கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இறுதிக்குப் பிறகு, பிரதமர் மோடியுடன் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, முகமது ஷமி மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் இருக்கும் பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
புது டெல்லி | விஷ்வாஸ் நியூஸ் : கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இறுதிக்குப் பிறகு, பிரதமர் மோடியுடன் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, முகமது ஷமி மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் இருக்கும் பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. ரோஹித், ஷமி மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் பிரதமர் மோடியின் பாதங்களைத் தொட்டதாகக் கூறப்படும் கூற்றுடன் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
விஷ்வாஸ் நியூஸ் நடத்திய விசாரணையில், வைரலான புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டவை என்பது உறுதியானது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான போட்டியைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்து ஊக்கப்படுத்தினார். உரையாடலின் போது, பிரதமர் மோடி ஷமியை கட்டிப்பிடித்து அவரது ஆட்டத்தைப் பாராட்டினார்.
இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு ரோஹித் ஷர்மா பிரதமர் மோடியின் பாதங்களைத் தொட்டு வரவேற்றதாக ஃபேஸ்புக் பயனர் ‘எல்எஸ் மீனா’ (‘LS Meena’) நவம்பர் 20 அன்று போஸ்ட் செய்துள்ளார்.
மற்றொரு ஃபேஸ்புக் பயனர் ‘ஹெமிங்கோ ஹிந்தி’ நவம்பர் 20 அன்று வீடியோவை வெளியிட்டு “பாருங்கள், ஷமி மோடியின் பாதங்களைத் தொட்டார், மோடி அவரைக் கட்டிப்பிடித்தார்; இதைப் பார்த்த ஹசீன் ஜஹான் கோபமடைந்தார், இதைக் கேட்டால் நீங்கள் திகைத்துப் போவீர்கள்.” என்று எழுதியுள்ளார்.
இந்த வீடியோவில், “இறுதிப் போட்டிக்குப் பிறகு ஷமியை பிரதமர் மோடி டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்தார். இந்நிகழ்வில், ஷமி பிரதமரின் பாதங்களைத் தொட்டார். இதைத் தொடர்ந்து ஹசீன் ஜஹான் கூறுகையில், ஷமி ஒரு முஸ்லீமாக இருந்து மோடியின் பாதங்களைத் தொட்ட விதம் தவறு என்று கூறினார்.” என்று ஒலிப்பதைக் கேட்க முடிகிறது.
கிரிக்கெட் எக்ஸ்சேஞ்ச் என்ற யூடியூப் சேனலும் நவம்பர் 20 அன்று ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளது. இந்த வீடியோவில், ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் பிரதமர் மோடியின் பாதங்களைத் தொடுவதைக் காண முடிகிறது.
மூன்று கூற்றுகளையும் ஒவ்வொன்றாக ஃபேக்ட்-செக் செய்தோம்.
முதல் வீடியோ
முதலில், ரோஹித் சர்மா மற்றும் பிரதமர் மோடி தொடர்பான வைரல் வீடியோவை நாங்கள் ஆய்வு செய்தோம் . எங்கள் விசாரணையின் போது, வைரல் கூற்றை உருவாக்கும் கீ ஃப்ரேம் பற்றிய முக்கிய வார்த்தைகளை நாங்கள் தேடினோம். நவம்பர் 20 ஆம் தேதி அஸ்மித் ஸ்போர்ட்ஸ் என்ற யூடியூப் சேனலில் ஒரு வீடியோ பதிவேற்றப்பட்டு இருக்கிறது. இதில், வைரல் படம் போன்ற ஒரு புகைப்படத்தை காணலாம். இரண்டு படங்களிலும் பிரதமர் மோடியைக் காணலாம், ஆனால் இந்த யூடியூப் படத்தில் ரோஹித் சர்மா இல்லை.
நவம்பர் 20 அன்று க்ரிஷி ஜாக்ரன் பிசினஸின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட வீடியோவின் தொடக்கத்தில் வைரல் கீஃப்ரேமைக் காணலாம். இதில் பிரதமர் மோடியைக் காணலாம், ஆனால் ரோஹித் சர்மா இல்லை. வைரலான படம் எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை இது காட்டுகிறது.
