உண்மை சரிபார்ப்பு: இந்தச் சிறுமி, தொலைந்துபோன சில மணிநேரங்களில் தன் குடும்பத்துடன் இணைந்தாள்; பொய்யான க்ளைமுடனான பழைய வைரல் வீடியோ
விஷ்வாஸ் அணியின் புலனாய்வில் இந்தக் க்ளைம் பொய்யானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மங்களூர் பிச்சைக்கார்களுடனான செய்தியை இணைத்து வைரல் ஆகிக் கொண்டிருக்கும் இந்த வீடியோ, உண்மையில் ஜைய்ட்பூர் குருத்வாரா, புது தில்லியைச் சேர்ந்தது. இந்த வீடியோவில் காணப்படும் சிறுமி தொலைந்து போன அதே நாளில் தன் குடும்பத்துடன் இணைந்துள்ளார்.
- By: Pallavi Mishra
- Published: Dec 27, 2021 at 03:06 PM
புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்). ஒரு நபர் தன் கைகளில் குழந்தை ஒன்றை வைத்துக் கொண்டிருக்கும் காட்சியுடனான வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகிவருகிறது. இந்த வீடியோவை ஆக்கிய நபர் மக்களிடம் அந்தச் சிறுமி குடும்பத்தை பிரிந்துள்ளதாகவும் அந்தச் சிறுமியை குடும்பத்துடன் இணைக்க உதவுமாறும் வேண்டுகோள் விடுக்கிறார். அந்தச் சிறுமி மங்களூர், கர்நாடகாவில் சில பிச்சைக்காரர்களுடன் காணப்பட்டதாகத் தெரிவித்து மக்கள் வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்கிறார்கள். இந்த க்ளைம் பொப்யானது என்பதை விஷ்வாஸ் அணி தன்னுடைய புலனாய்வில் கண்டுபிடித்துள்ளது. உண்மையில், இந்த வீடியோ இந்த ஆண்டின் துவக்கத்தில், புது தில்லியில் ஜய்ட்பூர் குருத்வாராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் காணப்படும் சிறுமி அதே நாளில் தன் குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார்.
இந்த வைரல் போஸ்டில் இருப்பது என்ன
ஃபேஸ்புக் பயனர் தினேஷ் ராவல் (Dinesh Rawal) இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து பின்வருமாறு எழுதியுள்ளார் ”மொழியாக்கம்: இந்த சிறுமி மங்களூரில் (தென்னிந்தியா) உள்ள ஒரு பிச்சைக்காரர் குழுவைச் சேர்ந்தது. இந்தச் செய்தியை பகிருங்கள். இந்தச் சிறுமியால் தன் பெயரைக் கூற முடிகிறது, தன் பெயரை சோனல் பிபின் படேல் என்று கூறுகிறாள். இந்த புகைப்படத்துடன் ஒரு போஸ்ட்டை ஒவ்வொரு குழுவிலும் பகிருங்கள். எங்கள் முயற்சியில், இந்தச் சிறுமி தன் உண்மையான பெற்றோரை அடைய முடியும்.”
புலனாய்வு
இந்த வைரல் க்ளைமைச் சரிபார்க்க, இச்த வீடியோவை நாங்கள் கவனமாகப் பார்த்தோம். இந்த வீடியோவை எடுக்கும் நபர், ஒரு தருணத்தில் இந்தச் சிறுமி ஜய்ட்பூரில் காணப்பட்டதாகக் கூறுகிறார். வலைத்தளத்தில் தேடியபோது, ஜய்ட்பூர் என்பது தில்லியில் உள்ள ஒரு பகுதி என எங்களுக்குத் தெரியவந்தது.
