உண்மைச் சரிபார்ப்பு: பிரதான் மந்திரி பெரோஜ்கர் பட்டா யோஜனா 2022 என்ற பெயரில் ஃபிஷிங் இணைப்பு பகிரப்படுவதைக் குறித்து ஜாக்கிரதை
- By: Sharad Prakash Asthana
- Published: Jan 11, 2023 at 03:02 PM
புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்): பிரதான் மந்திரி பெரோஜ்கர் பட்டா யோஜனா 2022 என்ற பெயரில் ஒரு குறுஞ்செய்தி வைரலாகி வருகிறது. இந்த குறுஞ்செய்தியில், இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து வேலையில்லாதவர்களுக்கும் மாதம் ரூ.6,000 வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தகுதி அளவுகோல்களின் விவரங்களும் செய்தியில் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் சொடுக்குமாறு (கிளிக் செய்யுமாறு) மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
விஸ்வாஸ் நியூஸ், அதன் விசாரணையில், இந்த செய்தியுடன் ஒரு ஃபிஷிங் இணைப்பும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதைக் கண்டறிந்தது. இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம், பயனர் இணைய மோசடிக்கு பலியாகலாம். இதுபோன்ற இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். விஸ்வாஸ் நியூஸ் முன்பு இதே போன்ற போலி செய்திகளை ஆய்வு செய்து அதைப்பற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்தது.
உரிமைகோரல்:
ஒரு வாசகர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள செய்தியை விஸ்வாஸ் நியூஸின் டிப்லைன் எண் +91 95992 99372 க்கு அனுப்பி அதைச் சரிபார்க்கும்படி எங்களைக் கோரினார். வாசித்த செய்தி: நீக்கப்பட்டது
மொழிபெயர்ப்பு – பிரதான் மந்திரி பெரோஜ்கர் பட்டா யோஜனா 2022 இல் உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள், இந்தத் திட்டத்தின் கீழ் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 வழங்கப்படும்.
பதிவு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்து உங்கள் மொபைல் எண்ணுடன் பதிவு செய்யவும்.
விண்ணப்பக் கட்டணம் – ரூ 00
தகுதி – 10வது தேர்ச்சி
வயது – 18 முதல் 40 வயது வரை
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்போது பதிவு செய்யவும்
https://rebrand.ly/berozgaar-bhatta-yojna
முகநூல் பயனர் சோனு குமார் ஷாவும் (காப்பக இணைப்பு) டிசம்பர் 20 அன்று இதே செய்தியை வெளியிட்டார்.
விசாரணை:
இதுபோன்ற வைரல் கூற்றுகளின் உண்மை தன்மையை சரிபார்க்க, முதலில் அந்த குறுஞ்செய்தியில் கொடுக்கப்பட்டிருந்த இணைப்பை நாங்கள் சோதித்து பார்த்தோம். இந்தச் செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு எந்தவொரு அரசு இணையதளம் அல்லது துறை சார்ந்ததாகவும் தெரியவில்லை. இந்த இணைப்பு ஒரு சிறிய URL மட்டுமின்றி வெளிப்படையாகவே சந்தேகத்திற்குரியதும் ஆகும். இது அரசாங்க திட்டமாக இருந்தால், ஒரு அரசாங்க வலைத்தளத்திற்கான ஒரு முழுமையான இணைப்பு இருந்திருக்கும், அதில் gov.in என்று இறுதியில் எழுதப்பட்டிருக்கும்.
இது சம்பந்தமாக, முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் ஒரு திறந்த தேடலை நாங்கள் மேற்கொண்டோம். இந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் விதத்திலான இதுபோன்ற செய்திகள் எதையும் நம்பகமான எந்த இணையதளத்திலும் நாங்கள் காணவில்லை. மேலும் தகவலுக்கு, இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இணையதளத்திலும் நாங்கள் அலசி பார்த்தோம், ஆனால் அத்தகைய எந்தவொரு சுற்றறிக்கை அல்லது செய்திக்குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக, சைபர் நிபுணரும் இந்திய சைபர் ராணுவத்தின் நிறுவனருமான கிஸ்லே சவுத்ரியிடம் பேசினோம். அவர் கூறியதாவது, “இது ஒரு ஃபிஷிங் இணைப்பு. PIB-யும் இது குறித்து எச்சரித்துள்ளது. இந்த குறுஞ்செய்தி போலியானது. சைபர் குண்டர்கள் இதுபோன்ற கவர்ச்சியான செய்திகளுடன் ஃபிஷிங் இணைப்புகளை அனுப்புவதன் மூலம் மக்களை தங்கள் வலையில் ஈர்க்கிறார்கள். அத்தகைய இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம், உங்கள் தரவு ஹேக் செய்யப்படலாம். இதற்காக, இணைப்பை எப்போதும் கவனமாகச் சோதித்துப் பார்த்து, அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் அதை உறுதிப்படுத்தவும்.”
இந்த போலிச் செய்தியைப் பகிர்ந்த முகநூல் பயனாளர் ‘சோனு குமார் ஷா’ என்பவரின் சுயவிவரத்தை நாங்கள் ஆராய்ந்தோம். இதன்படி, ஹவுராவில் வசிக்கும் அவருக்கு சுமார் 5,000 நண்பர்கள் உள்ளனர்.
முடிவு: பிரதான் மந்திரி பெரோஜ்கர் பட்டா யோஜனா 2022ன் கீழ் வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.6,000 வழங்குவது பற்றிய இந்த செய்தி போலியானது. இந்த செய்தியுடன், ஒரு ஃபிஷிங் இணைப்பு வைரலாகி வருகிறது. பயனர்களின் தரவு ஹேக் செய்யப்படுவதற்கு வழிவகுக்கும் என்பதால், அத்தகைய எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று சைபர் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
- Claim Review : பதிவு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்து உங்கள் மொபைல் எண்ணுடன் பதிவு செய்யவும்.
- Claimed By : சோனு குமார்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.