X
X

உண்மைத்தன்மை கண்டறிதல்: அமேசான் தொலைந்த பார்சல்களை 1 டாலருக்கு விநியோகிக்கவில்லை, வைரலான செய்தி ஒரு மோசடியாகும்

விஸ்வாஸ் நியூஸ் நடத்திய விசாரணையில், அமேசான் பெயரில் வைரலாகிக் கொண்டிருக்கும் இந்த செய்தி போலியானது என தெரியவந்தது. அமேசானுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுபோன்ற சரிபார்க்கப்படாத இணைப்புகளில் கிளிக் செய்வது உங்களுக்கு ஆபத்தானது.

  • By: Pallavi Mishra
  • Published: Aug 31, 2022 at 02:59 PM
  • Updated: Jul 7, 2023 at 05:51 PM

புது தில்லி (விஸ்வாஸ் அணி). அமேசான் ஷாப்பிங் தளம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகிக் கொண்டிருக்கிறதுறது. அமேசான் நிறுவனம் தொலைந்து போன பார்சல்களை இலவசமாக விநியோகம் செய்வதாக இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதனுடன் ஒரு இணைப்பும் பகிரப்படுகிறது. விஸ்வாஸ் நியூஸ் நடத்திய விசாரணையில், இந்தக் கூற்று போலியானது என்று தெரியவந்துள்ளது.

வைரலாகிக் கொண்டிருக்கிறதுறது என்ன ?

Wholesale Liquidation Pallet‘ (Archive) என்ற பெயரில் ஒரு (ஃபேஸ்புக்) முகநூல் பக்கம் இந்த வைரலான பதிவைப் பகிர்ந்துள்ளது. வைரலான செய்தியில், ‘கிடங்குகளில் தொலைந்து போன பொட்டலங்கள் ஏராளமாக தினமும் குவிந்து கிடக்கின்றன. விதியின்படி, அமேசான் இந்த பொட்டலங்களை தூக்கி குப்பையில் வீசி விடலாம், ஆனால் இப்போது அமேசான் ஒரு விளம்பரம் செய்து பொட்டலங்களை வரிசையற்ற முறையில் எடுத்து அவைகளை வெறும் 1$-க்கு வழங்குகிறார்கள்! நீங்கள் உபகரணங்கள், ஐபோன்கள், சமையலறை பொருட்கள் அல்லது பிற பொருட்களை எளிதாகப் பெறலாம்! 👉https://bit.ly/Get_Form_US_Pallets Limited quantities available’ என்ற முகவரியில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் யார் வேண்டுமானாலும் பார்சலைப் பெறலாம்!!!.’

விசாரணை

விஸ்வாஸ் நியூஸ் முதலில் இடுகையில் பகிரப்பட்டிருந்த இணைப்பை சொடுக்கியது. அப்பொழுது திறக்கப்பட்ட பக்கம் அமேசானின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கான இணைப்பாக இருக்கவில்லை. முக்கிய வார்த்தைகளின் உதவியுடன் நாங்களும் இணையத்தில் தேடினோம், ஆனால் அத்தகைய சலுகையைப் பற்றிய எந்தவொரு தகவலையும் எங்களால் காண இயலவில்லை. அமேசான் போன்ற ஒரு பிரபலமான ஷாப்பிங் இணையதளம் இதுபோன்ற நிகழ்வை ஏற்பாடு செய்தால், உண்மையான (அதிகாரபூர்வ) ஊடகங்கள் நிச்சயமாக அதை உள்ளடக்கும்.

இது தொடர்பாக நாங்கள் அமேசானை நேரடியாக தொடர்பு கொண்டோம். அமேசான் உதவி (ஹெல்ப்லைன்) எண்ணில் நிர்வாகி ஸ்மிதா ஷர்மாவிடம் நாங்கள் பேசினோம். இந்த வைரலான பதிவு குறித்த தகவல்களைத் நாங்கள் தேடினோம். பதிலுக்கு, அதை போலி என்று கூறி, இந்த இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

இந்தத் தலைப்பில் மேலும் தகவலுக்காக, நாங்கள் இணைய பாதுகாப்பு நிபுணரும், ராஜஸ்தான் அரசின் பொதுக் குறைதீர்ப்புக் குழுவின் முன்னாள் தகவல் தொழில்நுட்ப ஆலோசகருமான ஆயுஷ் பரத்வாஜைத் ​​தொடர்பு கொண்டோம். “இந்த செய்தியின் மூலம், ஒரு கணக்கெடுப்பில் பங்கேற்குமாறு பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்று அவர் எங்களிடம் கூறினார். இதனுடன், அமேசான் தயாரிப்புகளும் போலியாக்கப்பட்டு வருகின்றன. இந்த URL அமேசானுக்கு சொந்தமானது (அமேசானை சார்ந்தது) அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தகவல்களை இங்கே கொடுப்பது ஆபத்தானது.

இந்த இடுகை முகநூலில் (ஃபேஸ்புக்கில்) ஹோல்சேல் லிக்யுடேஷன் பேலட் என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. 111 பேர் இந்த பக்கத்தைப் பின்தொடர்கின்றனர்.

निष्कर्ष: விஸ்வாஸ் நியூஸ் நடத்திய விசாரணையில், அமேசான் பெயரில் வைரலாகிக் கொண்டிருக்கும் இந்த செய்தி போலியானது என தெரியவந்தது. அமேசானுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுபோன்ற சரிபார்க்கப்படாத இணைப்புகளில் கிளிக் செய்வது உங்களுக்கு ஆபத்தானது.

  • Claim Review : ‘ஒவ்வொரு நாளும் கிடங்குகளில் தொலைந்து போன பொட்டலங்கள் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன. விதியின்படி, அமேசான் இந்த பொட்டலங்களை தூக்கி குப்பையில் வீசி விடலாம், ஆனால் இப்போது அமேசான் ஒரு விளம்பரம் செய்து, பொட்டலங்களை வரிசையற்ற முறையில் எடுத்து அவைகளை வெறும் 1$-க்கு வழங்குகிறார்கள்!
  • Claimed By : (ஃபேஸ்புக்) முகநூல் பக்கம் ஹோல்சேல் லிக்யுடேஷன் பேலட்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later