உண்மை சரிபார்ப்பு: இந்தக் காணொளியில் உள்ள நடனக்காரர்கள் உண்மையான மனிதர்கள், ரோபோக்கள் அல்ல
விஷ்வாஸ் நியூஸ் இந்த உரிமைக் கோரிக்கை தவறு என்று தன் புலன் விசாரணையின் மூலம் கண்டுபிடித்தது. இந்தக் காணொளியில் காணப்படும் நடனக்காரர்கள் இருவரும் உண்மையான மனிதர்கள், ரோபோக்கள் அல்ல. இந்த இரு நடனக்காரர்களின் பெயர்கள் அப்பே க்ளான்ஸி மற்றும் அல்ஜாஸ் ஸ்கோர்செனெக்.
- By: Pallavi Mishra
- Published: Feb 4, 2022 at 10:49 AM
புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ். இந்நாட்களில் பல சமூக ஊடக தளங்களில் ஒரு காணொளி வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்த வைரல் காணொளியில், இரண்டு நடனக்காரர்கள் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இந்த இரண்டு நடனக்காரர்களும் உண்மையான மனிதர்கள் அல்ல, ரோபோக்கள் என்று இந்தப் பதிவு உரிமைக் கோரிக்கை செய்கிறது. விஷ்வாஸ் நியூஸ் அதன் புலன்விசாரணையில் இந்த உரிமைக்கோரிக்கை தவறு என்று கண்டு பிடித்தது. அந்தக் காணொளியில் காணப்படும் இரண்டு நடனக்காரர்களும் உண்மையான மனிதர்கள், ரோபோக்கள் அல்ல.
அந்த வைரல் பதிவில் என்ன இருக்கிறது?
அந்த வைரல் காணொளியில் இவ்வாறு உரிமைக் கோரிக்கை விடப்பட்டிருந்தது. “இந்த மரபார்ந்த நடனம் சீனாவில் தயாரிக்கப் பட்டது மேலும் ஷாங்காய் டிஸ்னிலேண்டில் அலைபரப்பப் பட்டது. அவர்கள் நடனமாடும் கலைஞர்கள் அல்லர், ஆனால் சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள். செயல்காட்சி நேரம் ஏறத்தாழ 5 நிமிடங்கள் மட்டுமே, ஆனால் நுழைவுச் சீட்டுகளை வாங்கக் காத்திருக்கும் நேரம் 4 மணி நேரங்கள், மேலும் நுழைவுச்சீட்டின் விலை 499 யுவான் ($75). ஜப்பானுடையதை விட அதிக சிக்கலானது, கச்சிதமான முக பாவனைகளைக் கொண்டது. இரண்டு நடனக்காரர்களும் ரோபோக்கள். அவர்கள் அவ்வளவு உண்மையாகத் தோற்றமளிக்கிறார்கள், அதனால் உண்மையான மனிதர்களிடமிருந்து மாறுபாடே தெரியவில்லை.”
இந்தப் பதிவின் ஆவண இணைப்பை இங்கே காணலாம்.
புலன் விசாரணை
இந்தக் காணொளியை விசாரணை செய்வதற்கு, இந்தக் காணொளியை இன்விட் கருவியில் இட்டு, அதன் விசைச் சட்டங்களை (கீ ஃபிரேம்ஸ்) பிரித்தெடுத்தோம். பிறகு அந்த விசைச் சட்டங்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜில் தேடினோம். அதே காணொளி பிபிஸி-யின் சரிபார்க்கப்பட்ட யூடியூப் சேனலில் 8 டிசம்பர், 2013 அன்று அப்லோட் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு பிடித்தோம். அந்தக் காணொளியோடு கொடுக்கப்பட்டிருந்த விவரம் இவ்வாறு இருந்தது “அப்பே க்ளான்ஸி & அல்ஜாஸ் ‘டிலைலா ‘ – ஸ்ட்ரிக்ட்லி கம் டான்ஸிங் – பிபிஸி ஒன் என்பதற்காக வியன்ன்ஸ் வால்ட்ஸ் ஆடினார்கள்.” அந்தப் பதிவின்படி, இந்த நடனக்காரர்களின் பெயர்கள் அப்பே க்ளான்ஸி மற்றும் அல்ஜாஸ்.
இந்தக் காணொளி பற்றிய செய்தியை நாங்கள் bbc.co.uk.-யிலும் கண்டுபிடித்தோம். அந்தச் செய்தியின்படி, இந்த காணொளியில் பங்கு பெற்ற அப்பே க்ளான்ஸி மற்றும் அல்ஜாஸ். 2013-க்கான ஸ்ட்ரிக்ட்லி கம் டான்ஸ் காட்சியில் வெற்றி பெற்றார்கள். இந்தச் செய்தியின்படி, அப்பே க்ளான்ஸி ஒரு தொலைகாட்சி வழங்குனர் மற்றும் ஒரு மாடல், அல்ஜாஸ் ஒரு தொழில்முறை நடனக் கலைஞர்.
உறுதி படுத்துவதற்காக, அப்பே க்ளான்ஸி-யை நிர்வகிக்கும் நிறுவனமான எலைட் மாடல் மேனேஜ்மென்ட்-உடன் நாங்கள் தொடர்பு கொண்டோம். அந்த நிறுவனத்தின் பிஆர் மேலாளர், அந்தக் காணொளியில் இருக்கும் நடனக்கலைஞர் அப்பே க்ளான்ஸிதான் என்றும் அவர் 2013 ஆண்டு காட்சியில் பங்கு பெற்று வென்றார் என்றும் கூறினார்.
இந்தப் பதிவு மைக் பார்க்கர் என்ற ஒரு பயனாளரால் பகிரப்பட்டது. இந்த பயனாளருக்கு ஃபேஸ்புக்கில் 254 நண்பர்கள் உள்ளனர் என்றும் அவர் ஃப்ளோரிடாவைச் சேர்ந்தவர் என்றும் தெரிந்தது.
निष्कर्ष: விஷ்வாஸ் நியூஸ் இந்த உரிமைக் கோரிக்கை தவறு என்று தன் புலன் விசாரணையின் மூலம் கண்டுபிடித்தது. இந்தக் காணொளியில் காணப்படும் நடனக்காரர்கள் இருவரும் உண்மையான மனிதர்கள், ரோபோக்கள் அல்ல. இந்த இரு நடனக்காரர்களின் பெயர்கள் அப்பே க்ளான்ஸி மற்றும் அல்ஜாஸ் ஸ்கோர்செனெக்.
- Claim Review : இந்த மரபார்ந்த நடனம் சீனாவில் தயாரிக்கப் பட்டது மேலும் ஷாங்காய் டிஸ்னிலேண்டில் அலைபரப்பப் பட்டது. அவர்கள் நடனமாடும் கலைஞர்கள் அல்லர், ஆனால் சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள். செயல்காட்சி நேரம் ஏறத்தாழ 5 நிமிடங்கள் மட்டுமே, ஆனால் நுழைவுச் சீட்டுகளை வாங்கக் காத்திருக்கும் நேரம் 4 மணி நேரங்கள், மேலும் நுழைவுச்சீட்டின் விலை 499 யுவான்
- Claimed By : சாபி மசெடோ
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.