உண்மை சரிபார்ப்பு: நசீருதீன் ஷாவுக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை, இந்த வைரல் பதிவு தவறானது

நசீருதீன் ஷாவுக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரல் பதிவு தவறானது. இருப்பினும், சமீபத்திய பேட்டியில், விவசாயிகள் இயக்கத்திற்கு ஷா ஆதரவு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). பாலிவுட் நடிகர் நசீருதீன் ஷா பெயரில் ஒரு ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அவர் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்பது போன்று அந்த ட்வீட்டில் கூறப்பட்டுள்ளது.

விஸ்வாஸ் நியூஸ் இந்த வைரல் இடுகையை பற்றி விசாரித்தபோது, ​​நசீருதீன் ஷாவுக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை என்பது எங்களுக்குத் தெரியவந்தது. இந்த வைரல் பதிவு தவறானது. இருப்பினும், சமீபத்திய பேட்டி ஒன்றில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஷா ஆதரவு தெரிவித்துள்ளார்.

கூற்று

பேஸ்புக் பயனர் சயீத் ஹமீத் ஜனவரி 8 அன்று நசீருதீன் ஷாவின் போலி கணக்கிலிருந்து வந்த ட்வீட்டை வெளியிட்டுள்ளார். அந்த இடுகையில்: ‘அவர்கள் 30 ரூபாய் எண்ணெய்க்கு 60 ரூபாய் வரி வேண்டும், விவசாயி தனது கடின உழைப்பிற்கு எம்.எஸ்.பி கேட்டால் அவர் ஒரு துரோகி. ‘ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பேஸ்புக் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

விவசாயிகள் போராட்டம் குறித்து நசீருதீன் ஷாவின் நிலைப்பாட்டைக் கண்டுபிடிக்க, நாங்கள் இது குறித்து கூகுளில் தேடினோம். அவ்வாறு தேடியதில், அவரது நேர்காணலை சில வலைத்தளங்களில் நாங்கள் கண்டோம். அதில் அவர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசுவதைக் காண முடிந்தது.

நசீருதீன் ஷாவின் போலி ட்விட்டர் கணக்கின் ட்வீட்டுகள் மிகவும் வைரலாகி வருவதாகக் கூறும் சில அறிக்கைகள் நமக்குக் கிடைத்தன. ஒன்இந்தியாவின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், நசிருதீன் ஷாவின் மனைவி ரத்னா பதக், “ட்விட்டரில் நசீருதீனுக்கு கணக்கு இல்லை. அவர் பெயரிடப்பட்ட ஒரு போலி கணக்கிலிருந்து பல ட்வீட்டுகள் வந்துள்ளன. இது தொடர்பாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று கூறியுள்ளார்.

நடிகரின் போலி கணக்கான @naseruddin_shah என்ற கணக்கை நாங்கள் ஆராய்ந்தோம். அதில் இந்த கணக்கு 2019 ஜூலையில் உருவாக்கப்பட்டது என்பதையும், 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதைப் பின்தொடர்கிறார்கள் என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

மும்பையில் பாலிவுட்டை குறித்த செய்திகளை சேகரிக்கும் டைனிக் ஜாக்ரனின் முன்னணி நிருபர் ஸ்மிதா ஸ்ரீவாஸ்தவாவை நாங்கள் தொடர்பு கொண்டு, இந்த வைரல் பதிவை அவருடன் பகிர்ந்து கொண்டோம். நசிருதீன் ஷாவின் மகன் வீவன் ஷாவுடன் அவர் தொடர்பு கொண்டு பேசினோம். அவரது தந்தை ட்விட்டரில் இல்லை என்றும், இது ஒரு போலி கணக்கு என்று விவான் கூறினார்.

இந்தப் போலி ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்த பேஸ்புக் பயனர் சயீத் ஹமீத்தின் கணக்கினை நாங்கள் ஆராய்ந்ததில், அவர் மும்பையைச் சேர்ந்தவர் என்பதையும், அவர் தொழில்ரீதியாக ஒரு பத்திரிகையாளர் என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். ​

निष्कर्ष: நசீருதீன் ஷாவுக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரல் பதிவு தவறானது. இருப்பினும், சமீபத்திய பேட்டியில், விவசாயிகள் இயக்கத்திற்கு ஷா ஆதரவு தெரிவித்துள்ளார்.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்