உண்மை சரிபார்ப்பு: சாவர்க்கர் பெயரில் பரவும் காணொளித் துண்டுப்படம் உண்மையானது அல்ல.

முடிவு: இது விநாயக் தாமோதர் சாவர்க்கர் பற்றிய ஒரு அபூர்வமான காணொளி என்று சொல்லி பரவலாக்கப்பட்ட இந்தக் காணொளி, உண்மையில் இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படம் என்று விஷ்வாஸ் நியூஸ் தன் புலன்விசாரணையில் கண்டுபிடித்தது.

விஷ்வாஸ் நியூஸ் (புது டெல்லி): சுதந்திர வீரர் சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருக்கும்போது ஒரு பிரிட்டிஷ் செய்தியாளரால் அவரை எடுக்கப்பட்ட ஒரு உண்மையான காணொளி என்ற உரிமைக்கோரிக்கையோடு அதிக அளவில் பகிரப்படும் ஒரு காணொளியை விஷ்வாஸ் நியூஸ் காண நேர்ந்தது. மேலும் அந்த அபூர்வமான காணொளி பிபிசி-யால் ஒளிபரப்பப் படுகிறது என்றும் வாதம் செய்தது. விஷ்வாஸ் நியூஸ் தன் புலன் விசாரணையில் அந்த உரிமைக் கோரிக்கை பொய் என்று கண்டு பிடித்தது.

உரிமைக் கோரிக்கை:

முகநூல் பயனர் சந்திரசேகர் சந்தோர்க்கர் என்பவர் ஜூன் 1 அன்று முகநூலில் ஒரு 1 நிமிடம் 39 வினாடிகள் கொண்ட ஒரு படத்துணுக்கைப் பகிர்ந்தார்.

மொழிபெயர்ப்பு: சுதந்திர வீரர் சாவர்க்கரின் இந்த அபூர்வமான காணொளி, அவர் அந்தமான் சிறையில் இருந்தபோது ஒரு பிரிட்டிஷ் செய்தியாளரால் படம் பிடிக்கப்பட்டது. இந்தக் காணொளி இப்போது பிபிசி-யால் ஒளிபரப்பப் படுகிறது. இந்தக் காணொளியில் ஒரு செல்லுலார் சிறையில் ‘கொலு’ (எண்ணை எடுக்கும்  ஒரு யந்திரம்)-வில் சாவர்க்கர் வேலை செய்து கொண்டிருப்பது போல் இருந்தது.

இந்தப் பதிவையும் அதன் ஆவணப்படுத்தப்பட்ட பதிப்பையும் இங்கு பார்க்கவும்.

புலன் விசாரணை:

விஷ்வாஸ் நியூஸ் முதலில் இந்த காணொளி படத் துணுக்கை கவனித்தது. அது பிபிசி-உடையது அல்லாமல் ‘பூகோய்’ என்பதின் முத்திரை இருப்பதை எங்களால் பார்க்க முடிந்தது. இந்தக் காணொளியை பிபிசி-யின் சமூக வலையமைப்பு இணையதளங்களிலும் எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்தத் தளத்தில் பதிவேற்றப் பட்ட ஒரு 40 நிமிடம் 58 வினாடிகள் நீளமுள்ள காணொளி, ‘ஸ்ரீ விநாயக் தாமோதர் சாவர்க்கரின் வாழ்க்கை’-யை சித்தரிக்கிறது. இந்தக் காணொளி ஆகஸ்ட் 14, 2014 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டது.

அங்கிருந்த விவரக் குறிப்பானது, “ஸ்ரீ விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஒரு அச்சமற்ற சுதந்திரப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், நாடக ஆசிரியர், கவிஞர், வரலாற்று ஆசிரியர், அரசியல் தலைவர் மற்றும் தத்துவவாதி ஆவார். சாவர்க்கரின் சிந்தனைகள் தேசிய மேம்பாட்டின் எல்லா நோக்குகளையும் தொடுகின்றன, மேலும் அவை தற்காலத்திற்கும் பொருந்தக் கூடியவை. இந்தப் படம் அவர் வாழ்வின் பல முக்கியமான நிகழ்ச்சிகளை சித்தரிக்கிறது.” என்று கூறியது. அந்த பரவலாக இருந்த படத்துணுக்கின் இப்பகுதியை, இந்த யூடியூப் காணொளியின் 25-வது நிமிடங்களிலிருந்து காணலாம்.

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திரைப்படப் பிரிவின் கூற்றுப் படி, இந்தப் படம் ப்ரேம் வைத்யாவால் இயக்கப்பட்டது என்றும் திரைப்படப் பிரிவினால் தயாரிக்கப்பட்டது என்றும் நாங்கள் கண்டுபிடித்தோம். இது 1983-ஆம் வருடத்தில் உருவாக்கப் பட்டது.

இந்தக் காணொளி பற்றிய மேல் விவரங்களுக்கு, விஷ்வாஸ் நியூஸ் வீர் சாவர்க்கர் பற்றி ஆராய்ச்சி புரிந்தவரும், “ஸ்வதந்த்ரவீர் சாவர்க்கர் : அக்ஷெப் அணி வாஸ்தவ் (This is a Marathi title of the book, I am not translating it into Tamil) என்ற புத்தகத்தை எழுதியவருமான அக்ஷய் ஜோக் உடன் அளவளாவியது. “இந்த பரவலான காணொளி இந்திரா காந்தி இந்தியப் பிரதமராக இருந்தபோது ப்ரேம் வைத்யாவால் உருவாக்கப்பட்ட சாவர்க்கர் மீதான ஒரு அரசு ஆவணப்படத்தின் ஒரு பகுதி” என்று  விஷ்வாஸ் நியூஸிடம் அவர் கூறினார்.

இப்போது விஷ்வாஸ் நியூஸ் இந்த பரவலான காணொளியை பகிர்ந்த முகநூல் பயனர் பற்றிய பின்புல விவரங்களை ஆராய்ந்தது. சந்திரசேகர் சந்தோர்க்கர் ஒரு நாசிக் நகரவாசி என்று நாங்கள் கண்டுபிடித்தோம்.

निष्कर्ष: முடிவு: இது விநாயக் தாமோதர் சாவர்க்கர் பற்றிய ஒரு அபூர்வமான காணொளி என்று சொல்லி பரவலாக்கப்பட்ட இந்தக் காணொளி, உண்மையில் இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படம் என்று விஷ்வாஸ் நியூஸ் தன் புலன்விசாரணையில் கண்டுபிடித்தது.

Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்