உண்மை சரிபார்ப்பு: பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் சாலிகிராம் வெளியே எடுக்கப்படவில்லை, இந்த வைரல் கூற்று தவறானது
பெருந்நோய்த்தொற்றுகளின்போது பூரி ஜகந்நாதர் ஆலயத்திலிருந்து சாலிகிராம் வெளியே எடுக்கப்படுவதில்லை, சமூக ஊடகங்களில் பகிரப்படும் இந்த வைரல் கூற்றுக்கள் தவறானவை.
- By: Ankita Deshkar
- Published: Nov 23, 2020 at 11:30 PM
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). பூரி ஜகந்நாதர் ஆலயத்திலிருந்து சாலிகிராம் வெளியே எடுக்கப்பட்டுள்ளதாக கூறும் ஒரு இடுகை வாட்ஸ்அப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதை எங்களால் காண முடிந்தது. இது பூமியில் பெருந்நோய்த்தொற்று ஏற்படும்போதெல்லாம் வெளியே எடுக்கப்படுகிறது என்றும், கடைசியாக இது 1920 ஆம் ஆண்டில் வெளியே எடுக்கப்பட்டது என்றும், இதனைக் காண்பது மிகவும் அரிதானது என்றும் அந்த இடுகையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், இந்த கூற்று தவறானது என்று தெரியவந்துள்ளது.
கூற்று
இந்த இடுகை குறித்த விசாரணையில், பேஸ்புக்கில் புகைப்படம் மற்றும் காணொலி வடிவில் இந்த இடுகை பகிரப்பட்டு வருவதை நாங்கள் கண்டறிந்தோம்.
பேஸ்புக் பக்கமான, ‘माझे पान’ ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, “இது பூரி ஜகந்நாதர் ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட சாலிகிராம். நம் பூமியில் பெருந்நோய்த்தொற்று ஏற்படும்போதெல்லாம் இது வெளியே எடுக்கப்படுகிறது. இதற்குமுன் இது 1920 ஆம் ஆண்டில் வெளியே எடுக்கப்பட்டது, தற்போது 2020 ஆம் ஆண்டில் வெளியே எடுக்கப்பட்டுள்ளது,” என்று கூறுகிறது. இதன் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
இதேபோன்ற கூற்றுடன் காணொலியொன்று பகிரப்படுவதையும் எங்களால் காண முடிந்தது. இந்த காணொலியானது ‘MAA Vighneshwari – Kotavad’ என்ற பேஸ்புக் பக்கத்தால், இதேபோன்ற கூற்றுடன் பகிரப்பட்டுள்ளது.
விசாரணை
இது குறித்த விசாரணையை, இணையத்தில் இச்சம்பவம் குறித்த சொற்களை தேடுவதன் நாங்கள் துவங்கினோம். எங்களின் இந்தத் தேடலில், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு செய்தியை நாங்கள் கண்டோம். “பூரி கோவில் தெய்வம் நோயைத் தணிக்க வெளியே வருகிறது” என்ற தலைப்பிடப்பட்டிருந்த அந்த செய்தி அறிக்கையில், சாலிகிராம் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை. இந்தச் செய்தி 30 மார்ச் 2020 அன்று இணையதளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.
இந்த வைரல் இடுகையில் உள்ள மற்றொரு கூற்று, இது 1920 ஆம் ஆண்டில் கடைசியாக வெளியே எடுக்கப்பட்டது என்று கூறுகிறது. அக்கூற்றில் கூறப்பட்டுள்ளபடி, 1920 ஆம் ஆண்டில் பூமியில் பெருந்நோய்தொற்று பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இது குறித்து வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “ ‘ஸ்பானிஷ் ஃப்ளு’ என்று அறியப்படும், 1918 H1N1 காய்ச்சல் தொற்றானது, உலகளவில் 50 மில்லியன் மக்களின் இறப்புக்கு காரணமாக அமைந்தது, இதில் 675,000 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். 15 முதல் 34 வயதுடைய ஆரோக்கியமான பெரியவர்களிடையே ஏற்பட்ட அதிக இறப்பு விகிதத்திற்கு இந்த வைரஸின் அசாதாரண பண்பே காரணமாகும்,” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து விசாரிக்க, ஒடிசாவில் உள்ள பூரி ஜகந்நாதர் ஆலயத்தின் அர்ச்சகர் விஸ்வபாசு பினாயக்தாஸ் மகாபத்ராவை நாங்கள் தொடர்பு கொண்டோம். “இந்த புகைப்படம் மற்றும் காணொலி பல நாட்களாக வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படம் மற்றும் காணொலியுடன் சேர்த்து பகிரப்படும் கூற்று தவறானது. ஒரு பெருந்நோய்த்தொற்று ஏற்படும்போது, ஜகந்நாத் கோவிலில் சாலிகிராம் வெளியே எடுக்கப்படுவதில்லை. அவ்வாறு எடுக்கப்படுவது இறைவன் நிருசிங்கா தான்,” என்று கூறினார்.
இந்த புகைப்படத்தைப் பகிர்ந்த பேஸ்புக் பக்கத்தை ஆராய்ந்ததில், ‘माझे पान’ என்ற இந்த பக்கம் ஜூலை 5 அன்று இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளதையும், இப்போது வரை இந்த புகைப்படத்திற்கு 4.6 ஆயிரம் லைக்குகள் உள்ளன என்பதையும், 1,056,847 பேர் இந்தப் பக்கத்தை விரும்புகிறார்கள் என்பதையும் எங்களால் காண முடிந்தது.
निष्कर्ष: பெருந்நோய்த்தொற்றுகளின்போது பூரி ஜகந்நாதர் ஆலயத்திலிருந்து சாலிகிராம் வெளியே எடுக்கப்படுவதில்லை, சமூக ஊடகங்களில் பகிரப்படும் இந்த வைரல் கூற்றுக்கள் தவறானவை.
- Claim Review : பூரி ஜகந்நாதர் ஆலயத்திலிருந்து சாலிகிராம் வெளியே எடுக்கப்பட்டுள்ளதாக கூறும் ஒரு இடுகை வாட்ஸ்அப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதை எங்களால் காண முடிந்தது. இது பூமியில் பெருந்நோய்த்தொற்று ஏற்படும்போதெல்லாம் வெளியே எடுக்கப்படுகிறது என்றும், கடைசியாக இது 1920 ஆம் ஆண்டில் வெளியே எடுக்கப்பட்டது என்றும், இதனைக் காண்பது மிகவும் அரிதானது என்றும் அந்த இடுகையில் கூறப்பட்டுள்ளது.
- Claimed By : பேஸ்புக் பக்கம்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.