Fact Check: எடிட் செய்யப்பட்ட வீடியோ ராகுல் காந்தி பொய்யான கூற்றுகளுடன் வைரலாகி வருகிறது
- By: Ashish Maharishi
- Published: Dec 28, 2023 at 04:22 PM
புதுடெல்லி (விஷ்வாஸ் நியூஸ்): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை தையல்காரர் எனக் குறிப்பிட்டதாகக் கூறி அவரை கேலி செய்யும் வகையில் வீடியோ காட்சிகள் பரப்பப்பட்டு வருகின்றன. சில சமூக வலைதள பயனர்கள் இந்த மாற்றியமைக்கப்பட்ட வீடியோவை பரப்பி ராகுல் காந்திக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஷ்வாஸ் நியூஸ், இந்த வைரலான பதிவை விசாரித்ததில், கூறப்படும் கூற்று தவறானது என்று கண்டறியப்பட்டது. ராகுல் காந்தியின் உரையின் ஒரு பகுதியை மாற்றியமைத்து வைரல் கிளிப் உருவாக்கப்பட்டுள்ளது. அசல் வீடியோவில், ராகுல் காந்தி தனது உரையாடலை ஒரு ஆடை வடிவமைப்பாளருடன் செய்கிறார். அந்த வீடியோவின் சில பகுதிகள் ராகுல் காந்தி தன்னை தையல்காரர் என்று கூறும் வகையில் எடிட் செய்யப்பட்டு பரப்பப்பட்டுள்ளது. எங்கள் விசாரணையில் வைரலான பதிவு போலியானது என்பது உறுதியானது.
வைரலாவது என்ன?
பேஸ்புக் பயனர் ஷ்யாம் ராகுல் காந்தியின் வீடியோ கிளிப்பை (ஆர்க்கைவ் லின்க்) டிசம்பம் 16 அன்று பதிவேற்றம் செய்துள்ளார். “நான் ஒரு தையல்காரர்” என்று எழுதப்பட்டிருக்கும் ஸ்மைலி எமோஜியைப் பயன்படுத்தி வீடியோ கிளிப்பில் ராகுல் காந்தி இவ்வாறு கூறுகிறார், “உலகம் என்னை ஆடை வடிவமைப்பாளர் என்று அழைக்கிறது, ஆனால் நான் ஒரு ஆடை வடிவமைப்பாளர் அல்ல. நான் ஒரு தையல்காரன், நான் துணியைப் பார்த்தவுடனே, எனக்கு எந்த துணியையும் காட்டுங்கள், எந்த நிறத்தையும் காட்டுங்கள். துணியைப் பார்த்தவுடனே எனக்கு அந்தத் துணி அதை எப்படி வெட்டுவது. ஒரு நபரின் தோள்களில் அதை எப்படி வைப்பது, எந்த நிறம் எங்கு செல்ல வேண்டும்? என புரிந்துவிடும். இது என்னுடைய திறமை. இது என் வேலை. எனக்கு இது புரியும். மேலும் எனது பணி, எனது திறமைகளை நான் நன்கு புரிந்து கொண்டுள்ளேன் என்று என்னால் சொல்ல முடியும். நான் ஆழமாக புரிந்துகொள்கிறேன். இப்போது கவனமாகக் கேளுங்கள். அந்த துணி ஒரு தையல்காரரால் செய்யப்பட்டது. அந்த தையல்காரர் இந்த நபரின் பின் ஒளிந்து கொண்டிருக்கிறார். நீங்கள் அந்த தையல்காரரை வெளியே கொண்டு வாருங்கள். அவரை பிரான்சின் பாரிஸுக்கு அனுப்புங்கள், நாங்கள் அவருக்கு கைதட்டுவோம்.”
விஷ்வாஸ் நியூஸ் விசாரணை:
விஷ்வாஸ் நியூஸ் வைரலான வீடியோவின் நம்பகத்தன்மையைக் கண்டறிய முழுமையான விசாரணையை நடத்தியது. முழு வீடியோவையும் கவனமாகக் கேட்டபோது, ராகுல் காந்தி யாரோ ஒருவரின் அறிக்கையை விவரிக்கிறார் என்பது தெரிந்தது. வைரலான வீடியோவிலிருந்து முக்கிய ப்ரேம்களைப் பிரித்தெடுத்து, விசாரணையை மேலும் மேற்கொள்வதற்கு இன்விட் கருவி பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து, கூகுள் லென்ஸைப் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் அசல் வீடியோ அடையாளம் காணப்பட்டது.