இந்த வைரல் வீடியோவை நாங்கள் இன்விட் (InVID)-ல் பதிவேற்றம் செய்து பல பகுதிகளை பிரித்தெடுத்து அதை கூகுள் ரிவர்ஸ் இமேஜில் அவற்றை ”ஜய்ட்பூர்+தொலைந்த சிறுமி” (Jaitpur+Missing Girl”) என்கிற கீவேர்டுகள் கொண்டு தேடினோம். இந்த வீடியோவை ஃபேஸ்புக் போஸடடில் நாங்கள் கண்டோம், இதில் வீடியோவில் காண்பபடும் சிறுமி ஜய்ட்பூர் கிராமம், குருத்வாரா, தில்லியில் காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ 1 ஜனவரி 2021-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வீடியோவில் எழுதப்பட்டுள்ள எழுத்துகள் பின்வருமாறு, ”இந்தச் சிறுமி ஜய்ட்பூர் கிராமம் தில்லியில் காணப்பட்டது, இவளின் குடும்ப உறுப்பினர்கள் குருத்வாராவிலிருந்து இந்தச் சிறுமியைப் பெற்றுக் கொள்ளலாம். நண்பர்களே, எந்த அளவிற்கு இயலுமோ அந்த அளவிற்கு இந்த வீடியோவை பகிருங்கள்.
இதன் பின்பு, ஜய்ட்பூர், குருத்வாராவைத் தொடர்பு கொண்டோம். நாங்கள் கியானி பூரன் சிங்ஜியை தொடர்பு கொண்டோம். அவர் இந்த வீடியோ சில நபர்கள் இந்தச் சிறுமியை அழைத்து வந்தபோது, ஜய்ட்பூர் குருத்வாராவில் எடுக்கப்பட்டது தான் என்று உறுதி செய்தார். குருத்வாராவின் சேவகர்கள் இந்த வீடியோவை சமூகத்திற்குள் பகிர்ந்து அதன் பின் அந்தச் சிறுமியின் தாய் வந்து அவளை பெற்றுக் கொண்டதாகக் கூறினார்.
இத்தகைய செய்தி எதுவும் சமீபத்தில் மங்களூரில் பரப்பப்பட்டுள்ளதா என்பதை கீவேர்டுகளின் உதவியுடன் நாங்கள் வலைத்தளத்தில் தேடினோம். அவ்வாறான செய்தி எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.
இறுதியாக, விஷ்வாஸ் நியூஸ் தினேஷ் ராவலின் ஃபேஸ்புக் கணக்கை சமூக ஆய்வு செய்தது. இந்தப் பயனர் அஹமதாபாதில் வசிப்பவர் ஆவார்.
निष्कर्ष: விஷ்வாஸ் அணியின் புலனாய்வில் இந்தக் க்ளைம் பொய்யானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மங்களூர் பிச்சைக்கார்களுடனான செய்தியை இணைத்து வைரல் ஆகிக் கொண்டிருக்கும் இந்த வீடியோ, உண்மையில் ஜைய்ட்பூர் குருத்வாரா, புது தில்லியைச் சேர்ந்தது. இந்த வீடியோவில் காணப்படும் சிறுமி தொலைந்து போன அதே நாளில் தன் குடும்பத்துடன் இணைந்துள்ளார்.
- Claim Review : இந்த சிறுமி மங்களூரில் (தென்னிந்தியா) உள்ள ஒரு பிச்சைக்காரர் குழுவைச் சேர்ந்தது. இந்தச் செய்தியை பகிருங்கள். இந்தச் சிறுமியால் தன் பெயரைக் கூற முடிகிறது, தன் பெயரை சோனல் பிபின் படேல் என்று கூறுகிறாள். இந்த புகைப்படத்துடன் ஒரு போஸ்ட்டை ஒவ்வொரு குழுவிலும் பகிருங்கள். இதில் அவருடன் உள்ள பிச்சைக்கார்கள் மும்பை டிரெயினில் காணப்பட்டார்கள். நம் முயற்சியால் இவர் தன் உண்மையான பெற்றோரை அடையக் கூடும்.
- Claimed By : தினேஷ் ராவல்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.