உண்மை சரிபார்ப்பு: ரிலையன்ஸ் ஜியோ ஃபெடரல் வங்கியை விலைக்கு வாங்கவில்லை; வைரல் பதிவு போலியானது
விஸ்வாஸ் செய்தியின் புலன்விசாரணையில் இந்த கூற்று போலியானது என்று தெரியவந்தது. ரிலையன்ஸ் செய்தித் தொடர்பாளர் விஸ்வாஸ் செய்தியுடன் பேசுகையில் இது வெறும் வதந்தி என்று கூறினார். வங்கிகளை சொந்தமாக வைத்திருக்க கூட்டு நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.
- By: Pallavi Mishra
- Published: Sep 27, 2021 at 01:27 PM
- Updated: Jul 7, 2023 at 05:56 PM
புது டெல்லி (விஸ்வாஸ்செய்தி) சமூக ஊடகங்களில் ஒரு கடிதம் வைரலாகி வருகிறது, அதில் ரிலையன்ஸ் ஜியோ ஃபெடரல் வங்கியை விலைக்கு வாங்கபோவதாக வலியுறுத்தியிருக்கிறது மற்றும் இந்த ஒப்பந்தம் 73616 கோடிக்கு செய்யப்பட்டது எனவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், இந்த கோரிக்கை போலியானது என்று தெரியவந்தது. ரிலையன்ஸ் செய்தித் தொடர்பாளர் விஸ்வாஸ் செய்தியிடம் பேசுகையில், “இது வெறும் வதந்தி. பெரும்நிறுவனங்கள் வங்கிகள் சொந்தமாக வைத்திருக்க அனுமதியில்லை.”.
எது வைரல் ஆகிறது?
வாட்ஸ்அப்பில் வைரலான இந்த கடிதம் “மீடியா ரிலீஸ்: 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் ஃபெடரல் வங்கியை ரிலையன்ஸ் ஜியோ விலைக்கு வாங்கபோகிறது; விலைக்கு வாங்கிவதுடன் ஜியோ வங்கி தொழிலில் இறங்குகிறது; ரிலையன்ஸ் ஜியோஇன்போகாம் லிமிடெட்(“RJIL”) இன்றைக்கு அறிவிக்கப்பட்டது என்னவென்றால் அதன் வங்கியை வாங்குவதற்காக ஃபெடரல் பேங்க் லிமிடெட் உடன் உறுதியான ஒப்பந்தத்தை முடித்துவிட்டது. RJIL மொத்த விலையாக ரூ. 73,616 கோடி (வரிகள் உட்பட) ஃபெடரல் வங்கிக்கு பணம் செலுத்தப்பட்டது மற்றும் உரிமையை வலிந்துகொள்ளபட்டது. இந்த வர்த்தகத் தகவல் மூலம் ஃபெடரல் வங்கி ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிடெட் (“RJIL”) இன் முழு சொந்தமான துணை நிறுவனமாக இருக்கும் “
புலனாய்வு
இந்த பதிவைப் பார்க்க, நாங்கள் முதலில் ஃபெடரல் வங்கியின் வலைத்தளம் மற்றும் சமூக ஊடகக் கையாளுகளை தேடினோம். இதுபோன்ற செய்திகளை நாங்கள் எங்கும் காணவில்லை.
ரிலையன்ஸ் ஜியோவின் வலைத்தளம் மற்றும் சமூக ஊடகக் கையாளுதல்களில் இதுபோன்ற செய்திகள் எதுவும் காணப்படவில்லை.
இந்தக் கடிதத்தின் மேல் ‘மீடியா ரிலீஸ்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. ஊடகத்தின் ஒரு அங்கமாக இருப்பதால், விஸ்வாஸ் செய்தியின் வணிகக் குழு ரிலையன்ஸ் ஜியோவின் அனைத்து செய்தி வெளியீடுகளையும் பெறுகிறது. நாங்கள் எங்கள் மின்னஞ்சலைச் சரிபார்த்தோம் ஆனால் இந்த செய்திக்குறிப்பை எங்கும் காண முடியவில்லை. ரிலையன்ஸின் கடைசி செய்தி வெளியீடு அரசாங்க சீர்திருத்தங்கள் பற்றியது.
அதனுடைய ஸ்க்ரீன்ஷாட் கீழே காணலாம்
இது தொடர்பாக, விஸ்வாஸ் செய்தி ரிலையன்ஸ் ஜியோவின் செய்தித் தொடர்பாளரைத் தொடர்பு கொண்டது. எங்களிடம் அவர் பேசும்போது, “இந்தக் கடிதம் முற்றிலும் போலியானது. ஆர்பிஐ வழிகாட்டுதல்களின்படி, ஜியோ அல்லது வேறு எந்த கூட்டு நிறுவனங்களும் எந்த வங்கியையும் மேற்கொள்ள முடியாது”
இந்தக் கூற்றை சமூக ஊடகங்களில் கனிகா தேவனி என்ற ட்விட்டர் பயனர் பகிர்ந்துள்ளார். பயனருக்கு 18 பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
निष्कर्ष: விஸ்வாஸ் செய்தியின் புலன்விசாரணையில் இந்த கூற்று போலியானது என்று தெரியவந்தது. ரிலையன்ஸ் செய்தித் தொடர்பாளர் விஸ்வாஸ் செய்தியுடன் பேசுகையில் இது வெறும் வதந்தி என்று கூறினார். வங்கிகளை சொந்தமாக வைத்திருக்க கூட்டு நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.