உண்மை சரிபார்ப்பு: ரிஷி சுனக் பிரிட்டனின் புதிய பிரதம மந்திரியாக இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை, முடிவுகள் செப்டம்பரில்தான் வெளியிடப்படும்.

விஷ்வாஸ் நியூசின் புலன் விசாரணையில், ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப் பட்டார் என்ற வைரல் க்ளைம் பொய் என்று தெரிய வந்தது. யுகே-வின் புதிய பிரதம மந்திரியைத் தேர்ந்தெடுக்கும் செயல்பாடு நடந்து கொண்டிருக்கிறது மேலும் புதிய பெயர் செப்டம்பரில் அறிவிக்கப்படும். புதிய பிரதம மந்திரி தேர்ந்தெடுக்கப்படும் வரை போரிஸ் ஜான்சன் பொறுப்பு பிரதம மந்திரியாக இருப்பார்.

உண்மை சரிபார்ப்பு: ரிஷி சுனக் பிரிட்டனின் புதிய பிரதம மந்திரியாக இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை, முடிவுகள் செப்டம்பரில்தான் வெளியிடப்படும்.

புது டெல்லி (வைஷக் நியூஸ்): ரிஷி சுனக் பற்றிய ஒரு பதிவு , இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் புதிய பிரதம மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார் என்ற க்ளைமுடம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பல சமூக ஊடக பயனர்கள், ரிஷி சுனக் பிரிட்டனின் புதிய பிரதம மந்திரியாக ஆனது குறித்து அவர் புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்து கூறி வருகிறார்கள்.

விஷ்வாஸ் நியூசின் புலன் விசாரணையில் அந்த வைரல் க்ளைம் பொய் என்று அறியப்பட்டது. யுகே-வின் புதிய பிரதம மந்திரியைத் தேர்ந்தெடுக்கும் செயல்பாடு நடந்து கொண்டிருக்கிறது, மேலும் புதிய பெயர் செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும். இது வரை போரிஸ் ஜான்சன் பிரிட்டினின் பிரதம மந்திரி பொறுப்பை வகித்து வருகிறார். ரிஷி சுனக் இந்த அறிக்கை எழுதப்படும் சமயம் வரை பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப் படவில்லை.

க்ளைம்:

இந்த வைரல் பதிவைப் பகிர்ந்து ஃபேஸ்புக் பயனர் ராஜ்ஸ்ரீ யாதவ் ஃபேன்ஸ் எழுதுகிறார். “பிரிட்டனின் பிரதம மந்திரி ஆனதிற்காக இந்தியர் ரிஷி சுனக்-கிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பிரிட்டன் இந்தியாவை 250 ஆண்டுகள் ஆண்டது. இன்று ஒரு இந்தியர் அதன் பிரதம மந்திரியாக ஆகியிருக்கிறார். ஒவ்வொரு இந்தியனுக்கும் இது பெருமை படக்கூடிய ஒரு விஷயம்.” #Rishi_Sunak

ஆவணப்படுத்தப்பட்ட இந்தப் பதிவின் பதிப்பை இங்கே க்ளிக் செய்வதன் மூலம் காணலாம்.

புலன் விசாரணை:

இந்த வைரல் க்ளைமில் உள்ள உண்மையை அறிவதற்காக, சில முக்கிய வார்த்தைகளை வைத்து கூகுளில் நாங்கள் தேடினோம். இந்தக் க்ளைமுடன் தொடர்பு கொண்ட ஒரு அறிக்கையை நாங்கள் ABP செய்தியில் கண்டுபிடித்தோம். அது ஏப்ரல் 19, 2022 அன்று பதிப்பிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையின்படி, திங்கட்கிழமை நடந்த மூன்றாவது சுற்று வாக்கெடுப்பில் ரிஷி சுனக் 115 வாக்குகள் பெற்றிருந்தார். அதன் பிறகு அவர் பிரதம மந்திரிக்கான போட்டியில் முன்னிலைக்கு வந்திருந்தார்.

பல்வேறு பயனர் வலைத்தளங்கள் இந்த செய்தியை பதிப்பித்திருந்தன. இந்தத் தேடலின்போது, எங்களுக்கு ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதம மந்திரி ஆகி விட்டார் என்று குறிப்பிட்ட எந்தவிதமான நம்பகமான ஊடக அறிக்கையும் கிடைக்கவில்லை.

