார்.
நாங்கள் சிற்பி ஜெஃப் டி போயரைப் பற்றியும், அவரது சமூக வலைத்தள பக்கங்கள் குறித்தும் ஆராய்ந்தோம். அவரது ட்விட்டர் சுயவிவரம் பின்வருமாறு கூறுகிறது: “பூனைகள் மற்றும் எலிகளுக்கு கவசத்தை உருவாக்குபவன் என நான் பிரபலமாக அறியப்படுகிறேன்.”
இவர் தனது கலைப்படைப்புகளுக்காக பல்வேறு ஊடகங்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். அவற்றை இங்கே காணலாம்.
மேலும் சரிபார்க்க, நாங்கள் நேரடியாக ஜெஃப் டி போயரைத் தொடர்பு கொண்டு பேசினோம். இது குறித்து நம்மோடு பேசிய அவர், “100 சதவிகிதம் இது 90களின் முற்பகுதியில் ஒரு அருங்காட்சியகத்திற்காக நான் உருவாக்கிய கலையே. இது ஏற்கனவே சில ஆண்டுகளாக ஒரு மீமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. கேட்டதற்கு நன்றி,” என்றார்.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பக்கத்தை ஆராய்ந்ததில், இந்த பேஸ்புக் பக்கத்திற்கு 1696 பின்தொடர்பவர்கள் இருப்பதைக் கண்டறிந்தோம்.
निष्कर्ष: இல்லை, மன்னர் ஹென்றி VIII தனது பூனைக்கு இந்த கவசத்தை உருவாக்கவில்லை. இந்த வைரல் பதிவு தவறானது. இது உண்மையில் 1992 ஆம் ஆண்டில் கனடாவைச் சேர்ந்த ஒரு சிற்பியால் உருவாக்கப்பட்ட ஒரு கலைப்படைப்பு.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923