உண்மை சரிபார்ப்பு: இது நாசா வெளியிட்ட சூரியனின் மேற்பரப்பின் புகைப்படம் அல்ல
இந்த வைரல் புகைப்படத்திற்கும் நாசாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அமெரிக்க புகைப்படக் கலைஞர் ஜேசன் குன்செல் மென்பொருளின் உதவியுடன் படத்தை திருத்தியுள்ளார்.
- By: Amanpreet Kaur
- Published: Feb 11, 2021 at 11:42 PM
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). சூரியனின் மேற்பரப்பின் புகைப்படம், நாசா வெளியிட்ட சூரியனின் மேற்பரப்பின் தெளிவான புகைப்படம் என சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தப் புகைப்படத்திற்கும் நாசாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது அமெரிக்க புகைப்படக் கலைஞர் ஜேசன் குன்செலால் எடுக்கப்பட்டு, மென்பொருளின் உதவியுடன் திருத்தப்பட்டது.
கூற்று
பேஸ்புக் பயனர் ஃபாரூக் மாலிக் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, “நாசா வெளியிட்ட சூரியனின் மேற்பரப்பின் மிக தெளிவான படம்,” என்று எழுதியுள்ளார். இந்த வைரல் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இது குறித்து விசாரிக்க, கூகுள் பின்னோக்கிய படக் கருவியைப் பயன்படுத்தி இந்த புகைப்படத்தை தேடியதில், இதை fineartamerica.com என்ற இணையதளத்தில் கண்டறிந்தோம். ஜேசன் குன்ஸல் என்ற புகைப்படக் கலைஞர் இந்த படத்தை 16 ஜனவரி அன்று பதிவேற்றியுள்ளார். இந்தப் படத்துடன் உள்ள கூற்றில், “மெக்னடிக் சன் என்பது ஜேசன் குயென்சலின் புகைப்படமாகும்…” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வலைத்தளத்தில் உள்ள ஜேசனின் சுயவிவரத்தில் அவர் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது.
13 ஜனவரி ஆம் தேதி ஜேசன் வைரஸ் படத்தை ட்வீட் செய்ததை நாங்கள் கண்டறிந்தோம். அதில் “மென்பொருள் உதவியுடன் பெரிதாக காட்டப்பட்டுள்ள இந்த சூரிய நிறமூர்த்தத்தின் புகைப்படம் நமது நட்சத்திரத்திற்குள் உள்ள காந்தப்புலத்தின் சிக்கலான தன்மையை காட்டுகிறது. அறிவியலுக்கும் கலைக்கும் இடையில் மெல்லிய கோட்டில் நடப்பது… ஒருவேளை அதை கொஞ்சம் மங்கலாக்குவது. #ஆஸ்ட்ரோஃபோட்டோகிராபி # ஸ்பேஸ் # சோலார் # ஸ்டார் # பவர்,” என்று எழுதியுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் கணக்கில், ஜனவரி 12 ஆம் தேதி அவர் இந்தப் படத்தை வெளியிட்டு, இந்தப் புகைப்படத்தை மென்பொருள் உதவி கொண்டு அழகாக தெரிவது போன்று பெரிதும் திருத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
நாங்கள் மின்னஞ்சல் மூலம் ஜேசனை தொடர்பு கொண்டதில், இந்த வைரல் புகைப்படம் அவரது படைப்பு என்பதை அவர் உறுதிப்படுத்தினார். மேலும் சிலர் இதை நாசாவுடன் தவறாகக் தொடர்புபடுத்திக் கொள்வதாகவும் அவர் கூறினார். எங்கள் அஞ்சலுக்கு அவர் எழுதிய பதிலில், “மனித கண்ணிற்கு புலப்படாத விவரங்களை வெளியிடுவது என் மிகவும் பிடிக்கும். இது ஹைட்ரஜனால் வெளிப்படும் ஒளியைத் தவிர அனைத்து ஒளியையும் தடுக்கும் ஒரு சூரிய தொலைநோக்கி மூலம் ஒரு வடிகட்டியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டது,” என்று கூறியுள்ளார்.
நாசாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சமூக ஊடக கணக்குளை நாங்கள் ஆராய்ந்தோம், ஆனால் இந்த வைரல் புகைப்படத்தை எங்கும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்த உண்மை சரிபார்ப்பிற்காக நாங்கள் நாசா தலைமையகத்தில் உள்ள ஹீலியோபிசிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பிரிவின் தலைவர் கரேன் சி.ஃபாக்ஸிடம் பேசியதில், இது நாசாவின் புகைப்படம் அல்ல என்றும், இது ஒரு அழகான கலைப் படத்தை உருவாக்க டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்ட ஒரு எச்-ஆல்பா படம் என்றும், மேலும் இதை ஜேசன் குன்ஸல் முதலில் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் என்றும் கூறினார்.
இந்த கூற்றைப் பகிர்ந்து கொண்ட பேஸ்புக் பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், பாரூக் மாலிக் பாகிஸ்தானின் லாகூரில் வசிப்பவர் என்பது தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் புகைப்படத்திற்கும் நாசாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அமெரிக்க புகைப்படக் கலைஞர் ஜேசன் குன்செல் மென்பொருளின் உதவியுடன் படத்தை திருத்தியுள்ளார்.
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.