உண்மை சரிபார்ப்பு: கங்கனா குறித்த இந்த வைரல் ட்வீட்டை ரிஹானா பதிவிடவில்லை
கங்கனா குறித்த இந்த ட்வீட்டை ரிஹானா பதிவிடவில்லை. புகைப்பட எடிட்டிங் கருவிகளைப் பயன்படுத்தியே இந்த வைரல் ட்வீட் உருவாக்கப்பட்டுள்ளது.
- By: Amanpreet Kaur
- Published: Feb 12, 2021 at 10:07 PM
புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). ஒரு ட்வீட்டின் ஸ்கிரீன் ஷாட் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தனது நிகழ்ச்சிகளில் கங்கனா போன்ற பெண்கள் நடனமாடுவதாக ஹாலிவுட் பாடகி ரிஹானா கூறியதாக அந்த ட்வீட்டில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து விஸ்வாஸ் நியூஸ் நடத்திய விசாரணையில், இந்த வைரல் ட்வீட் தவறானது என்பது தெரியவந்தது. ரிஹானா இந்த ட்வீட்டை வெளியிடவில்லை.
கூற்று
பேஸ்புக் பயனரான சத்னம் சிங் கல்சா ஒரு இடுகையைப் பகிர்ந்துள்ளார். அதில்,” கங்கனா போன்ற பெண்கள் எனது நிகழ்ச்சிகளில் குறைந்த ஊதியம் வாங்கிக்கொண்டு நடனமாடுகிறார்கள்,” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வைரல் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இது குறித்து விசாரிக்க, நாங்கள் இது பற்றிய செய்திகளை இணையத்தில் தேடினோம். சில முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி ரிஹானாவின் இந்த ட்வீட்டைப் பற்றி தேடியதில், அதைப் பற்றிய எந்த ஊடக அறிக்கையையும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இருப்பினும், விவசாயிகளின் போராட்டத்திற்கு ரிஹானாவின் ஆதரவு குறித்து இந்திய நடிகை கங்கனா ரனாவட் ட்வீட் செய்ததாக கூறும் சில அறிக்கைகள் எங்களுக்குக் கிடைத்தன. கங்கனாவின் விமர்சனம் குறித்து ரிஹானா எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. அது நடந்திருந்தால், பல அறிக்கைகள் இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும்.
ரிஹானாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை நாங்கள் ஆராய்ந்தோம் ஆனால் இந்த வைரல் ட்வீட்டை எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த வைரல் ட்வீட்டை நாங்கள் சோதித்ததில், இது இந்தியில் இருப்பதையும், மேலும் இதில் ஏராளமான தவறுகள் இருப்பதையும் எங்களால் காண முடிந்தது. ரிஹானா ஹாலிவுட்டில் பணிபுரிகிறார், எனவே அவர் இந்தியில் எழுதிடும் வாய்ப்பு மிகவும் குறைவு. தவிர, இந்த ட்வீட்டில் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்படவில்லை. எனவே, ட்வீட் உண்மையானது என்று நாம் கூற இயலாது. புகைப்பட எடிட்டிங் கருவிகளைப் பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டது.
இது குறித்த கூடுதல் தகவலுக்கு, மும்பையின் டைனிக் ஜாக்ரானில் பொழுதுபோக்கு செய்திகளைக் கையாளும் ஸ்மிதா ஸ்ரீவாஸ்தவை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். இது பற்றி நம்மிடையே பேசிய அவர், ரிஹானாவின் ட்விட்டர் கணக்கில் இதுபோன்ற ட்வீட் எதுவும் இல்லை என்றும், புகைப்பட எடிட்டிங் கருவிகளைப் பயன்படுத்தியே இந்த ட்வீட் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இந்த இடுகையைப் பகிர்ந்த சத்னம் சிங் கல்சாவின் கணக்கினை ஆராய்ந்ததில், இந்தப் பயனர் ஹரியானாவின் அம்பாலாவில் வசிப்பவர் என்பதையும், அவருக்கு 899 பின்தொடர்பவர்கள் இருப்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்.
निष्कर्ष: கங்கனா குறித்த இந்த ட்வீட்டை ரிஹானா பதிவிடவில்லை. புகைப்பட எடிட்டிங் கருவிகளைப் பயன்படுத்தியே இந்த வைரல் ட்வீட் உருவாக்கப்பட்டுள்ளது.
- Claim Review : கங்கனா போன்ற பெண்கள் எனது நிகழ்ச்சிகளில் குறைந்த ஊதியம் வாங்கிக்கொண்டு நடனமாடுகிறார்கள்
- Claimed By : பேஸ்புக் பயனர்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.