புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்): இந்திய ராணுவத்தில் பணிபுரியும் நாய்கள் ஓய்வு பெற்ற பிறகு கொல்லப்படுகின்றன, ஏனெனில் அவைகளுக்கு உள்ளே இருக்கும் அனைத்து இடங்களும் தெரியும் என்ற கூறும் ஒரு ரீல் முகநூலில் பகிரப்பட்டதை விஸ்வாஸ் நியூஸ் கண்டது. விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் இந்தக் கூற்று தவறானது எனக் கண்டறிந்தது. இந்திய ராணுவத்தில் பணிபுரியும் நாய்கள் ஓய்வு பெற்ற பிறகு கொல்லப்படுவதில்லை.
முகநூல் பயனர், மம்ஸ் லாட்லா பர்வேஜ் ரீலைப் பகிர்ந்து எழுதியது: நீக்கப்பட்டது
மொழிபெயர்ப்பு: இராணுவ நாய்கள் ஏன் சுட்டுக் கொல்லப்படுகின்றன?
இடுகை மற்றும் காப்பக பதிப்பை இங்கே பார்க்கவும்
விஸ்வாஸ் நியூஸ் முக்கிய வார்த்தை தேடலுடன் தனது விசாரணையைத் தொடங்கியது.
yourstory.com என்ற இணையதளத்தில் ஒரு செய்தியை நாங்கள் கண்டோம், அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கிடைக்கப்பெற்ற அதிர்ச்சி அதிர்ச்சியளிக்கும் பதிலில், இந்திய இராணுவம் தனது நாய்களை ஓய்வு பெறும்போது அல்லது அந்த நாய்கள் எந்த ஒரு விஷயத்திலும் ஒரு மாதத்திற்கு மேல் சேவைக்கு தகுதியற்றவைகள் என்று தீர்மானிக்கப்படும் போது. இந்திய இராணுவம் அந்த நாய்களை கருணைக்கொலை செய்கிறது. இது ஜூன் 2015 இல், தி ஹஃபிங்டன் போஸ்ட் மூலம் தெரிவிக்கப்பட்டது. ஒரு வருடம் கழித்து, ஓய்வு பெற்ற நாய் வீரர்களுக்கு ஒரு நல்ல மற்றும் உயிர் காக்கும் செய்தி உள்ளது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், டில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார், அதில் ஓய்வுக்குப் பிறகு ராணுவ நாய்களை கருணைக்கொலை செய்வதை நிறுத்துவதற்கான கொள்கையை அரசாங்கம் செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.
அந்த கட்டுரையை இங்கே பாருங்கள்.
நாங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணயதளத்திலும் ஒரு அறிக்கையை கண்டோம், அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இராணுவ நாய்கள் செயலில் சேவையில் இல்லாத பிறகு கருணைக்கொலை செய்யும் நடைமுறை முன்பு இருந்தது. 2015-ல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்தத் தகவலை வழங்கியது பொதுக் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டது.“
அடுத்த கட்ட விசாரணையில் கர்னல் அமோத் குல்கர்னியை (ஓய்வு) நாங்கள் தொடர்பு கொண்டோம். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கருணைக்கொலை ஒரு பொதுவான நடைமுறையாக இருந்தது, ஆனால் மிகவும் நோய்வாய்ப்பட்ட நாய்களை மட்டுமே கருணைக்கொலை செய்யப்பட்டது என்று அவர் எங்களிடம் கூறினார். நாய்கள் தேவையில்லாமல் கொல்லப்படவில்லை. இருப்பினும், இப்போது அந்த முறை கூட அகற்றப்பட்டு, நாய்கள் மீரட்டுக்கு அனுப்பப்பட்டு, நன்கு பராமரிக்கப்படுகின்றன அல்லது அவைகளை தத்தெடுக்கும் படியாக கொடுக்கப்படுகின்றன. இந்த பழக்கம் முதலில் குதிரைகள் மற்றும் கோவேறு கழுதைகளுக்கும் பொதுவானதாக இருந்தது, ஆனால் இப்போது அவைகளையும் கூட உத்தரகாண்டில் உள்ள ஹெம்பூருக்கு அனுப்பப்படுகின்றன.
விசாரணையின் கடைசி கட்டத்தில், வைரலான ரீலைப் பகிர்ந்த முகநூல் பயனரின் சமூகப் பின்னணியைச் சரிபார்த்தோம். மம்ஸ் லாட்லா பர்வேக் 11K பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார் மற்றும் அவர் ஒரு யூடியூபராக உள்ளார்.
முடிவுரை: இந்திய ராணுவம் பணியில் இருந்து ஓய்வு பெற்ற நாய்களை கொல்லாது, அவை மீரட்டில் உள்ள நாய்களுக்கான முதியோர் இல்லத்தில் அனுப்பப்படுகின்றன, அல்லது அவைகளை தத்தெடுக்கும் படியாக கொடுக்கப்படுகின்றன..
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923