உண்மை சரிபார்ப்பு: தொலைந்த அணுகுண்டை பயன்படுத்தி தன் வீட்டிற்க மின்சார வசதியை செய்தார் என்கிற க்ளைம் பொய்யான தகவலாகும்.
இந்தச் செய்தி பொய்யான ஒன்று என்பதை விஷ்வாஸ் நியூஸ் அதன் புலனாய்வின் மூலம் கண்டுபிடித்தது. இது ஒரு கேலி அடிப்படையிலான கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
- By: Pallavi Mishra
- Published: Apr 25, 2022 at 05:11 PM
புது தில்லி (விஷ்வாஸ் அணி). ஃப்ளோரிடாவில் காணாமல் போன அணுகுண்டை கண்டெடுத்த ஒரு நபர் அதை தன் வீட்டிக்கான மின்சார உற்பத்திக்காகப் பயன்படுத்தியதாகவும் அதன் தொடர்ச்சியாக, அந்த நபர் கைது செய்யப்பட்டார் என்றும் கூறி ஒரு போஸ்ட் சமூக ஊடகத்தில் வைரல் ஆகிவருகிறது. இந்தச் செய்தி ஒரு பொய்யான செய்தி என்பதை விஷ்வாஸ் நியூஸ் தன்னடைய பலனாய்வில் கண்டுபிடித்தது. இது ஒரு கேலியான கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
வைரல் போஸ்ட்டில் உள்ளது என்ன?
வைரலாகி வரும் ஃபோட்டோவில் இருப்பது ஒரு செய்தித் துணுக்கைப் போல உள்ளது. இந்த ஃபோட்டோவிற்கான குறிப்பில் ”தொலைந்த அணுகுண்டை தன் வீட்டு மின்சாரத்திற்காகப் பயன்படுத்திய நபர் ஃப்ளோரிடாவில் கைது செய்யப்பட்டார்” என்று உள்ளது.
இந்த போஸ்ட்டின் லின்க் ஆர்ச்சிவ் இங்கு காணவும்.
புலனாய்வு
எங்களது புலனாய்வின் தொடக்கமாக, சிஎன்என் வலைத்தளத்தில் இந்த ஸ்க்ரீன்ஷாட்டில் காட்டப்படும் தலைப்புச் செய்தியை தேடினோம். சிஎன்என் வலைத்தளத்தில் இந்தச் செய்தியை நம்மால் காண முடியவில்லை.
கூகுள் கீவேர்டு தேடலைப் பயன்படுத்தி தேடியும் அத்தகைய செய்தி எதுவும் பெயர் பெற்ற மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வலைத்தளம் எதிலும் இல்லை என்பதை அறிந்தோம். ஆம், இந்தச் செய்தி சில உள்ளூர் வலைத்தளங்களில் இருக்கின்றன என்றபோதும் இந்த நிகழ்வு குறித்த எந்த விவரங்களை எந்த வலைத்தளமும் தரவில்லை. வைரலான சமூக ஊடக போஸ்ட்டுகள் மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
வைரல் போஸ்ட்டில் உள்ள ஸ்கூபா டைவரின் படத்தை கீவேர்டுகளுடன் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் தேடியபோது, worldnewsdailyreport.com. இல் ஒரு செய்திக் குறிப்பை கண்டுபிடித்தோம். அந்தச் செய்தியின் படி, “ஜியார்ஜியா: அமெச்சூர் டைவர் நீண்ட காலமாக தொலைந்துபோன அணு ஆயுதத்தை கண்டெடுத்தார்.” என்று இருந்தது.
worldnewsdailyreport.com இல் தேடுகையில், இந்த வலைத்தளம் ஒரு கேலி செய்யும் வலைத்தளம் என்பதையும் இதில் கேலி அடிப்படையிலான கட்டுரைகள் இடம்பெறும் என்பதையும் அறிந்தோம்.
வலைத்தளத்தில் உள்ள டிஸ்க்ளைமர்,”வேர்ல்டு நியூஸ் டெய்லி ரிப்போர்ட் தன்னுடைய கேலித் தன்மை கொண்ட கட்டுரைகள் மற்றும் அற்றின் உள்ளடக்கத்தில் உள்ள புனைவுத் தன்மைக்கான பொறுப்புகள் அத்தனையையும் கருத்தில் கொண்டுள்ளது. இந்த வலைத்தளத்தில் தோன்றும் அனைத்து கேரக்டர்களுமே – நிஜமான நபர்களின் அடிப்படையில் உள்ள கேரக்டர்களும் கூட – முழுக்க முழுக்க கற்பனையானவையே , இவை வாழ்கிற, இறந்த அல்லது இறக்காத எந்த நபரையும் போலத் தோன்றினால் அது முற்றிலுமான ஒரு அதிசயம் மட்டுமே.” என்று உள்ளது.
ஆனாலும், ஸ்கூபா டைவரின் ஃபோட்டோ dw.com இல் ஒரு செய்திக்குறிப்பில் முதலில் பயன்படுத்தப்பட்டது, இது 15.01.2014 அன்று வெளியிடப்பட்டது.
கூகுள் ரிவர்ஸ் இமேஜ் பயன்படுத்தி வைரல் போஸ்ட்டில் உள்ள முதல் படமான மக்சாட் படத்தை குறித்துச் சரிபார்க்கையில், அந்தப் படத்தை theguardian.com இல் கண்டுபிடித்தோம். ஃபோட்டோவில் உள்ள நபர் டாட் வர்னெகென். செய்தியின்படி இவர் 2016 தேர்தல் பரப்புரை காலத்தின் கடைசி வாரங்களின் போது, அல்பானி நியூயார்க்கில் உள்ள ஒரு மளிகைக் கடைக்கு வெளியே ஒரு கருப்பினப் பெண்ணை அடிப்பதாக மிரட்டியும் இனரீதியாக தவறாகப் பேசியும் உள்ளார். அந்தப் பெண் டாக்சிக்காக காத்துக் கொண்டிருந்துள்ளார்.
போலீஸ் கூறுவதன் படி, அவர் பின்வரும் விதமான கோஷத்தை எழுப்பியுள்ளார், ”டிரம்ப் வெற்றியடையப் போகிறார். உங்களுக்கு அதில் விருப்பமில்லை என்றால் நீங்கள் செல்லலாம்.” மேலும் அந்த நபர் இவ்வாறு கூறியுள்ளார் “நீங்கள் (இனரீதியான வசை) உங்களுக்கான நேரத்தை அனுபவித்துவிட்டீர்கள். நீங்கள் எண்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளீர்கள்.” 55 வயதான வெர்னெகென் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
இது குறித்து சிஎன்என் ஐ நாங்கள் மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொண்டோம். அவர்களிடமிருந்து பதில் வந்த உடனே இந்தச் செய்தி புதுப்பிக்கப்படும்.
அல் சிம்மன்ஸ் கன் ஷாப் என்கிற பெயருடைய ஒரு ஃபேஸ்புக் பயனரால் இந்தப் பேஸ்ட் பகிரப்பட்டது. அவர் ஃபேஸ்புக்கில 2,900 ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார்.
निष्कर्ष: இந்தச் செய்தி பொய்யான ஒன்று என்பதை விஷ்வாஸ் நியூஸ் அதன் புலனாய்வின் மூலம் கண்டுபிடித்தது. இது ஒரு கேலி அடிப்படையிலான கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.