புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்): குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தி பேசிய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தனது உரையின் போது, நாட்டில் பாஜக ஆட்சியின் போது கழுகுகளின் வேலையின்மை குறித்து கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
விஸ்வாஸ் நியூஸ், தனது விசாரணையில், வைரலான காணொளி பகுதியானது திரித்து அமைக்கப்பட்டு (எடிட் செய்து), ராகுல் காந்திக்கு எதிராக பிரச்சாரம் செய்ய சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டது. உண்மையான (அசல்) காணொளியானது, டெல்லி தேர்தலின் போது ராகுல் காந்தி பாஜக மற்றும் நரேந்திர மோடியை அசுத்தமாக குறிவைத்து பிரச்சாரம் செய்ததில் இருந்து எடுக்கப்பட்டது; இந்த உரையின் திரித்து அமைக்கப்பட்ட பகுதியானது தவறான உரிமைகோரலுடன் பகிரப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் பயனர் ‘l.creations.l’ வைரலான காணொளியை (காப்பக இணைப்பு), பகிர்ந்துள்ளார், அதில் ராகுல் காந்தி நாட்டில் வேலையில்லாத கழுகுகளைப் (வேலையில்லா திண்டாட்டம்) பற்றி பேசுவதைக் கேட்கலாம்.
அவர் கூறுகிறார், “…..எனக்கு ஒன்றை சொல்லுங்கள்…இங்கே இருக்கும் கழுகு…இந்த கழுகுகள் ஏன் இங்கு பறக்கின்றன. என்னிடம் சொல்லுங்கள், இந்த கழுகுகள் இங்கே என்ன செய்கின்றன? இங்குள்ள கழுகுகள் ஏன் இங்கு சுற்றித் திரிகின்றன என்று யாராவது என்னிடம் சொல்ல முடியுமா… ஏனென்றால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.”
காணொளியில் உள்ள சத்தத்தைக் (குரலை) கேட்ட பிறகு, அது உண்மையானது அல்ல, ஆனால் அது திரித்து அமைக்கப்பட்டு (எடிட் செய்து), சீர்கெடுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. வைரலான காணொளியை அடிப்படையாகக் கொண்ட பொருத்தமான முக்கிய வார்த்தைகளைக் வைத்து தேடிப் பார்க்கும் போது, இந்திய தேசிய காங்கிரஸின் யூடியூப் சேனலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதிவேற்றப்பட்ட காணொளியை கண்டோம். கொடுக்கப்பட்ட தகவல்களின்படி, டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2020 க்கான பிரச்சாரத்தின் போது கோண்ட்லியில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது ராகுல் காந்தி பேசியதுதான் இந்த காணொளி.
இதில் குறிப்பிட்ட நேரமான 8.50 நிமிடத்திற்கு மேல் 23.30 நிமிடம் வரை உள்ள காணொளியைக் கேட்ட பிறகு, வைரல் காணொளி பகுதியின் முழு சூழலையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். பாஜக மற்றும் நரேந்திர மோடியை குறிவைத்து ராகுல் காந்தி கூறியதாவது, “…..கடந்த 5 ஆண்டுகளில் அனில் அம்பானி, அதானி போன்றவர்களுக்கு நரேந்திர மோடி 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்துள்ளார். ஏன் என்று உங்களுக்கு புரிகிறதா? ஏனென்றால் நீங்கள் உங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தீர்கள், ஆகவே நீங்கள் பிளவுபட்டீர்கள். உங்கள் பணம் அதானி மற்றும் அம்பானியின் பாக்கெட்டுகளுக்கு எவ்வளவு செல்கிறது என்பது கூட உங்களுக்குத் தெரியாது.”
இதற்குப் பிறகு, வானத்தை நோக்கி கையை உயர்த்தி அவர் கூறியதாவது, “…… இந்த கழுகுகள் இங்கே என்ன செய்கின்றன? எனக்குச் சொல்லுங்கள்! இந்த கழுகுகள் ஏன் இங்கு சுற்றித் திரிகின்றன என்று யாராவது சொல்ல முடியுமா? அவைகள் ஏன் இங்கே அலைந்து திரிகின்றன?…… எனக்குச் சொல்லுங்கள், எவ்வளவு அது எடுத்துக் கொள்ளும்? ஐந்து கோடி, பத்து கோடி….பாருங்கள், இந்த பெண் ஐந்து கோடி… பத்து கோடி என்று சொல்கிறாள். சரி, ஐம்பது கோடி தேவைப்படும். நரேந்திர மோடி ஜி ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களின் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வரியை தள்ளுபடி செய்தார்.”
காணொளியைக் கேட்டப் பிறகு, ராகுல் காந்தி அழுக்கை அகற்றும் பின்னணியில் கழுகுகளை குறிப்பிட்டார், மாறாக வேலையில்லாத் திண்டாட்டத்தின் பின்னணியில் அல்ல என்பது தெளிவாகிறது. வேலையின்மை பிரச்சினை திரித்து அமைக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது, இது அந்த உரையின் முழு சூழலையும் மாற்றுகிறது.
மேலும் உறுதிப்படுத்த, விஸ்வாஸ் நியூஸ் உத்தரபிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிமன்யு தியாகியை தொடர்பு கொண்டபோது அவர் கூறியதாவது, “இந்த காணொளி எடிட்டிங் உதவியுடன் (திரித்து அமைக்கப்பட்டு) தயாரிக்கப்பட்டது, மேலும் உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு இந்த வேலையை தொடர்ந்து செய்து வருகிறது.”
தவறான கூற்றுடன் வைரல் வீடியோவைப் பகிர்ந்த பயனரை இன்ஸ்டாகிராம் இல் சுமார் 400 பேர் பின்தொடர்கின்றனர்.
முடிவுரை: நரேந்திர மோடி ஆட்சியில் கழுகுகள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்று ராகுல் காந்தியின் பெயரில் வைரலாகி வரும் வீடியோ போலியானதும் பிரச்சார நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதும் ஆகும்.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923