உண்மை சரிபார்ப்பு: இந்த இதய வடிவிலான குளம் ஜிம்பாப்வேயில் இல்லை, இது ரஷ்யாவில் உள்ளது.
நாங்கள் புலனாய்வு செய்ததில் இந்தக் குளம் ஜிம்பாப்வேயில் இல்லை, ரஷ்யாவில் உள்ளது என்பதைக் கண்டுபிடித்தோம். இந்த வைரல் படத்தில், குளத்தின் விளிம்புகளைச் சுற்றி சில சிறிய அளவிலான எடிட்டிங்குகளும் செய்யப்பட்டுள்ளது.
- By: Pallavi Mishra
- Published: Dec 31, 2021 at 05:03 PM
புது தில்லி (விஷ்வாஸ் அணி). இதய வடிவிலான ஒரு குளம் தோன்றுகிற ஒரு படம் சமூக ஊடகத்தில் வைரல் ஆகிவருகிறது. இந்த வைரல் பதிவில் குளம் ஜிம்பாப்வேயில் உள்ளதாக க்ளைம் செய்யப்படுகிறது. நாங்கள் புலனாய்வு செய்து இந்தக் குளம் ஜிம்பாப்வேயில் இல்லை, மாறாக ரஷ்யாவில் உள்ளது என்பதை கண்டறிந்தோம். இந்த வைரல் படத்தில், சிறிய அளவிலான எடிட்களும் சில குளத்தின் விளிம்புகளைச் சுற்றி செய்யப்பட்டுள்ளது.
வைரல் பதிவில் இருப்பது என்ன?
இந்த வைரல் போஸ்ட்டில் இதய வடிவிலான ஒரு குளம் காணப்படுகிறது. இந்த வைரல் போஸ்ட் க்ளைம் செய்வது என்னவென்றால் ”மலைகள் நிறைந்த நிலப்பரப்பு ஒன்றில் பெரிய அளவிலான இதய வடிவ நீர்த்தேக்கத்தில் ”காட்ஸ் ஹான்ட்” என்று அழைக்கப்படுகிற ”குளம்” ஒன்று காட்டப்படுகிறது.
இந்தப் போஸ்ட்டின் ஆர்ச்சிவ் லின்க்கை இங்கே காணவும்.
புலனாய்வு
இந்தப் பதிவை புலனாய்வு செய்ய, முதலில் நாங்கள் இந்தப் படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜில் தேடினோம். இந்தக் குளத்தின் பல படங்களை நாங்கள் கண்டுபிடித்தோம். ஆனால் இந்தப் படங்களில் குளங்களின் விளிம்புகள், வைரல் படங்களில் காணப்பட்ட அளவுக்கு கூர்மையாக இல்லை. இந்தக் குளத்தின் புகைப்படங்களை ட்ரீம்ஸ்டைம், (Dreamstime), ஷட்டர்ஸ்டாக், (Shutterstock), மற்றும் அலாமியில் (Alamy) கண்டோம்.
ஜிம்பாப்வேயில் ”காட்ஸ் ஹான்ட்” என்கிற இதய வடிவிலான குளம் ஏதும் உள்ளதா என்பதை கீவேர்டுகள் கொண்டு நாங்கள் தேடினோம். அதிகாரப்பூர்வ வலைத்தளம் எதிலும் அதுபோன்ற தகவல் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை.
கூடுதலாக உறுதிப்படுத்திக் கொள்ள நாங்கள் கிரிமியாவில் (Crimea) உள்ள புகழ் பெற்ற டிராவல் ஏஜன்சியான கிரிமியா மார்வல் க்வெஸ்ட் டூர்ல்ஸை (Crimea Marvel Quest Tours) அழைத்தோம். அவற்றின் மேலாளர்களில் ஒருவருடன் நாங்கள் பேசினோம். அவருடன் நாங்கள் வைரல் படத்தை பகிர்ந்தோம். அவர், கிரிமியாவில் (Crimea) உள்ள பாலக்லாவா (செவாஸ்டோபோல் (Balaklava (Sevastopol))-ல் இந்த இதய வடிவிலான குளம் உள்ளது என்று எங்களிம் கூறினார்.
நாங்கள் இந்த இடத்தை கூகுள் மேப்ஸ்-லும் பார்த்தோம். தகவலின்படி இது கடிகோவ்ஸ்கி மைன் பான்ட், இது செவாஸ்டோபோல் (Sevastopol) நகரின் பாலாகிளாவா (Balaclava) மாவட்டத்தில் உள்ளது.
பேட் புடிகோஃபர் (Pat Butikofer) என்கிற பெயருடைய ஃபேஸ்புக் பயனரால் இந்த போஸ்ட் பகிரப்பட்டது. இந்தப் பயனர் ஸ்ப்ரிங்ஃபீல்டு, மிஸ்ஸோரியில் (Springfield, Missouri) வசிப்பவர் ஆவார்.
निष्कर्ष: நாங்கள் புலனாய்வு செய்ததில் இந்தக் குளம் ஜிம்பாப்வேயில் இல்லை, ரஷ்யாவில் உள்ளது என்பதைக் கண்டுபிடித்தோம். இந்த வைரல் படத்தில், குளத்தின் விளிம்புகளைச் சுற்றி சில சிறிய அளவிலான எடிட்டிங்குகளும் செய்யப்பட்டுள்ளது.
- Claim Review : மலைகள் நிறைந்த நிலப்பரப்பு ஒன்றில் பெரிய அளவிலான இதய வடிவ நீர்த்தேக்கத்தில் ”காட்ஸ் ஹான்ட்” என்று அழைக்கப்படுகிற ”குளம்” ஒன்று காட்டப்படுகிறது.
- Claimed By : க்ளைம் செய்தவர்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.