உண்மைச் சரிபார்ப்பு: நிர்வாணமாக சாலையில் ஆர்ப்பாட்டம் செய்யும் இந்தப் புகைப்படத்துக்கும் கர்நாடகாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை

விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்தக் கூற்று பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த படம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த ஒரு பழைய சம்பவத்தின் படம் ஆகும்.

உண்மைச் சரிபார்ப்பு: நிர்வாணமாக சாலையில் ஆர்ப்பாட்டம் செய்யும் இந்தப் புகைப்படத்துக்கும் கர்நாடகாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை

புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்). செப்டம்பர் 8 ஆம் தேதி, கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் நடந்த மத ஊர்வலத்தில் ஒரு தலித் சிறுவன் சிலையைத் தொட்டதற்காக தாக்கப்பட்டு, அவனது குடும்பத்திற்கு அபராதம் விதிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அந்த தலித் குடும்பம் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அவமானப்படுத்தப்பட்டதாகவும் கூறி ஒரு சில நிர்வாண ஆர்ப்பாட்டக்காரர்களின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

விஸ்வாஸ் நியூஸ் விசாரணையில் இந்தக் கூற்று பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூற்றை ஆதரிக்கும் வகையில் பரப்பப்பட்ட வைரலான படம் சமீபத்தியது அல்ல. அந்த பதியப்பட்ட சம்பவம் அக்டோபர் 7, 2015 அன்று உ.பி., கிரேட்டர் நொய்டாவில் நடந்தது. இருப்பினும், கர்நாடகாவில் மதச் சிலையைத் தொட்டதற்காக சிறுவன் ஒருவன் கடுமையாக தாக்கப்பட்டதையும், உள்ளூர் பஞ்சாயத்தால் அவனது குடும்பத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதையும் உறுதிப்படுத்தும் விதமாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருந்தபோதிலும், அந்த குடும்பம் பகிரங்கமாக நிர்வாணமாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது என்பதை உறுதிபடுத்தும்படியான எந்த அறிக்கையும் இல்லை.

வைரலான பதிவில் என்ன இருக்கிறது ?

‘தி ஒகேஷனல் பிரைம் மினிஸ்டர்’ என்ற ட்விட்டர் பயனாளர் இந்தப் படத்தைப் பதிவிட்டு, “கோயிலுக்குள் நுழைந்து சிலையைத் தொட்டதற்காக கர்நாடகாவில் ஒரு தலித் குடும்பம் நிர்வாணமாக சித்திரவதை செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதை அறிந்து வெட்கப்படுகிறேன். நாம் மனிதர்களா? என்று சொல்லி வெறுமனே சபித்தார்!”

விசாரணை

விஸ்வாஸ் நியூஸ் முதலில் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலைப் பயன்படுத்தி வைரலான படத்தைத் தேடியது. பல இணையப் பக்கங்களில் வைரலான படத்தை நாங்கள் கண்டோம். அக்டோபர் 10, 2015 தேதியிட்ட இந்தியா டுடே இணையதளத்தில் வெளியான ஒரு கதையிலும் இந்தப் புகைப்படத்தைக் கண்டோம். செய்தி நிலவரப்படி, இந்த சம்பவம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள டான்கூர் காவல் நிலையத்தில் நடந்துள்ளது. “ஆதிதிராவிடருக்கான (பட்டியலிடப்பட்ட சாதியினருக்கான) தேசிய ஆணையக் குழு வெள்ளிக்கிழமை உத்தரப் பிரதேசத்தின் கௌதம் புத் நகரில் உள்ள டான்கவுர் பகுதிக்குச் சென்று பொது அருவருப்புக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தலித்துகளைச் சந்தித்தனர். திருட்டு புகாரை பதிவு செய்ய காவல்துறை மறுத்ததைக் கண்டித்து கவுதம் புத் நகரில் உள்ள தங்கவுரில் உள்ள சந்தையில் தங்கள் ஆடைகளை வீசி எறிந்த, மூன்று பெண்கள் உட்பட 5 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். என்று செய்தி அறிக்கை கூறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்த மற்றொரு செய்தியை jagran.com -லும் நாங்கள் கண்டோம். அந்த அறிக்கையின்படி, “திருட்டு வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், தலித் குடும்பத்தினர் புதன்கிழமை தங்கவுரில் தங்கள் ஆடைகளை வீசி எறிந்தனர். திருட்டு வழக்கில் போலீசார் வழக்கு பதிவு செய்தும், குற்றவாளிகளை கைது செய்யவில்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். ஊரில் நடந்த உயர் அழுத்த நாடகத்தில், தலித் குடும்பத்தினர் கைத்துப்பாக்கியைக் திருடிக்கொண்டு, கொடிய தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டி, காவல்துறை அறிக்கை தாக்கல் செய்தது. மேலும் அந்த குடும்பம் ஆபாசமாக பேசியதாக ஊர் மக்களும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மூன்று பெண்கள் உட்பட அந்த குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.

2015 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பான ஒரு காணொளியையும் யூடியூபில் நாங்கள் கண்டோம். இந்த காணொளி அக்டோபர் 9, 2015 அன்று இந்தியா டுடேயின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டது. அந்த காணொளியும் டங்கூரில் நடந்த அதே சம்பவமாகும். அக்டோபர் 7-ம் தேதி, டான்கவுர் காவல் நிலையம் முன்பு தலித்துகள் நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வைரலான பதிவின் உண்மைத்தன்மையை அறிய, டைனிக் ஜாக்ரனின் நொய்டா நிருபர் அர்பித் திரிபாதியை நாங்கள் தொடர்பு கொண்டோம். “இந்த படம் அக்டோபர் 2015 இல் கிரேட்டர் நொய்டாவில் நடந்த சம்பவத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று அவர் எங்களிடம் கூறினார். இந்த நபர்கள் தங்கள் ஆடைகளை தாங்களாகவே கழற்றியுள்ளனர்.”

இதற்கிடையில், கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் இந்து கடவுள் சிலையை தலித் குடும்ப உறுப்பினர் ஒருவர் தொட்டதாகக் கூறி தலித் குடும்பத்துக்கு பஞ்சாயத்து ரூ.60,000 அபராதம் விதித்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. ஊர்வலத்தின் போது வெளியே எடுக்கப்பட்ட சிலையைத் தொட்டதற்காக குற்றம் சாட்டப்பட்ட நபர் தலித் சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எங்கு தேடியும் கூட, இந்த குடும்பத்தை நிர்வாணமாக்கிய சம்பவம் குறித்து எந்த செய்தி அறிக்கையும் எங்களுக்கு எங்கேயும் காண முடியவில்லை. இந்த சம்பவம் தொடர்பான முழு செய்தியை இங்கே படிக்கவும்.

இறுதியாக, தி அகேஷனல் பிரைம் மினிஸ்டர் என்ற ட்விட்டர் பக்கத்தின் சமூக ஸ்கேனிங் செய்தோம். இந்தப் பக்கம் மே 2021 இல் உருவாக்கப்பட்டது.

निष्कर्ष: விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்தக் கூற்று பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த படம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த ஒரு பழைய சம்பவத்தின் படம் ஆகும்.

Misleading
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்