உண்மை சரிபார்ப்பு: இந்து கலாச்சாரத்தை எதிர்த்து JNU மாணவர்கள் போராட்டம் செய்தார்கள் என்ற கூற்றுடன் பகிரப்படும் இந்தப் புகைப்படம் தவறானது
இந்த வைரல் பதிவு தவறானது. கொல்கத்தாவில் நடந்த Pride அணிவகுப்பில் எடுக்கப்பட்ட சமூக ஆர்வலர் பஞ்சாலி காரின் படம் தவறான கூற்றுடன் தற்போது வைரலாகியுள்ளது.
- By: Pallavi Mishra
- Published: Jan 7, 2021 at 08:51 PM
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). பேன்ட்கள் மேல் சேலை அணிந்து, நெற்றியில் குங்குமப் பொட்டு அணிந்திருக்கும் சிலரின் புகைப்படம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) மாணவர்கள் சேலை, வேட்டி மற்றும் குங்குமப் பொட்டு அணியும் இந்துக்களின் பாரம்பரியத்திற்கு எதிராக போராடுகிறார்கள் என்ற கூற்றுடன் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரான மாணவர்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக இது இருந்தது என்று அந்த இடுகை கூறுகிறது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், இந்த வைரல் கூற்று தவறானது என்பது தெரியவந்தது. அந்தப் புகைப்படத்தில், சேலை மற்றும் குங்குமப் பொட்டு அணிந்திருப்பவர்களில் ஒருவரான சமூக ஆர்வலர் பாஞ்சாலி கார், அந்தப் புகைப்படத்தில் இருப்பவர்கள் JNU மாணவர்கள் அல்ல என்றும், அவர்கள் இந்து கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் நமக்குத் தெளிவுபடுத்தினார்.
கூற்று
பேஸ்புக் பயனர் சமீர் கௌசிக் இந்த புகைப்படத்தை ஜனவரி 3 அன்று பதிவேற்றி, “#JNUவின் முற்போக்கான மாணவர்கள், இந்து பெண்கள் புடவைகள், பொட்டு மற்றும் குங்குமம் அணிவது குறித்து தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தனர். ஜே.என்.யூவில் குங்குமப்பூ, குர்தா, மூக்கு வளையம் மற்றும் நெற்றியில் குங்குமம் அணிந்த ஒரு ஆண் இந்து கலாச்சாரத்தை எதிர்க்கிறான் … இது #சிஏஏ போராட்டம் நடக்கும் நேரத்தில் நடைபெற்றுள்ளது…… இதன் ஒரே நோக்கம் இந்துத்துவத்தின் வேர்களை தோண்டி எடுத்து, இந்துத்துவத்தை இழிவுபடுத்தி, சதி திட்டம் மூலம் இந்து சமுதாயத்திற்கு எதிராக மற்றும் ஜிஹாதி அடிப்படைவாதமான இஸ்லாத்திற்கு ஆதரவாக, இஸ்லாத்தின் கொள்கைகளை சாத்தியமான அனைத்து வழிகளிலும் பரப்புவதே ஆகும்…” என்று எழுதியுள்ளார். இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இது குறித்து விசாரிக்க, கூகுள் பின்னோக்கிய பட தேடல் கருவியைப் பயன்படுத்தி, இந்த வைரல் புகைப்படத்தை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், இந்த படத்தை 30 டிசம்பர் 2019 அன்று “Pride, 2019 பாக்பஜார் தெரு” என்ற தலைப்பில் பாஞ்சாலி காரின் பேஸ்புக் கணக்கினில் வெளியிடப்பட்டிருப்பதைக் கண்டோம்.
இந்தப் புகைப்படத்தை khaskhobor.com மற்றும் youthkiawaaz.com ஆகிய வலைதளங்களிலும் நம்மால் காண முடிந்தது.
இந்தப் புகைப்படம் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள், ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபால் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், திருநம்பிகள், (LGBTQ) ஆகியோரின் சமூக மற்றும் சுய ஏற்றுக்கொள்ளல், சாதனைகள், சட்ட உரிமைகள் மற்றும் பெருமைகளை கொண்டாடும் வருடாந்திர வெளிப்புற நிகழ்வு, Pride 2019 டிசம்பர் 29 கொண்டாடப்பட்டது அன்று அந்த வலைதளதங்களில் இருந்த கட்டுரைகள் நமக்குத் தெளிவுபடுத்தின.
இதன் உண்மை சரிபார்ப்புக்காக நாங்கள் பாஞ்சாலி காரை தொடர்பு கொண்டு பேசினோம். “இந்த வைரல் படம் என்னுடையது. இது 2019 கொல்கத்தா Pride அணிவகுப்பில் எடுக்கப்பட்டது. எனக்கு தனிப்பட்ட முறையில் JNUவுடன் எந்த தொடர்பும் இல்லை. இந்த வைரல் கூற்று முற்றிலும் தவறானது. இந்த அணிவகுப்பு முதன்மையாக எல்.ஜி.பி.டி.யு.ஏ சமூகத்துக்காக இருந்தது. இருப்பினும், சிலர் NRC மற்றும் CAAக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்,” என்று கூறினார்.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவருக்கு பேஸ்புக்கில் 15,479 பின்தொடர்பவர்கள் இருப்பது தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. கொல்கத்தாவில் நடந்த Pride அணிவகுப்பில் எடுக்கப்பட்ட சமூக ஆர்வலர் பஞ்சாலி காரின் படம் தவறான கூற்றுடன் தற்போது வைரலாகியுள்ளது.
- Claim Review : JNUவின் முற்போக்கான மாணவர்கள், இந்து பெண்கள் புடவைகள், பொட்டு மற்றும் குங்குமம் அணிவது குறித்து தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தனர். ஜே.என்.யூவில் குங்குமப்பூ, குர்தா, மூக்கு வளையம் மற்றும் நெற்றியில் குங்குமம் அணிந்த ஒரு ஆண் இந்து கலாச்சாரத்தை எதிர்க்கிறான் … இது #சிஏஏ போராட்டம் நடக்கும் நேரத்தில் நடைபெற்றுள்ளது…… இதன் ஒரே நோக்கம் இந்துத்துவத்தின் வேர்களை தோண்டி எடுத்து, இந்துத்துவத்தை இழிவுபடுத்தி, சதி திட்டம் மூலம் இந்து சமுதாயத்திற்கு எதிராக மற்றும் ஜிஹாதி அடிப்படைவாதமான இஸ்லாத்திற்கு ஆதரவாக, இஸ்லாத்தின் கொள்கைகளை சாத்தியமான அனைத்து வழிகளிலும் பரப்புவதே ஆகும்
- Claimed By : பேஸ்புக் பயனர்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.