இந்த வைரல் பதிவு தவறானது. இதுபோன்ற எந்த சேவையும் இந்தூர் காவல்துறையினர் தொடங்கப்படவில்லை.
விஸ்வாஸ் செய்தி (புது தில்லி). இந்தூர் காவல்துறை பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஒரு பதிவு கூறுகிறது. இதில், எந்தவொரு பெண்ணும் தனது வீட்டிற்குச் செல்ல காவல்துறை உதவி எண்ணை அழைக்கலாம் என்றும், அதன்படி காவல்துறையினர் தங்கள் வாகனத்தில் அந்தப் பெண்ணை பாதுகாப்பாக அவளது வீட்டிற்கு சென்று இறக்கிவிடுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து விஸ்வாஸ் செய்தி விசாரித்ததில், இந்த வைரல் பதிவு தவறானது என்பது கண்டறியப்பட்டது. இந்தூர் காவல்துறையினர் இது போன்ற எந்தத் திட்டத்தையும் தொடங்கவில்லை.
கூற்று
பேஸ்புக் பயனர் ஷைலேந்திர ஜெயின் 12 மார்ச் அன்று ஒரு பதிவினை பகிர்ந்து, அதில், ‘இந்தூர் காவல்துறை நிர்வாகத்தின் பெண்களுக்கான தனித்துவமான முயற்சி.. இந்தூர் காவல்துறை பெண்களுக்கான இலவச பயண திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி தனியாக இருக்கும் எந்தவொரு பெண்ணும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வாகனம் எதுவும் கிடைக்கவில்லை என்றால், காவல்துறை உதவி எண்ணை (1091 மற்றும் 7837018555) அழைத்து, தனக்கு வாகனம் வேண்டி கோரிக்கை வைக்கலாம். இந்த வசதி 24 × 7 உண்டு. அவரது கோரிக்கையைத் ஏற்று, கட்டுப்பாட்டு அறை வாகனம் அல்லது அருகிலுள்ள PCR வாகனம் / SHO வாகனம், அவளைப் பாதுகாப்பாக அவள் வேண்டுமிடத்தில் இறக்கிவிடும். இந்தச் சேவைக்கு கட்டணம் எதுவும் கிடையாது. இந்தச் செய்தியை மேலும் பலருக்கு, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் மற்றும் அறிமுகமானவர்களுக்கு பகிருங்கள். செய்திகளைப் பாருங்கள்,” என்று எழுதியுள்ளார். இந்த பேஸ்புக் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இது குறித்து விசாரிக்க, நாங்கள் இந்தூர் காவல்துறையின் எண்ணாக கூறப்பட்டிருந்த 7837018555 என்ற மொபைல் எண்ணிற்கு அழைத்தோம். இந்த எண்ணை லூதியானாவின் உதவி எண் என்று அழைப்பைப் எடுத்தவர் கூறினார்.
கூகுள் தேடலில் 7837018555 என்ற மொபைல் எண்ணைத் தேடினோம். அவ்வாறு தேடியதில், டிசம்பர் 1, 2019 அன்று இந்துஸ்தான் டைம்ஸில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையை நாங்கள் கண்டறிந்தோம். அந்த அறிக்கையில், லூதியானாவில் பெண்களுக்கான நைட் பிக் அண்ட் டிராப் சேவையை காவல்துறையினர் தொடங்கினர் என்று கூறப்பட்டிருந்தது. இதன்மூலம் இந்த எண் லூதியானாவிற்கு உரியது என்பதும், இதற்கும் இந்தூருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் நமக்குத் தெளிவாக தெரியவந்தது.
நாங்கள் இந்தூர் காவல்துறையினரை 7049124445 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அவர்கள், இந்த வைரல் பதிவு தவறானது என்று கூறினர்.
இது குறித்த உண்மை சரிபார்ப்பிற்காக நாங்கள் ASP (தலைமையகம்) மனிஷா பதக் சோனியை தொடர்பு கொண்டு பேசினோம்.நம்மிடம் பேசிய அவர், இந்தத் திட்டம் லூதியானாவுக்கானது என்றும், தற்போது இதுபோன்ற எந்தத் திட்டமும் இந்தூரில் தொடங்கப்படவில்லை என்றும் கூறினார்.
இந்த இடுகையைப் பகிர்ந்த பேஸ்புக் பயனர் ஷைலேந்திர ஜெயினின் சுயவிவரத்தை நாங்கள் ஆராய்ந்ததில், அவர் மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்தவர் என்பதையும், அவரது கணக்கு ஜூலை 2013 முதல் செயலில் இருப்பதும் நமக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. இதுபோன்ற எந்த சேவையும் இந்தூர் காவல்துறையினர் தொடங்கப்படவில்லை.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923