இரண்டாவது வீடியோ
இரண்டாவது வீடியோவில், இந்திய அணியை ஊக்குவிக்க பிரதமர் மோடி டிரஸ்ஸிங் அறைக்கு சென்றபோது, ஷமி அவரது பாதங்களைத் தொட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஷமியின் செயலுக்காக ஹசின் ஜஹான் அவரை தாக்கினார் என கூறப்பட்டுள்ளது. வைரல் கூற்றைச் சரிபார்க்க, முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமுக்கு பிரதமர் மோடி சென்ற வீடியோவை ஏஎன்ஐ தனது எக்ஸ் ஹேண்டில் வெளியிட்டுள்ளது. நவம்பர் 21 அன்று பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவில், பிரதமர் மோடி ஷமியைக் கட்டிப்பிடிப்பதைக் காணலாம், ஆனால் ஷமி பிரதமர் மோடியின் பாதங்களைத் தொடுவதைக் காண முடியவில்லை.
இதே வீடியோ நவம்பர் 21ஆம் தேதி பிரதமர் மோடியின் யூடியூப் சேனலிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் ஷமியை பிரதமர் மோடி கட்டிப்பிடிப்பதைக் காணலாம். ஷமி தனது இன்ஸ்டாகிராம் ஹேண்டிலில் பிரதமர் மோடியுடன் தனது புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டார், மேலும் “துரதிர்ஷ்டவசமாக நேற்று எங்கள் நாள் அல்ல. போட்டி முழுவதும் எங்கள் அணிக்கும் எனக்கும் ஆதரவாக இருந்த அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். குறிப்பாக டிரஸ்ஸிங் ரூமுக்கு வந்து எங்களை ஊக்கப்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் மீண்டும் வருவோம்!”
வைரல் கூற்றை உறுதிப்படுத்தும் எந்தத் தகவலையும் எந்த ஊடக அறிக்கையிலும் நாங்கள் காணவில்லை. இது தவிர, ஹசீன் ஜஹான் தொடர்பான முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி செய்யப்பட்ட க்ளைம்களையும் நாங்கள் தேடினோம். இருப்பினும், அத்தகைய அறிக்கை எதையும் நாங்கள் காணவில்லை.
மூன்றாவது கூற்று
மற்றொரு வீடியோவில், பிரதமர் மோடியின் பாதங்களை பாட் கம்மின்ஸ் தொட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கூற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே படம் தான், ரோஹித் ஷர்மா பிரதமர் மோடியின் பாதங்களை தொட்டதாக சித்தரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு படங்களுக்கும் இடையேயான ஒரே வித்தியாசம் புகைப்படத்தில் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் இல்லாததுதான்.
புகைப்படமும் எடிட் செய்யப்பட்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. தெளிவுபடுத்துவதற்காக, டைனிக் ஜாக்ரனின் (Dainik Jagran) விளையாட்டுச் செய்தி ஆசிரியர் அபிஷேக் திரிபாதியைத் தொடர்பு கொண்டோம். “வைரல் படங்கள் எடிட் செய்யப்பட்டவை” என்று அவர் கூறினார்.
பகிர்ந்த பயனரின் சுயவிவரத்தை ஆராய்ந்ததில், பில்வாராவில் வசிக்கும் பயனருக்கு 668 பின்தொடர்பாளர்கள் இருப்பதைக் கண்டறிந்தோம். கூடுதலாக, க்ரிக்கெட் எக்ஸ்சேஞ் (Cricket Exchange) என்ற யூடியூப் சேனல், பிரதமர் மோடியின் பாதங்களை ரோஹித் சர்மா தொட்டதாக போலியான வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளது.
முடிவு: பிரதமர் மோடியுடன் ரோஹித் ஷர்மா, முகமது ஷமி மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் பாட் கம்மினஸ் இடம்பெறும் பல்வேறு வைரல் படங்கள் எடிட் செய்யப்பட்டவை. இந்த படங்கள் பார்வைகளைப் பெறவும், பரபரப்பை உருவாக்கவும் வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளன, தவிர இவை எதார்த்தத்துடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923