இந்த வைரல் இடுகை தவறானது. லீப் ஆண்டு தவிர, ஒவ்வொரு ஆண்டின் பிப்ரவரி மாதத்திலும் 28 நாட்கள் மட்டுமே உள்ளன. இதனால் வாரத்தின் ஒவ்வொரு நாளும் பிப்ரவரியில் நான்கு முறை மட்டுமே வருகிறது. இது ஒரு அரிய தற்செயல் நிகழ்வு அல்ல.
புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்). இவ்வாண்டின் பிப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு நாளும் மாதத்தில் நான்கு முறை வருவதால், இந்த ஆண்டு பிப்ரவரி மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும், இந்தத் தற்செயல் 823 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வருகிறது என்றும் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு பதிவு கூறுகிறது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், இந்தக் கூற்று தவறானது என்று கண்டறிப்பட்டது.
கூற்று
பேஸ்புக் பயனர் அக்ஸி மித்ரீ அலிஸ் என்பவர், “ஹாய் காய்ஸ்… 2021 நாட்காட்டியில் நீங்கள் இதைக் கவனித்தீர்களா? இந்த ஆண்டின் பிப்ரவரி மீண்டும் உங்கள் வாழ்க்கையில் வராது. ஏனெனில் இந்த ஆண்டு பிப்ரவரியில் 4 ஞாயிறு, 4 திங்கள், 4 செவ்வாய், 4 புதன், 4 வியாழன், 4 வெள்ளி, 4 சனிக்கிழமைகள் உள்ளன. ஒவ்வொரு 823 ஆண்டுக்கு ஒருமுறை இது நடைபெறும். இந்த ஆண்டு பிப்ரவரி மிகவும் தனித்துவமானது. ” என்று எழுதியுள்ளார்.
இந்த வைரல் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
நாங்கள் நாட்காட்டியை பரிசோதிப்பதின் மூலம் எங்கள் விசாரணையைத் தொடங்கினோம். பிப்ரவரியில் ஒவ்வொரு நாளும் நான்கு முறை வருகிறது என்பது உண்மைதான் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம்.
இதன் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டுபிடிக்க நாங்கள் முயன்றபோது, லீப் ஆண்டைத் தவிர, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரியில் 28 நாட்கள் உள்ளன, அதன்படி வாரத்தில் ஏழு நாட்கள். எனவே வாரத்தின் ஒவ்வொரு நாளும் நான்கு முறை வரும்.
அதேசமயம், லீப் ஆண்டில், பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் உள்ளன. இதன் காரணமாக, ஏதேனும் ஒரு நாள் மாதத்தில் ஐந்து முறை வரும், மீதமுள்ள நாட்கள் நான்கு முறை வரும்.
இந்த தற்செயலை 823 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நீங்கள் காண முடியும் என்று இந்த இடுகை கூறுகிறது. இந்தக் கூற்றை விசாரிக்க நரம்பியல் நிபுணர் சஞ்சய் சர்மாவை நாங்கள் தொடர்பு கொண்டோம். நம்மிடத்தில் பேசிய அவர், “இதில் தற்செயல் ஏதுமில்லை. லீப் ஆண்டைத் தவிர, மற்ற ஆண்டுகளில் வரும் பிப்ரவரி மாதத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் நான்கு முறை வருவது இயல்பான ஒன்றே. எனவே, வைரல் இடுகையில் கூறப்பட்டுள்ள கூற்று தவறானது,” என்று அவர் கூறினார்.
இந்த இடுகையை பேஸ்புக்கில் பகிர்ந்த பயனரான அக்ஸி மித்ரீ அலிஸின் கணக்கினை நாங்கள் ஆராய்ந்ததில், இந்தப் பயனர் இந்தோனேசியாவின் பண்டுங்கை சேர்ந்தவர் என்பதைக் கண்டறிந்தோம்.
निष्कर्ष: இந்த வைரல் இடுகை தவறானது. லீப் ஆண்டு தவிர, ஒவ்வொரு ஆண்டின் பிப்ரவரி மாதத்திலும் 28 நாட்கள் மட்டுமே உள்ளன. இதனால் வாரத்தின் ஒவ்வொரு நாளும் பிப்ரவரியில் நான்கு முறை மட்டுமே வருகிறது. இது ஒரு அரிய தற்செயல் நிகழ்வு அல்ல.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923