உண்மை சரிபார்ப்பு: ஹம்தர்த் நிறுவனத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை வேலைக்கு எடுப்பதில் எந்தத் தடையும் இல்லை. வைரல் க்ளைம் போலி.
விஷ்வாஸ் நியூஸ் இந்தப் பதிவைப் புலன்விசாரணை செய்து இந்தக் க்ளைம் தவறு என்று கண்டுபிடித்தது.
- By: Pallavi Mishra
- Published: Apr 10, 2022 at 01:53 PM
- Updated: Jul 7, 2023 at 05:53 PM
புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்): ஹம்தர்த் நிறுவனத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை வேலைக்கு எடுக்க ஒரு தடை உள்ளது என்றும் அந்த நிறுவனத்தில் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை தரப்படுவதில்லை என்றும் சொல்லும் ஒரு க்ளைம் பல சமூக ஊடகத் தளங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. விஷ்வாஸ் நியூஸ் அந்தக் க்ளைம் தவறு என்று கண்டுபிடித்தது. ஹம்தர்த் நிறுவனத்தின் சார்பாக பேசியவர் சொன்னதன்படி, அந்த நிறுவனத்தில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வேலை தரப்படுகிறது மேலும் எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் அங்கு வேலை செய்கிறார்கள்.
அந்த வைரல் பதிவில் என்ன இருக்கிறது?
ஃபேஸ்புக் பயனர் ‘வழக்கறிஞர் நீனா ஷர்மா வார்ட் 9N’ ஒரு பதிவைப் பகிர்ந்தார். அது கூறியது, “ரூஆஸா தயாரிக்கும் நிறுவனம் – ஹம்தர்த்” ஒரு இஸ்லாம் நிறுவனமான முஸ்லிம் வக்ஃப் வாரியத்தினால் உரிமை கொள்ளப்பட்டிருக்கிறது. அதன் அனைத்துப் பணியாளர்களும் முஸ்லிம்கள். வெள்ளிக்கிழமையன்று, இந்த நிறுவனம் ஒரு மசூதியாக மாறுகிறது. ஹிந்துக்கள் இந்த நிறுவனத்துக்குள் காலடி எடுத்து வைக்கக் கூட அனுமதிக்கப் படுவதில்லை. அதை முழுவதும் புறக்கணியுங்கள். இந்த செய்தியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஃபார்வேர்ட் செய்யுங்கள் பொதுமக்கள் விழிப்புணர்வுக்கு பங்களியுங்கள்.
இந்தப் பதிவின் ஆவணப்படுத்தப்பட்ட பதிவை இங்கே காணுங்கள்.
புலன்விசாரணை
எங்கள் புலன்விசாரனையைத் துவங்க, நாங்கள் முதலில் LinkedIn சமூக வலைதளத்தில் ஒரு முக்கிய வார்த்தை தேடலைச் செய்து அந்த நிறுவனத்தின் பணியாளர்களைக் கண்டுபிடித்தோம். ஹம்தர்த் நிறுவனத்தின் பல பணியாளர்களின் பெயர்கள் முஸ்லிம் அல்லாத பெயர்களாக இருந்ததைக் கண்டுபிடித்தோம்.
ஹம்தர்தின் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்திலும் நாங்கள் தேடினோம். இங்கே வலைதளத்தின் தலைவர்கள் பகுதியில் மேலாளர்கள் பெயர்களைக் கண்டுபிடித்தோம். இங்கும், பல பெயர்கள் முஸ்லிம் பெயர்கள் அல்லாதவைகளாக இருந்தன.
நாங்கள் ஒரு செய்தித் தேடலும் செய்தோம் ஆனால் அதுபோன்ற செய்தியை நாங்கள் எங்கும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஹம்தர்த் என்பது ஒரு பெரிய மற்றும் நன்கு அறியப்பட்ட நிறுவனம். அந்த வைரல் செய்தி உண்மையாக இருந்தால், அது சம்பந்தப்பட்ட ஏதாவது செய்தி நிச்சயமாக இருந்திருக்கும்.
இந்த பதிவை உறுதி செய்ய, ஹம்தர்த்-இன் மார்க்கட்டிங் பிரிவு மேலாளர், முஹம்மது ஷாரிக்-உடன் தொடர்பு கொண்டோம். “இந்தப்பதிவு முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது. ஹமதர்த்-இல் பல முஸ்லிம் இல்லாத பணியாளர்கள் இருக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.
இந்தப் போலிப் பதிவை பகிர்ந்த ஃபேஸ்புக் பக்கம் “வழக்கறிஞர் நீனா ஷர்மா வார்ட் 9N’ என்பதை சமூக ஸ்கேனிங் செய்தபோது, 453 பேர் இந்தப் பக்கத்தைத் தொடர்கிறார்கள் என்று கண்டுபிடித்தோம்.
निष्कर्ष: விஷ்வாஸ் நியூஸ் இந்தப் பதிவைப் புலன்விசாரணை செய்து இந்தக் க்ளைம் தவறு என்று கண்டுபிடித்தது.
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.