உண்மை சரிபார்ப்பு: டாட்டா ஒரு புதிய டாக்சி சேவை தொடங்கியதாக க்ளைம் செய்யும் பதிவு போலி.
டாட்டா ஒரு புதிய டாக்சி சேவையைத் துவங்கவில்லை, வைரல் க்ளைம் போலி.
- By: Ankita Deshkar
- Published: Apr 5, 2022 at 03:59 PM
- Updated: Apr 17, 2022 at 08:55 PM
புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்): டாட்டா மோட்டார்ஸ் Cab-E என்ற ஒரு புதிய டாக்சி சேவையை மும்பை மற்றும் பூனேவில் துவங்கியிருக்கிறது என்ற பரவலாக சமூக ஊடகங்களில் சுற்றிவரும் ஒரு செய்தியை விஷ்வாஸ் நியூஸ் கண்டது. அந்தக் க்ளைம் போலி என்று விஷ்வாஸ் நியூஸ் தன் புலன்விசாரணையில் கண்டுபிடித்தது.
க்ளைம்:
ஃபேஸ்புக் பயனர், ஸ்ம்ரிதி தேசாய் தன ஃபேஸ்புக் தற்குறிப்பில் இந்த வைரல் தகவலை பகிர்ந்து எழுதினார்:
டாட்டா Cab-E என்ற ஓலா & ஊபர்-ஐ விட சிறந்த ஒரு மாற்றாக ஒரு புதிய டாக்சி சேவையை மும்பை & பூனேவில் துவங்கியுள்ளது. டாட்டா எப்போதும் கடினமான நேரங்களில் தேசத்துக்கு உதவுகிறது. இதை எவ்வளவு முடியுமோ அந்த அளவு பகிருமாறு உங்கள் எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன். செயலியை ப்ளே ஸ்டோரிலிருந்து டவுன்லோட் செய்யவும்.
இந்தக் க்ளைம் செயலியை டவுன்லோட் செய்ய ஒரு இணைப்புடன் வந்தது.
பதிவு மற்றும் அதன் ஆவணப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே பார்க்கவும்.
புலன்விசாரணை:
விஷ்வாஸ் நியூஸ் முதலில் ஒரு சுலபமான முக்கிய வார்த்தை தேடலில் துவங்கி அந்த வைரல் தகவலுடன் உள்ள அந்த இணைப்பைப் பார்த்தது.
அந்த இணைப்பு Cab-E என்ற செயலியை டவுன்லோட் செய்ய நம்மை கூகுள் ப்ளே ஸ்டோருக்கு அழைத்துச் சென்றது.
விஷ்வாஸ் நியூஸ் Cab-E என்பதைப் பற்றி மேலும் தேட ஆரம்பித்தது.
We found a website for this application. And we further searched for more details about the company,
இந்த செயலிக்கான ஒரு வலைதளத்தை நாங்கள் கண்டுபிடித்தோம். அந்த நிறுவனத்தைப் பற்றி மேலும் விவரங்கள் அறிய நாங்கள் மேலும் தேடினோம்.
அந்த நிறுவனத்தின் எங்களைப் பற்றி பக்கத்தை அடைந்தோம்.
அந்தப் பக்கம் கூறியது: “CAB-EEZ Infra Tech (P) Limited (பிராண்ட் பெயர் : “Cab-e”) (நிறுவனத்தின் உள்ளேயே கட்டமைக்கப்பட்ட) தொழில்நுட்ப தளம் வழங்கும் ஒரு தொழில்நுட்ப சந்தை இது உள்ளூர், நகரங்களுக்கு இடையே, வாடகைக்கார்கள், வடிவமைக்கப்பட்ட B2B சேவைகள் மற்றும் தேவைக்கு ஏற்ற பயணங்களுக்காக – அனைத்து-மின்சார கார் தொகுப்பை, கைபேசி மூலமாக ஆன்லைன் கேப் புக்கிங் செய்யும் சேவையை சப்போர்ட் செய்கிறது. இதன் ஒரே குறிக்கோள் 2030-க்குள் 100% மின்சார இயக்கத்தை நோக்கி செல்லும் இந்திய அரசின் முயற்சிக்கு குறிப்பிடத்தக்க முறையில் பங்களித்தல்.”
வலைதளத்தில் எங்கும் இந்த நிறுவனம் டாட்டா மோட்டார்ஸ்-ஆல் உரிமை கொள்ளப் பட்டிருக்கிறது என்று குறிப்பிடப் படவில்லை.
இந்த நிறுவனத்தின் சமூக ஊடக ஹேண்டில்களைத் தேடியதில் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவைக் கண்டுபிடித்தோம்.
29 மார்ச், 2019 அன்று Cab-E-யால் பதிவிடப்பட்ட பதிவு Cab-E ஒரு தனியார்-உரிமை நிறுவனம் என்றும் அதில் டாட்டாவின் பங்கு எதுவும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியது. விஷ்வாஸ் நியூஸ் இதே பதிவை LinkedIn-லும் கண்டுபிடித்தது.
விஷ்வாஸ் நியூஸ் Cab-E-யை அதன் ஃபேஸ்புக் பக்கம் மூலம் அணுகியது. டாட்டா Cab-E சேவையை தொடங்கவில்லை என்றும் Cab-E என்பது ஒரு தனியார்-உரிமை நிறுவனம் என்று அதில் டாட்டாவின் பங்கு எதுவும் இல்லை என்றும் அந்த நிறுவனம் பதில் கூறியது.
புலன் விசாரணையின் கடைசிப் படியாக, விஷ்வாஸ் நியூஸ் இந்த வைரல் செய்தியை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த பயனரின் ஒரு சமூக பின்புல சரிபார்ப்பு செய்தது. பயனர் ஸ்ம்ரிதி தேசாய் அஹமதாபாதில் வசிப்பவர், அவருக்கு 457 நண்பர்கள் உள்ளனர்.
निष्कर्ष: டாட்டா ஒரு புதிய டாக்சி சேவையைத் துவங்கவில்லை, வைரல் க்ளைம் போலி.
- Claim Review : டாட்டா Cab-E என்ற ஓலா & ஊபர்-ஐ விட சிறந்த ஒரு மாற்றாக ஒரு புதிய டாக்சி சேவையை மும்பை & பூனேவில் துவங்கியுள்ளது. டாட்டா எப்போதும் கடினமான நேரங்களில் தேசத்துக்கு உதவுகிறது. இதை எவ்வளவு முடியுமோ அந்த அளவு பகிருமாறு உங்கள் எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன். செயலியை ப்ளே ஸ்டோரிலிருந்து டவுன்லோட் செய்யவும்.
- Claimed By : ஸ்ம்ரிதி தேசாய்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.