புலன் விசாரணையை மேலேடுத்துச் சென்று, நாங்கள் கன்சர்வேடிவ் பார்ட்டியின் வலைதளத்தை ஸ்கேன் செய்ய ஆரம்பித்தோம். அந்த வலைத்தலத்தின்படி, கன்சர்வேடிவ் மற்றும் யூனியனிஸ்ட் பார்ட்டியின் தலைவர் மற்றும் யுனைட்டட் கிங்டம் பிரதம மந்திரியின் பெயர் செப்டம்பர் 5 அன்று அறிவிக்கப்படும். இப்போதைக்கு தலைவரைத் தேர்ந்தெடுக்கும் செயல்பாடு நடந்து கொண்டிருக்கிறது.

ரிஷி சுனக்கின் சமூக ஊடக கணக்குகளை விஷ்வாஸ் நியூஸ் ஸ்கேன் செய்ய ஆரம்பித்தது. ரிஷி சுனக்கின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் கணக்கில் ஜூலை 18, 2022 அன்று ஒரு ட்வீட் பதிவிடப்பட்டிருந்ததைப் பார்த்தோம். அதில் அவர் ஒரு காணொளியைப் பகிர்ந்து, மூன்றாவது சுற்றில் அவருக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி கூறியிருந்தார். போரிஸ் ஜான்சனின் அதிகாரப் பூர்வமான ட்விட்டர்-இல் கொடுக்கப்பட்ட தகவலின்படி, பிரிட்டனின் பிரதம மந்திரி பதவியிலிருந்து அவர் விலகி விட்டார். இருந்தும் அவர் பிரிட்டனின் பிரதம மந்திரியாக தொடர்ந்து இருந்து வருகிறார்.

மேல் விவரங்களுக்காக, நாங்கள் தைனிக் ஜாக்ரனின் தேசியப் பிரிவில் மூத்த பத்திரிக்கையாளராகப் பணியாற்றுபவரும் சர்வதேச விஷயங்களில் வல்லுனருமான நீலு ரஞ்சனோடு தொடர்பு கொண்டோம். அவர் இந்த வைரல் க்ளைம் பொய் என்று கூறினார். யுனைட்டட் கிங்டமின் அடுத்த பிரதம மந்திரியின் பெயர் இன்னும் அறிவிக்கப் படவில்லை. வாக்கெடுப்பு செயல்பாடு இப்போது இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

புலன் விசாரணையின் கடைசி கட்டத்தில், நாங்கள் இந்தப் பக்கத்தைப் பகிர்ந்த ராஜ்ஸ்ரீ யாதவ் ஃபேனின் பக்கத்தை ஒரு பின்புல சரிபார்ப்பு செய்தோம். அந்தப் பயனரை ஃபேஸ்புக்கில் 35,214 பேர் தொடர்கிறார்கள். இந்தப் பக்கம் ஃபேஸ்புக்கில் ஜூன் 13, 2022 முதல் நடப்பில் இருக்கிறது.

Claim Review : Rishi Sunak has been elected as new PM of Britain
க்ளைம் மறுபரிசீலனை: ரிஷி சுனக் பிரிட்டனின் புதிய பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
Claimed By : Rajshree Yadav Fan’s
க்ளைம் செய்தவர்: ராஜ்ஸ்ரீ யாதவ் ஃபேன்ஸ்
Fact Check : False
உண்மை சரிபார்ப்பு: பொய்

निष्कर्ष: விஷ்வாஸ் நியூசின் புலன் விசாரணையில், ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப் பட்டார் என்ற வைரல் க்ளைம் பொய் என்று தெரிய வந்தது. யுகே-வின் புதிய பிரதம மந்திரியைத் தேர்ந்தெடுக்கும் செயல்பாடு நடந்து கொண்டிருக்கிறது மேலும் புதிய பெயர் செப்டம்பரில் அறிவிக்கப்படும். புதிய பிரதம மந்திரி தேர்ந்தெடுக்கப்படும் வரை போரிஸ் ஜான்சன் பொறுப்பு பிரதம மந்திரியாக இருப்பார்.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்