உண்மை சரிபார்ப்பு: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தடுப்பூசி போடுவதில் உச்ச எல்லை அடையப்பட்டது என்பதின் பேரில் இலவச ரிசார்ஜ் கொடுப்பதில்லை, வைரல் செய்தி போலியானது
முடிவு: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தடுப்பூசி போடுவதில் உச்ச எல்லை அடைந்ததின் பேரில் இலவச ரீசார்ஜ் தரவில்லை, இந்த வைரல் செய்தி போலியானது.
- By: Ashish Maharishi
- Published: Oct 30, 2021 at 02:06 PM
புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்): சமூக ஊடகத்தில் இலவச ரீசார்ஜ் என்ற பெயரில் மீண்டும் ஒரு போலி செய்தி வைரல் ஆகியுள்ளது. தடுப்பூசி போடுவதில் உச்ச எல்லை அடையப்பட்டது என்ற மகிழ்ச்சியில், ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ சிம் சந்தாதாரர்கள் 3 மாத இலவச ரீசார்ஜ் தரப்படுகிறார்கள் என்று ஒரு உரிமைக் கோரிக்கை எழுந்துள்ளது. விஷ்வாஸ் நியூஸ் இந்த வைரல் பதிவை புலன் விசாரணை செய்து, அது போலி என்று கண்டு பிடித்துள்ளது.
உரிமைக் கோரிக்கை
முகநூல் பயனர் சிராஜி யாஷ் அக்டோபர் 11 அன்று அதன்படி நாட்டில் தடுப்பூசி போடுவதில் உச்ச எல்லை அடையப்பட்ட மகிழ்ச்சியில், அனைத்து இந்திய பயனர்களுக்கும் 3 மாத ரீசார்ஜ் இலவசமாக தரப்படப்போகிறது என்று ஒரு பதிவை பகிர்ந்தார். உங்களிடம் ஜியோ, ஏர்டெல் அல்லது விஐ சிம் இருந்தால், நீங்கள் இந்த நல் வாய்ப்பை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். குறிப்பு: உங்கள் இலவச ரீசார்ஜ்-ஐ பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும். தயவு செய்து கவனிக்கவும்: இந்த சலுகை அக்டோபர் 15, 2021 அன்று மட்டுமே உள்ளது! விரையுங்கள்..!
உண்மை சரிபார்ப்புக்காக , இந்த வைரல் உள்ளடக்கம் இங்கே உள்ளபடியே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவின் ஆவணப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே பார்க்கலாம்.
புலன் விசாரணை
விஷ்வாஸ் நியூஸ் இந்த வைரல் பதிவின் உண்மைத்தனத்தை அறிவதற்காக முதலில் கூகுள் தேடலின் உதவியை நாடியது. நாட்டில் தடுப்பூசி போடுவதில் உச்ச எல்லை அடையப்பட்டதன் பேரில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் நுகர்வோருக்கு இலவச ரீசார்ஜ் வழங்குகிறார்களா என்பதை நாங்கள் அறிய விரும்பினோம்.
முக்கிய வார்த்தைகளை வைத்து தேடிப் பார்த்தபோது, இந்த வைரல் பதிவின் உண்மைத்தன்மையை உறுதி செய்வது போல எந்த செய்தியையும் எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.
தேடலின் போதே, ஏப்ரல் 22, 2021 அன்று தைனிக் ஜாக்ரனின் வலைதளத்தில் பிரசுரிக்கப்பட்ட ஒரு அறிக்கையை நாங்கள் கண்டுபிடித்தோம். அந்தச் செய்தியில், மூன்று மாதத்திற்கு இலவச ரீசார்ஜ் கிடைக்கும் என்ற செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோஷியேஷன் ஆப் இந்தியாவின் ஒரு வைரல் பதிவு போலி என்று சொல்லப்பட்டிருந்தது. Jagran.com-இல் உள்ள முழு செய்தியையும் இங்கே கிளிக் செயவத்ன் மூலம் நீங்கள் படிக்கலாம்.
புலன் விசாரணையின்போது, நாங்கள் தகவலோடு கொடுக்கப்பட்டிருந்த இணைப்பில் கிளிக் செய்து பார்த்தோம் எங்களுக்கு எந்த குறிப்பிட்ட தகவலும் இங்கிருந்து கிடைக்கவில்லை.
விஷ்வாஸ் நியூஸ் ரிலையன்ஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளருடன் தொடர்பு கொண்டோம். அந்த வைரல் பதிவு முற்றிலும் பொய்யானது என்று அவர் சொன்னார். எங்கள் தரப்பிலிருந்து அவ்வாறான எந்த சலுகையும் கொடுக்கப்படவில்லை.
விஷ்வாஸ் நியூஸ் அந்த வைரல் பதிவை பகிர்ந்த முகநூல் பயனர் சிராஜ்-இன் தற்குறிப்பை அலசி பார்த்தது. அந்தப் பயனர் யாஷ் ஹோட்டல் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டவர் என்பதைக் கண்டு பிடித்தோம். அவருடைய கணக்கிலிருந்து இதைத்தவிர வேறு எந்த தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.
निष्कर्ष: முடிவு: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தடுப்பூசி போடுவதில் உச்ச எல்லை அடைந்ததின் பேரில் இலவச ரீசார்ஜ் தரவில்லை, இந்த வைரல் செய்தி போலியானது.
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.