ஜூன் 11, 2018 தேதியிட்ட அசல் வீடியோவில், அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஓபிசி (OBC) மாநாட்டில் உரை நிகழ்த்தினார். முழுமையான வீடியோவை மதிப்பாய்வு செய்ததில், வைரல் கிளிப்புடன் தொடர்புடைய பகுதியானது டைம்லைனில் தோராயமாக 2:34 மணிநேரத்தில் கண்டறியப்பட்டது. இந்த பகுதியில், ராகுல் காந்தி, ஒரு ஆடை வடிவமைப்பாளரிடம் இந்திய ஆடை வடிவமைப்பாளரைக் கேலி செய்தது குறித்து கேள்வி எழுப்பிய சம்பவத்தை நினைவுகூர்ந்து கூறுகிறார்.
வீடியோவைக் கேட்டதில் தெரியவந்தது என்னவென்றால், ஒரு இந்தியரை கேலி செய்வது குறித்த ராகுல் காந்தியின் கேள்விக்கு பதிலளித்த ஆடை வடிவமைப்பாளர், “உலகம் என்னை ஆடை வடிவமைப்பாளர் என்று அழைக்கிறது. ஆனால் நான் ஆடை வடிவமைப்பாளர் அல்ல. நான் ஒரு தையல்காரன். நான் துணியைப் பார்க்கும்போது, எந்த நிறத்தில் உள்ள ஆடைகளையும் காட்டுங்கள், ஆடைகளைப் பார்த்தவுடனேயே எனக்கு — அவற்றை எப்படி வெட்டுவது, தோளில் எப்படி வைப்பது, எந்த நிறம் எங்கு செல்ல வேண்டும் என்று புரிந்துவிடும். இது என் திறமை, என் வேலை. நான் ஆழமாக புரிந்துகொள்கிறேன். இப்போது கவனமாகக் கேளுங்கள். அந்த துணி ஒரு தையல்காரரால் செய்யப்பட்டது. அந்த தையல்காரர் இந்த நபரின் பின் ஒளிந்துள்ளார். நீங்கள் அந்த தையல்காரரை வெளியே கொண்டு வாருங்கள். அவரை பிரான்சின் பாரிஸுக்கு அனுப்புங்கள். நாங்கள் அவருக்குக் கைதட்டுவோம்.” என்று கூறியுள்ளார் என்பது தெரியவந்தது.
முழு வீடியோவையும் கீழே பார்க்கலாம்.
விஷ்வாஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவைச் சேர்ந்த கிரிஷ் குமார், ராகுல் காந்தியின் வைரல் வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தினார். இது அவரது பழைய வீடியோவில் இருந்து ஒரு பகுதி மாற்றி அமைக்கப்பட்டு பரப்பப்படுகிறது. அசல் வீடியோவில், ராகுல் காந்தி ஆடை வடிவமைப்பாளருடன் தனது உரையாடலைப் பகிர்ந்து கொண்டார்.
விசாரணை முடிவில், போலி இடுகைக்கு காரணமான பயனரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பேஸ்புக் பயனர் ஷ்யாம் ஜெதுவின் சமூக ஸ்கேன், பயனர் ராஜஸ்தானில் வசிப்பதாகவும், 2,000 க்கும் மேற்பட்ட பேஸ்புக் நண்பர்கள் இருப்பதாகவும் தெரியவந்தது.
முடிவு: விஷ்வாஸ் நியூஸ் நடத்திய விசாரணையில், ராகுல் காந்தியின் வைரலான வீடியோ எடிட் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்தி ஆற்றிய உரையின் ஒரு பகுதி, தவறான கூற்றுடன் பகிரப்படுகிறது. அவர் ஒரு ஆடை வடிவமைப்பாளருடன் தனது உரையாடலைப் பற்றி விவாதித்ததை அசல் வீடியோ வெளிப்படுத்துகிறது.
- Claim Review : ராகுல் காந்தி தன்னை தையல்காரர் என்று குறிப்பிடுகிறார்
- Claimed By : Fb பயனர்: ஷ்யாம் ஜெது
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.