காசாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வெளியே ஒரு பெண் ஆறுதல்படுத்த இயலாத வகையில் அழும் வீடியோ பாலஸ்தீனிய நடிகை மசியா அப்த் எல்ஹாடியுடையது என்று பொய்யான கூற்றுடன் பகிரப்படுகிறது.
புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்). இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்குப் பிறகு, ஒரு வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் ஒரு பெண் மருத்துவமனைக்கு ஒன்றின் வெளியே அழுதுகொண்டு, தனக்கு நேர்ந்த கொடுமையை விவரிக்கிறார். வீடியோவில் காணப்பட்ட பெண் பாலஸ்தீனிய நடிகை மசியா அப்த் எல்ஹாடி என்றும், இந்த வீடியோ கிளிப் அவரது படத்தின் படப்பிடிப்பிலிருந்து எடுக்கப்பட்டது என்கிற கூற்று சொல்லப்படுகிறது.
விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்று கண்டறிந்தது. வைரலான வீடியோவில் அழும் பெண் பாலஸ்தீன நடிகை மசியா அப்த் எல்ஹாடி அல்ல, காசாவில் வசிக்கும் சாதாரண பெண். ஹமாஸ் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து காசா மீதான இஸ்ரேலிய எதிர்தாக்குதலுக்குப் பிறகு உள்ளூர் மருத்துவமனைக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ, பொய்யான கூற்றுகளுடன் பகிரப்படுகிறது.
சமூக ஊடக பயனர் ‘மனு குப்தா’ வைரலான வீடியோவைப் பகிர்ந்து (ஆர்க்கைவ் லின்க்) இவ்வாறு எழுதியுள்ளார், “இது பாலஸ்தீனிய நடிகை மசியா அப்த் எல்ஹாடி, காசாவில் ஏதோவோர் இடத்தில் ஒரு பிரச்சார வீடியோவை படமாக்குகிறார். பின்னர் இதே வீடியோவை ஹமாஸ் ஆதரவாளர்களும் இஸ்லாமிய ஜிஹாத் ஆதரவாளர்களும் பாதிக்கப்பட்டவர்களாக காட்டிக் கொள்ள வைரலாக்குவார்கள். தீவிர இஸ்லாமிய பயங்கரவாதிகளின் சூழலமைப்பு இப்படித்தான் செயல்படுகிறது.”
பல சமூக ஊடக பயனர்கள் இதே போன்ற கூற்றுகளுடன் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.
ரிவர்ஸ் இமேஜ் தேடல் மூலம் வைரலான வீடியோவின் முக்கிய ஃப்ரேம்களைத் தேடுவதன் மூலம், இந்த வீடியோ பல X பயனர்களின் ப்ரொஃபைல்களில் வெளியிடப்பட்டு இருப்பதைக் கண்டோம்.
இந்தப் பயனர்கள் அனைவராலும் பகிரப்பட்ட கிளிப்பில் @ytirawi என்ற ஹேண்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேடலில், அக்டோபர் 10, 2023 அன்று பகிரப்பட்ட இந்த வீடியோ கிளிப்பை வெளியிட்ட குறிப்பிட்ட ப்ரொஃபைலைக் கண்டறிந்தோம்.
கொடுக்கப்பட்ட தகவலின்படி, இது “இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள் இறந்ததையடுத்து ஷிஃபா மருத்துவமனைக்கு வெளியே மனமுடைந்து நிற்கும் பெண்” குறித்த வீடியோ. பின்னணியில் மருத்துவமனையின் எமர்ஜென்சி பிளாக் தெரிகிறது.
அதே ஹேண்டிலால் பகிரப்பட்ட மற்றொரு கிளிப்பை நாங்கள் கண்டறிந்தோம், அதில் அதே மருத்துவமனை காணப்படுகிறது. அக்டோபர் 13 அன்று பகிரப்பட்ட மேலும் இரண்டு வீடியோ கிளிப்களில், காயமடைந்தவர்கள் கூட்டம் மற்றும் ஆம்புலன்ஸ்களை மருத்துவமனையின் வெளியே காண முடிகிறது.
எல்லா வீடியோக்களும் ஒரே மூலத்திலிருந்து பகிரப்பட்டதால், மீண்டும் ஒருமுறை ரிவர்ஸ் இமேஜ் தேடலின் உதவியைப் பெற்றோம். தேடலின் போது, @Muatsim என்ற பயனரின்
X ஹேண்டிலில் அரபு உரையுடன் இந்த வீடியோ பகிரப்பட்டதைக் கண்டோம்.
கூகுள் லென்ஸ் உதவியுடன் இந்த உரையை மொழிபெயர்த்தோம். கொடுக்கப்பட்ட தகவலின்படி, காசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வெளியே தனது குழந்தை இறந்ததால் விரக்தியில் அழுதார். ஷிஃபா மருத்துவமனை காசாவில் அமைந்துள்ளது. காசா மீதான இஸ்ரேலின் பதிலடி நடவடிக்கைக்குப் பிறகு ஏராளமான காயமடைந்தவர்கள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதில் காணப்பட்ட பெண் பாலஸ்தீன நடிகை மசியா அப்த் எல்ஹாடி என்று வைரலான பதிவில் கூறப்பட்டது. செய்தித் தேடலில், வைரலான வீடியோவில் காணப்பட்ட பெண்ணிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த பாலஸ்தீனிய நடிகையின் பல படங்களையும் சுயவிவரங்களையும் நாங்கள் கண்டோம். கீழே உள்ள படத்தொகுப்பைப் பார்க்கும்போது, பாலஸ்தீனிய நடிகை மசியா அப்த் எல்ஹாடியும் வைரலான வீடியோ கிளிப்பில் காணப்பட்ட பெண்ணும் வெவ்வேறு நபர்கள் என்று தெளிவாகக் கூற முடியும்.
விஷ்வாஸ் நியூஸ், வைரலான வீடியோ தொடர்பாக பாலஸ்தீனிய உண்மைச் சரிபார்ப்பாளர் ரிஹாம் அபு இட்டாவைத் தொடர்புகொண்டது. அதில் காணப்பட்ட பெண் பாலஸ்தீன நடிகை மசியா அப்த் எல்ஹாதி அல்ல என்றும் காசாவில் வசிக்கும் சாதாரண பெண் என்றும் சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
இந்த வீடியோவின் சூழல் மற்றும் இருப்பிடத்தை விஷ்வாஸ் நியூஸ் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் இதில் காணப்பட்ட பெண் பாலஸ்தீனிய நடிகை மசியா அப்த் எல்ஹாடி அல்ல என்பதை உறுதிப்படுத்த முடியும்.
ஹமாஸின் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் காசாவை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. செய்தி அறிக்கைகளின்படி, இந்த மோதலில் இதுவரை 1,300 இஸ்ரேலியர்கள் மற்றும் 1,900 பாலஸ்தீனியர்கள் உட்பட மொத்தம் 3,200 பேர் இறந்துள்ளனர். காசாவில் 120க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை ஹமாஸ் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் தொடர்பான பிற வைரல் கூற்றுகளை ஆய்வு செய்யும் உண்மைச் சரிபார்ப்பு அறிக்கைகளை இங்கே படிக்கலாம்.
निष्कर्ष: காசாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வெளியே ஒரு பெண் ஆறுதல்படுத்த இயலாத வகையில் அழும் வீடியோ பாலஸ்தீனிய நடிகை மசியா அப்த் எல்ஹாடியுடையது என்று பொய்யான கூற்றுடன் பகிரப்படுகிறது.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923