X
X

உண்மை சரிபார்ப்பு: கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட கோழி பெங்களூரில் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறும் பதிவு பொய்யானது

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட கோழி பெங்களூரில் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறும் பதிவு பொய்யானது படம் பழையது, இது 2019 நாவல் கொரோனா வைரஸுடன் தொடர்புடையது அல்ல.

  • By: Pallavi Mishra
  • Published: May 6, 2020 at 02:46 PM
  • Updated: Aug 30, 2020 at 07:58 PM

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கோழி பெங்களூரில் கண்டுபிடிக்கப்பட்டது என்று சமூக ஊடகங்களில் ஒரு வைரலான பதிவு கூறுகிறது. நோய்வாய்ப்பட்ட பாதி சவரன் செய்யப்பட்ட கோழியின் படத்தை இந்த பதிவிலுள்ள படம் காண்பிக்கிறது. இந்த வைரலான பதிவு பொய்யானது என்பதை விஸ்வாஸ் நியூஸ் விசாரித்து கண்டறிந்துள்ளது.

கூற்று

பெங்களூர் ரீ ரகுதிபா ஒடியா என்ற பேஜில் பதிவேற்றம் செய்யப்பட்ட பேஸ்புக் பதிவு பின்வருமாறு: “மிகவும் எச்சரிக்கை: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கோழி இன்று பெங்களூரில் கண்டறியப்பட்டது, இந்த செய்தியைப் பரப்புங்கள் மற்றும், கோழி சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். உங்களுக்கு பிரியமானவர்களிடம் இதை பரப்புங்கள்.” நோய்வாய்ப்பட்ட தோற்றமுள்ள பாதி சவரன் செய்யப்பட்ட ஒரு கோழியின் படம் இந்த பதிவின் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே பார்க்கலாம்.

விசாரணை

இந்த கோழியின் படம் குறித்து கூகிள் ரிவர்ஸ் படத் தேடல் செய்து விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையைத் துவங்கியது. 2019 நவம்பர் 21 தேதியிட்ட இதே படத்தைக் கொண்ட ஒரு கட்டுரையை நாங்கள் கண்டறிந்தோம். 2019 நாவல் கொரோனா வைரஸ் அறிவிக்கப்படுவதற்கு முன்பே இந்த படம் கட்டுரையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள கோழியானது 2019 நாவல் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படவில்லை. கட்டுரையின் படி, படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோழியானது பிராய்லர் கோழியிடம் காணப்படும் சில தொற்றுநோய்களைக் காண்பிக்கிறது, நாவல் கொரோனா வைரஸினால் கோழி பாதிக்கப்பட்டுள்ளதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.

மத்திய கோழி வளர்ப்பு அமைப்பின் உதவி இயக்குநர் டாக்டர் சத்யநாராயணன் ஸ்வைன் அவர்களுடன் விஸ்வாஸ் நியூஸ் தொடர்பு கொண்டு இதுபோன்ற சம்பவம் குறித்து விசாரித்தது. அவர் கூறுகையில்: “இந்த கூற்று பொய்யானது. இது சமூக ஊடகங்களில் பரவும் பொய்யான தகவல். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.”

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் CSIR – நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவனத்தின் வைராலஜி துறையின் தலைமை விஞ்ஞானி டாக்டர் மனோஜ் குமார் அவர்களுடன் விஸ்வாஸ் நியூஸ் பேசியது. அவருடைய கூற்றுப்படி, “இருமல் மற்றும் தும்மல் போன்ற சுவாச பிரச்சினைகள் உள்ள பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கி பழகுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது. இந்த கூற்று உண்மையாக இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.”

உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, கோவிட்-19 வைரஸ் எந்த மிருகத்திடம் இருந்து வந்தது என்று இன்னும் கண்டறியப்படவில்லை.

கொரோனா வைரஸ் பற்றிய பொய்யான மற்றும் தவறான பதிவுகளை விஸ்வாஸ் நியூஸ் முன்பே பொய் என்று நிரூபித்துள்ளது. இந்த பதிவுகளை இங்கே பார்க்கலாம்.

 

निष्कर्ष: கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட கோழி பெங்களூரில் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறும் பதிவு பொய்யானது படம் பழையது, இது 2019 நாவல் கொரோனா வைரஸுடன் தொடர்புடையது அல்ல.

  • Claim Review : High alert: Chicken infected from corona virus found in Bangalore today, kindly circulate the message and avoid consumption of chicken. Spread to your dear ones.
  • Claimed By : Bangalore Re Rahuthiba Odia
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later